இன்றைய ராசி பலன் 10-02-2021

Rasi Palan

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான நாளாக அமையப்போகின்றது. புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். சொந்தத் தொழிலில் நல்ல லாபம் உண்டு. மன நிம்மதியோடு இந்த நாள் செல்லும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையாக இருக்க வேண்டும். தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபடவேண்டாம். உறவுகளுக்கு இடையே பிரச்சனை வந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து செல்லவேண்டும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை அனுசரித்துச் செல்லுங்கள். வியாபாரிகள் தங்களுடைய முதலீட்டில் கவனத்துடன் இருக்க வேண்டும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தெளிவுபெறும் நாளாக இருக்கப் போகின்றது. தேவையற்ற மன குழப்பத்தில் இருந்து வெளி வந்து விடுவீர்கள். உற்சாகத்தோடு செயல்பட்டு வேலையில் நல்ல பெயரை எடுப்பீர்கள். தொழில் சுறுசுறுப்பாக செல்லும். நல்ல லாபம் கிடைக்கும்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாளாக அமையப்போகின்றது. உங்களுக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை புரிந்து நல்ல முடிவுகளை எடுப்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்களுக்கு லாபம் தரக்கூடிய நாள் இது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கப் போகின்றது. திறமையாக செயல்பட்டு, எந்த ஒரு பிரச்சனைக்கும் சரியான முடிவினை எடுத்து விடுவீர்கள். உங்களது பேச்சு, அடுத்தவர்களுக்கு நம்பிக்கை கொடுக்கக்கூடியதாக இருக்கும். அடுத்தவர்களுக்கு முன்னோடியாக நீங்கள் செயல்பட்டு நல்ல வழியை காட்டுவீர்கள்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையாக செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த ஒரு விஷயத்திலும் முடிவினை எடுக்க வேண்டாம். எந்த முடிவாக இருந்தாலும் நாளை தள்ளிப் போடுங்கள். தேவையற்ற பிரச்சினைகளிலிருந்து கொஞ்சம் தள்ளியே நில்லுங்கள். பெண்கள் நிதானத்தோடு இருப்பது நன்மை தரும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெற்றி தரும் நாளாக அமையப் போகின்றது. நீண்ட நாட்களாக நிறைவேறாத ஆசை நிறைவேறும். எல்லா விஷயத்திலும் உங்களை சுற்றி இருப்பவர்கள், உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். நீங்கள் தவறு செய்தாலும், நீங்கள் செய்தது சரி என்று சொல்லுமளவிற்கு இந்த நாள் அமையப் போகின்றது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குழப்பமான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் செய்யும் வேலை சரியான வேலையாக இருந்தாலும், அந்த வேலையை செய்யலாமா வேண்டாமா என்ற எண்ணம் மனதில் எழுந்துகொண்டே இருக்கும். தேவையற்ற எண்ணத்தை தவிர்த்து விடுங்கள். குலதெய்வத்தை வேண்டிக் கொண்டு வேலையை தொடங்குங்கள். நல்லதே நடக்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆதரவான நாளாக அமையப்போகின்றது. எக்குத்தப்பாக நீங்கள் பிரச்சனையில் மாட்டிக் கொண்டாலும், உங்களை காப்பாற்ற உங்கள் நண்பர்கள் உறவினர்கள் வந்து முன் நிற்பார்கள். சுற்றத்தின் அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் இல்லாத நாளாக இருக்கப் போகின்றது. பிரச்சினைகள் வருவதும் போவதும் இயல்புதான். மனக் கவலை இல்லாமல் சந்தோஷத்தை அனுபவிக்க கூடிய தருணங்கள் உங்களுக்கு வரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மனதில் இனம் புரியாத அமைதியான சூழ்நிலையும் நிலவும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசி காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக இருந்து வந்த ஒரு கடனை இன்றைக்கு அடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். புதிய முயற்சிகள் வெற்றி அடையும். பெண்களுக்கு மன தைரியம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கை உண்டு.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும். தடைக் கற்கள் வந்து கொண்டே இருந்தாலும், முட்டிமோதி உங்களது வேலையை நீங்கள் முடிக்க பார்ப்பீர்கள். சுறுசுறுப்போடு செயல்பட்டு, எதிர்ப்புகளை தகர்த்தெறியும் அளவிற்கு மன தைரியமும் வரும். முன்கோபத்தை குறைத்துக் கொண்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம் உங்களுக்கே.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்