இன்றைய ராசி பலன் – 11-2-2021

rasi palan - 11-2-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் நல்ல பலனளிக்கும். ஆரோக்கிய ரீதியான பாதிப்புகள் படிப்படியாக குறையும். தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு நல்ல முன்னேற்றமும் இருக்கும். கணவன் மனைவி பிரச்சனை தீர ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. சுயதொழில் செய்பவர்களுக்கு லாபம் அதிகம் இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பொருளாதார ரீதியான பிரச்சினைகளை சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் புதிய முயற்சிகளுக்கு அங்கீகாரம் கிடைக்க போராடிக் கொண்டிருப்பார்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்காவிட்டாலும் சுமுகமான சூழ்நிலை நிலவும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் சாதக பலன்களை கொடுக்கும். ஒருசிலருக்கு புதிய பொருட்கள் வாங்கும் யோகம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு இழுபறியில் இருந்த நிலுவை தொகைகள் வசூலாகும். கணவன் மனைவி இடையே இருக்கும் சண்டைகள் நீங்க பொறுமையை கையாள்வது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்டநாள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த சில விஷயங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்க பெரும். தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு இலாபத்தை காணலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் நிதானத்தை கையாள்வது நல்லது. எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எந்த வேலையையும் செய்வதை தவிர்ப்பது உத்தமம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பேச்சில் கவனம் தேவை. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அதிக லாபம் காணலாம்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் சுபகாரிய முயற்சிகள் தடையின்றி நடக்கும். மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் நற் செய்தி ஒன்று கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்து செல்வது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் மூலம் அனுகூலமான பலன்களை காணலாம்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை சமாளிக்க போராடுவீர்கள். நண்பர்களின் ஆதரவு கிடைக்க வேண்டிய நேரத்தில் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதக பலன்களை கொடுக்கும். ஒரு சிலருக்கு பூர்வீக சொத்துகளால் அனுகூலமான பலன்களைக் கொடுக்கும். சுய தொழிலில் லாபம் காணலாம்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த அளவிற்கு தனவரவு சிறப்பாக அமையும். பொருளாதார ரீதியான முன்னேற்றம் ஏற்றத்துடன் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் உண்டு தங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உற்சாகம் தரக்கூடிய நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்திலிருப்பவர்களுக்கு எதிர் பார்த்த அளவிற்கு நல்ல ஒரு முன்னேற்றம் காணப்படும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த வேலை அமைய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு உங்களுக்கு இதுவரை மனதில் இருந்த குழப்பங்கள் நீங்கி நல்ல ஒரு தெளிவு பெறக் கூடிய அற்புதமான நாளாக இன்றைய நாள் அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களிடம் இருந்து வந்த கசப்பு நீங்கும். தந்தைவழி உறவினர்கள் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் வரலாம்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான பலன்களை காண முடியும். திருமணம் போன்ற சுப காரிய முயற்சிகளில் காலதாமதம் ஏற்பட்டாலும் வெற்றி உங்களுக்குத்தான். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களுடைய பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் காலதாமதம் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் எச்சரிக்கை தேவை.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. வெளியிடங்களில் செல்பவர்கள் பொதுஉடைமை மீது கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே ஒற்றுமை சிறப்பாக அமையும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -