இன்றைய ராசிபலன் – 11 ஏப்ரல் 2023

apr 11 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் எல்லாம் நடக்கப் போகிறது. புதிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றிகள் குவியும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு இழந்த ஒன்று மீண்டும் கிடைக்கும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய வாய்ப்புகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. வேலை இல்லாதவர்களுக்கு நினைத்தது நடக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் உண்டாகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கடமையிலிருந்து பின் வாங்க கூடாது. கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பேச்சு வார்த்தைகளில் கவனமாக இருப்பது நல்லது. சுய தொழிலில் எதிர்பாராத லாபங்கள் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சொந்த முயற்சிகள் வெற்றி பெறக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். சுய தொழிலில் நியாபகம் அதிகரிக்க புதிய விஷயங்களை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு குழப்பம் அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே புதிதாக புரிதல் ஏற்படும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செல்லும் இடங்களில் புகழ் ஓங்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மனதில் பக்தி நிறையும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி உண்டாக கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விடை தெரியாத கேள்விகளுக்கு விடை கிடைக்கக்கூடிய நாளாக இருக்கிறது.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் நிராசையாக வாய்ப்புகள் உண்டு எனவே கவனம் உடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவுகள் வந்து சேரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய மனதில் இனம் புரியாத பயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே இருக்கும் ரகசியங்களை வெளியில் பகிர்ந்து கொள்ள வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன வரவு அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வேலையை கவனமுடன் இருப்பது நல்லது.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உறுதியான மனப்பான்மை இருக்கும். எதையும் சாதிக்கக் கூடிய வல்லமை பிறக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைய அக்கறையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மறதி ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பெருமைப்படும்படியான சூழ்நிலை உருவாகும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சுதவீதம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு அலட்சியம் செய்யாமல் ஆரோக்கியத்தில் பொறுப்புடன் இருப்பது நல்லது. கணவன் மனைவி இடையே இருக்கும் விரிசல் மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அசதி ஏற்பட வாய்ப்பு உண்டு.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணவரத்து அதிகரிக்கும். குடும்ப ஒற்றுமைக்கு விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நன்மை நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் திறமைகளை வெளிக் கொணர்வதற்கான தருணங்கள் அமையும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களை சுற்றி போட்டிகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. எதிலும் சமயோசித புத்தியுடன் செயலாற்றுங்கள். குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்கள் வாகன போக்குவரத்துகளில் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு ஓய்வு தேவை.

- Advertisement -