இன்றைய ராசி பலன் – 11-3-2021

rasi palan - 11-3-21
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமை மேலோங்கும். சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவில் சிக்கல் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்பட்டாலும் பொருட் தேக்கம் ஒன்றும் ஏற்படாது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் வெற்றி உண்டாகும். பொருளாதார ஏற்ற இறக்கங்களை சமாளிக்க கூடிய தன்னம்பிக்கை பிறக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை மாறி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திடீர் பணவரவும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமையும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த விஷயங்கள் நினைத்தபடியே நடைபெறும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கவலை நீங்கி புத்துணர்வு கொடுக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரியும் பணியாளர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். வாகன ரீதியான பயணங்களில் கவனமாக இருந்து கொள்வது நல்லது.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தீராத பிணியும் தீரும். இறை வழிபாடுகள் மூலம் மன அமைதியை பெறலாம். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் வெற்றி உண்டாகும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்கள் பாராட்டும்படி நடந்து கொள்வீர்கள்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் பொருளாதார ரீதியான பிரச்சனைகளை சமாளிக்கலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சிறப்பான வகையில் இது அமையும். புதிய தொழில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சீரான சூழ்நிலை இருக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருப்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும். நீண்ட நாள் கனவு நிறைவேறுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் வந்து மறையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய முதலீடுகள் செய்து அதிக லாபம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டு.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்தவற்றை சாதிக்க கூடிய அமைப்பு என்பதால் கவலை இன்றி மகிழ்ச்சியுடன் காண்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நன்மைகள் நடைபெறக் கூடிய அற்புதமான நன்மைகள் பல நடைபெறக் கூடிய நாளாக அமைய இருக்கிறது.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் ராஜயோகம் ஏற்படும். அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு அனுகூலமான பலன்களை கூடிய யோகம் உண்டு. உடனிருப்பவர்களே உங்களை ஏமாற்ற வரும் என்பதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நல்லது.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருந்தாலும் எதிலும் கவனம் தேவை. அவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட அதிக லாபமும் கிடைக்கப் பெறுவீர்கள். சக போட்டியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை சமாளிப்பீர்கள்.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் வெற்றி உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நீங்கள் எதிர்பார்ப்பதை விட சிறப்பான முன்னேற்றம் உண்டாகும். உங்களை சுற்றி இருக்கும் நபர்களிடம் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக நடந்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களை தவிர்ப்பது நல்லது.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும் அற்புதமான நாளாக இருக்கிறது. கணவன் மனைவியிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. நீண்ட நாள் நண்பர்கள் ஒன்று இணைவதற்கு சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவலைகள் நீங்கி உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் வாகன ரீதியான பயணங்களை மேற்கொள்ளும் பொழுது சாதகமான பலன்களை காணலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -