இன்றைய ராசிபலன் – 11 பிப்ரவரி 2022

today rasi palan 11/02/2022
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிர்ஷ்டம் தரும் நாளாக இருக்கிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் வலுவாகும். உங்கள் முகத்தில் புதுப்பொலிவு தென்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் திடீர் லாபம் காண கூடிய யோகம் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்கள் குறித்த நேரத்தில் வேலையை முடிப்பீர்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அதிரடி மாற்றங்கள் நிகழும் இனிய நாளாக அமைய இருக்கிறது. ஒன்றுக்கு பல வேலைகளை இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் பேச்சில் கவனம் செலுத்துவது நல்லது. நீங்கள் ஒன்று சொல்ல அது வேறொன்றாக புரிந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது. எந்த ஒரு விஷயத்திலும் கூடுதல் அக்கறையுடன் இருப்பது நல்லது. சுபகாரியத் தடைகள் அகலும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தொழில் ரீதியாக எடுக்கக்கூடிய முக்கிய முடிவுகளில் சற்று சிந்தித்து செயலாற்றுவது நல்லது. உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது நடக்க கால தாமதம் ஆகலாம் எனவே பொறுமை தேவை.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலைகள் மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு அனுகூல பலன் உண்டு. உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்துக் கொள்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் காணக் கூடிய நல்ல நாளாக அமைய இருப்பதால் வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி அடையும். உற்றார், உறவினர்களின் வருகை மகிழ்ச்சி தரும் வகையில் இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அனாவசிய செலவுகளை குறைத்துக் கொள்வது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் மேலும் வலுவாக கூடும் என்பதால் விட்டு கொடுத்து செல்வது நல்லது.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறைமுக எதிர்ப்புகள் விலகி நன்மைகள் நடக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தேவையற்ற அலைச்சல் ஏற்பட்டாலும் சுறுசுறுப்புடன் காணப்படுவீர்கள். உங்கள் வேலையில் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகளை பற்றி வெளியில் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு தொழில் சார்ந்த நிபுணர்களின் ஆலோசனை தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவி இடையே இருக்கும் பனிப்போர் நீங்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் திடீர் பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் உண்டு. வாகன ரீதியான வீண் விரயங்களை சந்திப்பீர்கள். பணம் பல வழிகளிலும் வந்தாலும் அதற்குரிய செலவுகளும் சமமாக வந்து சேரும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பல வகைகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேற கூடிய இனிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகளை எடுக்கும் சாதகமான நாளாக அமைய இருக்கிறது. தொலை தூர இடங்களில் இருந்து நல்ல செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நீண்டநாள் நடக்குமா? என்று நினைத்த காரியம் ஒன்று நடக்க இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அதிகம் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதை தவிர்க்கவும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். மற்றவர்கள் உங்களை பாராட்டும்படியான நல்ல நாளாக இருக்கும். பிள்ளைகளின் எதிர்காலம் குறித்த விஷயங்களை விவாதிப்பது உத்தமம்.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மாறுபட்ட அணுகுமுறை மற்றவர்களை ஆச்சரியப்பட வைக்கும். உங்கள் மனதில் ஏற்பட்டுள்ள தெளிவு குடும்பத்தில் மகிழ்ச்சியை உண்டாக்கும். கணவன் மனைவிக்கிடையே திடீர் திருப்பங்கள் நடக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு புதிய நட்பு வளரும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கும்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைக்கும். கணவன் மனைவி இடையே பிரச்சனைகளை பெரிதாக்காமல் ஆற போடுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்கள் செல்வாக்கை மேலும் உயர்த்திக் கொள்வீர்கள். வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சூழ்நிலை அறிந்து செயல்படுவது நல்லது.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அடிப்படை தேவையை பூர்த்தி செய்யக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தகுந்த இடத்தில் இருந்து, தகுந்த சமயத்தில் பணவரவு இருக்கும். புதிய ஒப்பந்தங்களில் பங்கேற்கும் யோகம் உண்டு. பெரிய தொகையை ஈடுபடுத்தும் பொழுது ஆலோசனை மேற்கொள்வது உசிதமானது. பிள்ளைகளின் கனவுகளை நனவாக்க முயற்சி செய்வீர்கள். பழைய கடன் பாக்கிகள் வசூலாகும். முன்பின் தெரியாதவர்களின் அறிமுகம் தவிர்ப்பது உத்தமம்.

- Advertisement -