இன்றைய ராசிபலன் – 11 பிப்ரவரி 2024

Rasi-palan-new11
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். உங்களிடம் ஒரு பொறுப்பை ஒப்படைத்தால் அதை எந்த அளவுக்கு கவனத்தோடு செய்கிறீர்களோ, அந்த அளவுக்கு வெற்றி காண்பீர்கள். எந்த அளவுக்கு கவனக் குறைவாக செயல்படுகிறீர்களோ, அந்த அளவுக்கு பிரச்சனைகளை எதிர் கொள்ள வேண்டிய சூழ்நிலை உண்டாகும். இன்று வெற்றி தோல்வி உங்கள் கையில் தான் இருக்குது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று நிம்மதியாக ஓய்வு எடுக்க வேண்டும் என்று நிறைய பிளான் செஞ்சு வச்சிருப்பீங்க. ஆனால் எதிர்பாராத விருந்தினர்களின் வருகை, உங்களுடைய தூக்கத்தை கெடுத்து விடும். குடும்பத்தோடு வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலை உண்டாகும். சந்தோஷத்துக்கு எந்த குறைவும் இருக்காது. ஆனால் கொஞ்சம் சுபச் செலவுகள் ஏற்படும். இன்றைய நாள் தூக்கம் கெட்டதை தவிர வேறு எந்த கெடுதலும் உங்களுக்கு நடக்காது. என்ஜாய் பண்ணுங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அவசரம் இருக்கக் கூடாது. எல்லா விஷயத்திலும் நிதானம் இருக்க வேண்டும். பெரியவர்கள் சொல்பேச்சு கேட்டு நடக்கவும். சொந்த தொழிலில் கண்மூடித்தனமாக யாரையும் நம்பாதீங்க. பணம் விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்கவும். ஜாமீன் கையெழுத்து போடக்கூடாது. யாரை நம்பியும் கடன் கொடுக்கக் கூடாது. யாரிடமிருந்தும் கடன் வாங்க கூடாது. கொஞ்சம் பார்த்து நடந்துக்கோங்க.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று மனசுக்கு பிடிச்ச வேலையை செய்வீங்க. உங்களுக்கு பிடித்ததை சமைத்து சாப்பிடுவீர்கள். மனநிறைவான நாளாக இருக்கும். விடுமுறை நாள் என்பதால் இன்று வீட்டு வேலைகளை எல்லாம் கவனிக்க கூடிய சூழல் உண்டாகும். வீட்டை பராமரிப்பது துணிகளை துவைப்பது அயன் செய்வது போன்ற வேலைகளை எல்லாம் சீக்கிரம் முடித்துவிட்டு மாலை நேரம் சந்தோஷமா குடும்பத்தோடு வெளியில் சென்று நேரத்தை கழிப்பீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் ஆசை நிறைவேறும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. நண்பர்களால் நல்லது நடக்கும். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கூடுதல் கவனம் இருக்கட்டும். பெண்கள் சமையலறையில் கூர்மையான ஆயுதங்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நிலைமை உயர்ந்து காணப்படும். எதிர்பாராத பண வரவு இருக்கும். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத கடன் இன்று வசூலாக வாய்ப்பு உள்ளது. உங்களுக்கு யாராவது பணம் கொடுக்க வேண்டியதாக இருந்தால், இன்று அவர்களிடம் வசூல் செய்ய சில முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய புதிய யுக்திகளை அறிமுகப்படுத்தி அசத்துங்க. சின்ன சின்ன வியாபாரிகளுக்கும் இன்று வியாபாரம் நன்றாக நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகள் நடக்காது. சின்ன சின்ன ஏமாற்றங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. உடனே உடைந்து விடாதீர்கள். மனதை உறுதியோடு வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட முடியும். இன்று தோல்வி அடைந்ததால் வாழ்க்கையே முடிய போவது கிடையாது. ஆகவே கஷ்டங்களைக் கண்டு பயப்படாமல் இருக்க வேண்டிய நாள் இது.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சலான நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேசுவீர்கள். யாரைக் கண்டும் பயப்பட மாட்டீர்கள். உங்கள் எதிரில் நிற்பவர்கள் யார் என்று கூட யோசிக்க மாட்டிங்க. மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி விடுவார்கள். இதனால் புதிய எதிரிகள் உருவாகவும் வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. இந்த தைரியம் உங்களுக்கு நன்மையை தான் கொடுக்கும் பயப்படாதீங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று மனதிருப்தியோடு எல்லா வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். ஆனாலும் மனதில் ஒரு சின்ன சந்தோஷம் இருக்கும். குடும்பத்தோடு ஒன்றாக சேர்ந்து இந்த நாள் சந்தோஷமாக நகர்ந்து செல்லும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் வைத்துக் கொள்ளுங்கள். சகோதர சகோதரர்கள் உறவு பலப்படும். நீண்ட நாள் இழுபரியாக இருந்த கோர்ட் கேஸ் வழக்குகள் ஒரு முடிவுக்கு வர உண்டான வழிகளை தேடி கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளது.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று நியாயமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பீர்கள். இதனால் அடுத்தவர்கள் கண்ணுக்கு நீங்க பிரச்சனையா தெரிவியுங்கள். புதிய எதிரிகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது. நாம் நல்லவர்களாக இருக்கலாம். ஆனால் நம்மைப் போலவே அடுத்தவர்களும் நேர்மையாக இருக்க வேண்டும் என்று நினைத்தால் அது கொஞ்சம் கஷ்டம். ஆகவே வேலை செய்யும் இடத்திலும் தொழிலிலும் அடுத்தவர்களை கொஞ்சம் அனுசரித்து செல்லுங்கள். எதிரிகளை உருவாக்கி கொள்ளாதீர்கள்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று இனம் புரியாத தவிப்பு இருக்கும். ஏதோ ஒரு மன அழுத்தம் காரணமாக வேலைகளை சரியாக செய்ய முடியாமல் சிக்கி தவிப்பீர்கள். இதனால் வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். சொந்த தொழிலில் கவனக்குறைவால் சில வேலைகளை தவறாக செய்ய வாய்ப்புகள் உள்ளது. ஆகவே கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். மாணவர்கள் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கவனக்குறைவு சில இழப்புகளை உண்டு பண்ண வாய்ப்பு உள்ளது, ஜாக்கிரதை.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு இருக்காது. கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். விடுமுறை நாளாகவே இருந்தாலும் இன்று உங்களுக்கு வேலை பளு அதிகமாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. சொந்த தொழிலில் இருப்பவர்கள் புதிய முதலீடு செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் ஜாக்கிரதையாக இருக்கவும். நிதி நிலைமை சீராகவே இருந்தாலும் செலவை குறைக்கவும். கண்மூடித்தனமாக மூன்றாவது நபர் பேச்சை நம்பாதீங்க.

- Advertisement -