இன்றைய ராசி பலன் – 10-3-2021

rasi palan - 10-3-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சில் நிதானம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பதன் மூலம் மன அமைதி பெறலாம். கணவன் மனைவியிடையே ஒற்றுமை குறைவு ஏற்படும். சுயதொழிலில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பம் பற்றிய கவலைகள் இருந்தாலும் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்குவதற்கு வழிகள் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு சமுதாயத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி இறக்கம் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கவனம் தேவை.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மேற்கொள்ளும் காரியங்களுக்கு வெற்றி கிடைக்கும். நண்பர்களின் உதவிகள் கிடைத்து அனுகூலமான பலன்களை பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருப்பதால் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரித்து காணப்படுவதால் உடல் சோர்வு ஏற்படும்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான தடைகள் நீங்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை மேலோங்கி காணப்படும். பிள்ளைகள் வெளியே புதிய செய்திகள் கிடைக்கப் பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகளில் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றை அனுகூலமான பலன்கள் உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதகமான பலன்கள் என்பதால் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடிவரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன குறைவு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய நட்பு வட்டாரம் மேலும் விரிவடையும். கணவன் மனைவியிடையே இருந்த உறவு சிக்கல்கள் நீங்கும். ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் நன்மைகள் பிறக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவியிடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உறவினர்களின் மூலம் நன்மைகள் உண்டாகும். நீண்ட நாள் நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் குழப்பம் ஏற்பட்டு நீங்க கூடிய வாய்ப்புகள் உண்டு. ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறும். பெண்கள் அனுகூலமான பலன்களை பெறுவதற்கு இறை வழிபாடு மேற்கொள்வது நல்லது. கணவன் மனைவி ஒற்றுமையில் திருஷ்டிகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு என்பதால் எச்சரிக்கை தேவை. சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தந்தை வழியில் வந்த பிரச்சனைகள் நீங்கும். மனதில் வீண் குழப்பம் ஏற்பட்டு மறைவதற்கு வாய்ப்புகள் உண்டு. எந்த ஒரு விஷயத்திலும் ஒருமுறைக்கு இருமுறை ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை மேலோங்கும் விட்டுக்கொடுத்து செல்வது நலமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்துவந்த பிரச்சினைகள் குறையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிள்ளைகள் மூலம் மனம் மகிழும் படியான நிகழ்ச்சிகள் நடைபெறும். சகோதர சகோதரிகளுக்கு இடையே இருந்த ஒற்றுமை குறைவு நீங்கும். உங்களை நீங்களே புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் ரீதியான முன்னேற்றம் எதிர்பார்த்த அளவிற்கு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். புதிய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக் கொள்வது நல்லது.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களை கண்டு மற்றவர்கள் பொறாமை படும் வகையில் நடந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களுடைய கனிவான பேச்சால் மற்றவர்களை எளிதாக ஈர்த்து விடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் தன்னம்பிக்கை மற்றும் தைரியம் பிறக்கும் இனிய நாளாக இருக்கும். எதிர் வரும் பிரச்சினைகளை எளிதாக சமாளித்து விடுவீர்கள். வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயத்தில் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் போதும் போதும் என்கிற அளவிற்கு பணவரவு சிறப்பாக அமையும். பொருளாதாரத்தில் ஏற்றமான சூழ்நிலை இருப்பதால் வீட்டு தேவைகளை பூர்த்தி செய்து விடுவீர்கள். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குழப்பங்கள் நீங்கி தெளிவான சிந்தனை பிறக்கும். எலும்பு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஆரோக்யத்தில் கவனம் செல்வது நல்லது.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் பிறக்கும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்படும். ஒருசிலருக்கு புதிய பொருள் சேர்க்கை உண்டாகும். வழக்கு தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அனுகூலமான பலன்கள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை இருக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -