இன்றைய ராசிபலன் – 11 ஜூன் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பாரா செலவுகள் ஏற்படும். பிறர் உடனான வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். கடந்தகால நினைவுகளால் மனக்கவலை உண்டாகும். பணம் தொடர்பான விடயங்களில் கவனமுடன் இருக்க வேண்டும்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் இருக்கின்ற தடங்கல்கள் நீங்கும். தம்பதிகள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. தொழில், வியாபாரத்தில் சராசரியான நிலையே இருக்கும். பெண்களுக்கு உடல் நல பாதிப்பு ஏற்படக்கூடும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் நினைத்தது அனைத்தும் நிறைவேறும்.. புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் இருக்கும். சிலர் பொது காரியங்களில் ஈடுபட்டு நன்மதிப்பை பெறுவார்கள். குடும்பத்தினரின் ஒத்துழைப்பு முழுமையாக கிடைக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் புதிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். உடலும் மனமும் உற்சாகமாக இருக்கும். கோர்ட் வழக்குகளில் உங்களுக்கு சாதகமான நிலை ஏற்படும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள். கொடுக்கல் – வாங்கல்களில் திருப்திகரமான நிலை இருக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்கு இன்றைய தினம் அனைத்து தேவைகளும் பூர்த்தியாகும். குழந்தைகளால் மகிழ்ச்சி ஏற்படும். விலகிச் சென்ற உறவினர்கள் உங்களை தேடி வருவார்கள். அந்நிய நபர்கள் உங்களுக்கு எதிர்பாராத உதவிகளை செய்வார்கள்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் உடலில் அதீத அசதி இருக்கும். எதிலும் ஈடுபாட்டுடன் செயல்பட முடியாத நிலை இருக்கும். கடன் திருப்ப வசூலாவதில் இழுபறி நிலை நீடிக்கும். தொழில், வியாபாரங்களில் சராசரியான லாபமே கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் நீண்டநாள் எதிர்பார்த்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். தொழில், வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவார்கள். மனைவி வழி உறவினர்களால் எதிர்பாராத லாபம் ஏற்படும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் தொட்டதெல்லாம் துலங்கும். உறவினர்கள் நண்பர்கள் உங்களின் உதவியை நாடுவார்கள். நீண்ட நாள் இழுபறி நிலை இருந்த விடயங்களில் வ்வெற்றி கிடைக்கும். பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு செல்வாக்கு உண்டாகும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் பணியிட உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் கிடைக்கும். சிலர் வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்களைப் பெறுவார்கள். நண்பர்கள் வழியில் சிலருக்கு பண வரவு ஏற்படும். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் உயர்வுகள் ஏற்படும் சிலருக்கு வெளியூர் பயணங்களால் லாபம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வீட்டில் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தந்தை வழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும். கலைஞர்களுக்கு வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும். உறவினர்கள் முன்பு உங்கள் அந்தஸ்து உயரும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளில் இருந்த தடைகள் நீங்கும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். சிலர் புதிய ஆடை ஆபரணங்களை வாங்குவார்கள். நண்பர்களால் பொருள் வரவு இருக்கும். வீட்டில் பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும்.

- Advertisement -