இன்றைய ராசிபலன் – 11 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் பணியிடங்களில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும். தொழில், வியாபாரங்களில் லாபம் இருக்கும். நீண்ட நாள் இழுபறியான காரியங்கள் வெற்றிகரமாக முடியும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். பண வரவு தாராளமாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய ஆபரணம் வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். தொழில் வியாபாரங்களில் இருந்த தடைகள் விலகும். கலைத்துறையினருக்கு சிறப்பான வாய்ப்புகள் அமையும். பெண்கள் வழியில் தனவரவு இருக்கும். சிலர் வெளியூர் வெளிநாடு பயணங்களை மேற்கொள்வார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. யாருக்கும் பணம் கடனாக கொடுக்கக் கூடாது. பயணங்களின் பொழுது எச்சரிக்கை தேவை. சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத பொருள் விரயங்களும் ஏற்படும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் பிரச்சனைகள் முடிவுக்கு வரும். நண்பர்களால் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள். குடும்பத்தில் இருப்பவர்களின் ஆதரவு இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் மனோ தைரியம் அதிகரிக்கும். காரியங்களில் துணிச்சலாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். திருமண தொடர்பான முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். பொருள் வரவு திருப்திகரமாக இருக்கும். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் இருக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பொருள் வரவு இருக்கும். முயற்சிகளில் தடைகள் ஏற்பட்டாலும் அதைத் தாண்டி வெற்றி காண்பீர்கள். வராத கடன் தொகை வட்டியுடன் வந்து சேரும். உறவினர்களுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி மீண்டும் ஒன்றிணைவார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்கு இன்றைய தினம் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளியூர் பயணங்களால் நன்மைகள் ஏற்படும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். எதிர்பார்த்த நல்ல செய்தி வந்து சேரும்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும். புதிய முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். உறவினர்களின் ஆதரவு இருக்கும். பண வரவு திருப்திகரமாக இருக்கும். சிலர் புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் ஏற்படும். பெரியவர்களின் ஆசிகள் இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் கஷ்டங்களில் இருந்து விடுபடுவீர்கள். எதிலும் சிந்தித்து செயல்பட வேண்டும். மனக்குழப்பங்கள் நீங்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் மனதில் தோன்றும். பெண்களுக்கு மகிழ்ச்சியான தினமாக இருக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு சிறு செலவுகள் ஏற்படும்.

மகரம்:
மகர ராசியினருக்கு மனதில் வீண் கவலைகள் ஏற்படும். எதிர்பார்த்த காரியங்கள் தள்ளிப் போகும். பிறருடன் வீண் வாக்குவாதங்களில் ஈடுபடக்கூடாது. சிலருக்கு எதிர்பாராத சிக்கல்கள் ஏற்படும். தம்பதிகளிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத பணவரவுகளால் சங்கடங்கள் நீங்கும். வீட்டில் இருப்பவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். மகான்களின் ஆசிகளை பெறுவீர்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். பூர்வீக சொத்து விவகாரங்களில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். பணியில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டுகளை பெறுவீர்கள். உறவினர்களால் தனலாபம் ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

- Advertisement -