இன்றைய ராசிபலன் – 11 நவம்பர் 2022

today rasipalan nov 11 2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரும் அமைப்பாக இருக்கிறது நீங்கள் தொட்டதெல்லாம் ஜெயமாகும். கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு குறுக்கு வழியில் ஈடுபட்டு அவதிப்பட கூடிய அமைப்பாக இருக்கிறது எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறதி வரலாம்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிறைவான நல்ல அமைப்பாக இருக்கிறது. உங்கள் குழப்பங்கள் தீர்ந்து மனம் நிறையும் படியான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்து வந்த மனக்கசப்புகள் மாறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்மறை எண்ணங்கள் மேலோங்கி காணப்படும் எனவே சுயமாக சிந்திப்பது நல்லது.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் விடா முயற்சி விஸ்வரூபம் வெற்றியை கொடுக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்ப உறவினர்களுக்கு இடையே இருந்து வந்த மனஸ்தாபங்கள் தீர்ந்து ஒற்றுமை வலுப்பெறும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு ஏற்ற உயர்வு உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முன் கோபம் வரலாம் சாந்தமாக இருப்பது நல்லது.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற வார்த்தைகள் மூலம் தேவையற்ற பிரச்சனைகள் வரலாம் எனவே முக்கிய இடங்களில் பேசாமல் மௌனத்துடன் கடப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சுற்றுவட்டாரத்தில் நட்பு வட்டம் விரிவடையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பக்தி பெருக்கக் கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. இதுவரை இல்லாத உற்சாகம் உங்களிடம் தொற்றிக் கொள்ளப் போகிறது. கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் கூடும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய சிந்தனைகள் உதிக்கும் இனிய தருணங்கள் அமையும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்ப்புகள் வலுவாகும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிறைவான நல்ல நாளாக இருக்கப் போகிறது. புதிய சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் எதிலும் ஆர்வத்துடன் செயல்படக்கூடிய உற்சாகம் தரும் அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நல்ல செய்தி ஒன்று காத்திருக்கிறது.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதியுடன் இருக்க வேண்டிய நன்மை தரும் நாளாக இருக்கப் போகிறது. எதிலும் படபடப்புடன் இல்லாமல் நிதானத்துடன் ஈடுபடுங்கள். குடும்பத்தில் ஒற்றுமைக்கு குறைவிருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சோர்வு காணப்படும் எனவே தேவையான ஓய்வு எடுப்பது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சினம் கொள்ளக்கூடிய சந்தர்ப்பங்கள் உருவாகும் எனவே கவனமுடன் இருப்பது நல்லது. உங்களை சுற்றி இருப்பவர்களே உங்களை தூண்டிவிட்டு வேடிக்கை பார்ப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமயோசித புத்தியுடன் செயல்பட்டு அனுகூல பலன் பெற வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணிச்சுமை கூடும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஆதாயம் காணக்கூடிய இனிய அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். தகுந்த சமயத்தில் நண்பர்களின் உதவிக்கரம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் அதனை விரிவுபடுத்தும் எண்ணத்தில் இருப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் திட்டமிடாமல் எந்த ஒரு புதிய விஷயத்திலும் ஈடுபட வேண்டாம்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பெருமை உண்டாகக்கூடிய இனிய நாளாக இருக்கப் போகிறது. உங்களை புரிந்து கொள்ளாத குடும்பத்தார்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்வார்கள். கணவன் மனைவி இடையே நெருக்கம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களிடம் பரிவு காட்டக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் சலுகைகளை பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் அக்கறை கொள்ளுங்கள்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சாந்தமுடன் இருக்கக் கூடிய அமைப்பாக இருக்கிறது. எடுத்தவங்க கதை தோம் என்று எதையும் முடிவெடுக்காமல் நின்று நிதானமாக யோசித்து முடிவு எடுங்கள். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்ப்புகள் பூர்த்தி அடைவதில் காலதாமதம் ஏற்படலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சிந்தனையில் சலனம் ஏற்படலாம்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் இன்பம் காணக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய பலன்கள் கிடைக்க சற்று காலதாமதம் ஆகலாம். பொறுமையை கைவிட வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேலதிகாரிகள் மூலம் சில சிக்கல்கள் வரலாம் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

- Advertisement -