இன்றைய ராசி பலன் – 10-05-2021

rasi palan - 10-5-21
- Advertisement -

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதற்கு எதிர் மாறாக நடப்பது வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். மனதில் தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் நன் மதிப்பை பெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைப்பளு குறையக்கூடும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது உத்தமம்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் இருக்கும் குழப்பங்கள் முடிவுக்கு வரும். வியாபார ரீதியான வளர்ச்சி சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்தில் இருக்கும் நபர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் காலதாமதம் ஏற்படும். வழக்குகளில் வெற்றி காண்பீர்கள்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைக்கும் சில விஷயங்கள் அப்படியே நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்க்கும் பணவரவுகளில் இடையூறுகள் ஏற்படலாம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடன் பிரச்சினைகள் தீரும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சுபமாக முடியும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய ராசிக்கு நல்லதே நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் நீண்ட நெடிய பயணங்களை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும். அரசு வழி காரியங்கள் அனுகூலமான பலன்களை கொடுக்கும். இறை சிந்தனை மேலோங்கி காணப்படும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்கும் நிகழ்வுகள் நடைபெறுவது தடை தாமதங்கள் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஓய்வு கிடைக்கும். குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமையை சீர்குலைக்க சிலர் முயற்சி செய்வார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதி இருக்கும்.

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இதுவரை உங்களை புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய பலம் அறிந்து செயல்படுவார்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். புதிய முயற்சிகள் கைகொடுக்கும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் அனுகூலமான பலன்களைக் காண இருக்கிறீர்கள். உங்களுடைய விடா முயற்சிக்கு ஏற்ப நல்ல பலன்கள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வீட்டை தேடி வரும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் திறமைக்கு உரிய பலன்கள் கிடைக்க பெறும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உடனிருப்பவர்களே உபத்திரவமாக இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியிட பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றத்தில் தொடர்ந்து மந்த நிலை நீடிக்கும். கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் மேலும் மேலும் என்பதால் கூடுமானவரை விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையில்லாத பிரச்சனைகளை தலையில் போட்டுக் கொள்ளாமல் தவிர்ப்பது உத்தமம். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வதற்கும் போல முன்னேற்றம் காணலாம். குடும்பத்தினர் ஒத்துழைப்பு உங்களுக்கு சிறப்பாக அமையும். பழைய நண்பர் ஒருவரை சந்திக்கும் வாய்ப்பு உண்டு.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்திலும் குழப்பங்கள் நீங்கி மனதில் உற்சாகம் பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரவு சீராக இருக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும்.

- Advertisement -