இன்றைய ராசிபலன் – 11 செப்டம்பர் 2023

daily-rasi-palan11
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு வாரத்தில் தொடக்க நாளான இன்று வெற்றி நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலைகளை சுறுசுறுப்பாக முடிப்பீர்கள். சொன்ன வேலையையும் தாண்டி நல்ல பெயர் எடுக்க கடின உழைப்பை முதலீட்டாக போடுவீர்கள். புதிய முடிவுகளை எடுக்கலாம். புதிய முயற்சிகள் வெற்றியையும் கொடுக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சாதகமான நல்ல பலன்கள் உண்டு. புதிய வேலை தேடலாம். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷன் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. உங்களை சுற்றி இருப்பவர்கள், நீங்கள் செய்யும் வேலையை பார்த்து பாராட்டு மழையை பொழிய போகிறார்கள். திறமை வெளிப்படக்கூடிய இந்த நாளில் நிறைய நல்லது நடக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் பொறுமை தேவை. நிதானமாக எல்லா வேலையும் செய்யுங்கள்.‌ எதிலும் அவசரப்பட வேண்டாம். முன்கோபம் பட வேண்டாம். அடுத்தவர்களை எடுத்துறிந்து பேச வேண்டாம். பொறாமை கண்ணோட்டத்துடன் அடுத்தவர்கள் செய்வதை, நான் செய்தே ஆவேன் என்று அடம் பிடிக்காதீங்க. உங்களுக்கு எது செட் ஆகுமோ, உங்களுக்கு எது கிடைக்குதோ அதை வைத்து திருப்தி அடைந்து கொள்வது நன்மையை தரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன குழப்பம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலையை செய்தாலும் அதில் ஒரு மன நிறைவு இருக்காது. சின்ன சின்ன பின்னடைவுகள் இருக்கத்தான் செய்யும். கவலை வேண்டாம். எல்லாம் இந்த நாள் இறுதியில் சரியாகிவிடும். மனதை அமைதி படுத்த இஷ்ட தெய்வத்தின் நாமத்தை மந்திரமாக சொல்லுங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சோகம் நிறைந்த நாளாக இருக்கும். ஆனால் எந்த கஷ்டமுமே இருக்காது. கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு எதையோ யோசிப்பீங்க. வேலையில் கவனம் இருக்காது. ஈடுபாடு இருக்காது. திட்டு வாங்க போறீங்க. அதனால, மனதை ஒருநிலைப்படுத்தி வேலையில் கவனம் செலுத்துங்கள். தேவையில்லாமல் நண்பர்கள் டீ குடிக்க அரட்டை அடிக்க கூப்பிட்டா போகாதீங்க.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக அமையப் போகின்றது. நீங்கள் செய்யும் வேலையை பார்த்து மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். அதற்கு தகுந்த சன்மானமும் கிடைக்கும். கணவன் மனைவிக்கிடையே சண்டை வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வாழ்க்கை துணையிடம் சவால் விடாதீங்க. சாரி சொல்லிடுங்க சரியாயிடும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை மட்டுமே நடக்கக்கூடிய நாளாக அமையும். எல்லா நல்லதும் நிறைய லாபத்தை கொடுக்கும். வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லவும். செல்போன் ஓட்டிக்கொண்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடந்தாலும், கெட்டது நடந்தாலும் அது உங்களுடைய நன்மைக்காக மட்டும் தான். எதை நினைத்தும் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கக் கூடாது. போனது போகட்டும் என்று விட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்கத் தொடங்கி விட வேண்டும். பழசையே பேசிக்கொண்டு இருந்தால் துக்கம் தான் மிஞ்சும். நேரம் தான் வீணாகும். நல்ல நண்பர்களும் நல்ல உறவுகளும் சொல்லுவதை கேட்டு மனதை அமைதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்பவும் மனமகிழ்ச்சியான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக பிரிந்த ஒருவர் உங்களை சந்திப்பார்கள். அவர்கள் யாராக வேண்டும் என்றாலும் இருக்கலாம். நண்பர்கள் உறவினர்கள் அல்லது மனசுக்கு பிடிச்சவங்க இந்த பட்டியலில் உங்கள் மனதை சந்தோஷப்படுத்தும் நெகிழ்ச்சியான ஒரு சம்பவம் நடக்க வாய்ப்பு உள்ளது. இன்ப அதிர்ச்சி இதன் மூலமாக உங்களுக்கு இன்னைக்கு வரப்போகுது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன விஷயத்தில் தோல்வி அடைந்தாலும் திரும்பவும் முயற்சி செய்து அதில் வெற்றியை அடைந்து விடுவீர்கள். உங்களுடைய திறமையை நீங்களே பார்க்க போறீங்க.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிறைவான அனுகூலம் நிறைந்த நாளாக அமையப் போகின்றது. குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்களை மீண்டும் பேச தொடங்கி விடுவீர்கள். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். சந்தோஷத்திற்கு குறைவில்லை. வேலை தொழில் எல்லாமே முன்னேற்ற பாதையில் செல்லும்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். செலவு நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் வரக்கூடிய நாளாக இருக்கும். ஆனால் செலவை குறைக்க வேண்டும். மாத இறுதியில் வரும் கஷ்டத்திற்கு வீண் செலவு தான் காரணம் என்பதை மனதில் வச்சிக்கோங்க. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்க. ஹோட்டலில் வெளியிடங்களில் சாப்பிடுவதை தவிர்த்துக் கொள்ளவும்.

- Advertisement -