இன்றைய ராசி பலன் – 11-06-2021

rasi palan - 11-6-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் நிம்மதி இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு குடும்பத்தினர் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளிடம் பாராட்டுகளை வாங்கும் யோகம் உண்டாகும். பெண்கள் மனசாட்சிப்படி நடந்து கொள்வீர்கள். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முக்கிய விஷயங்களை முடிவெடுக்கும் முன் ஆலோசனை மேற்கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய உதவி மற்றவர்களுக்கு தேவைப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு வலுவாகும். நீங்கள் நல்லதையே செய்தாலும் குறை கூறிக்கொண்டே இருப்பார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் ரீதியான முன்னேற்றம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய விஷயங்களை தெரிந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தடைகளைத் தாண்டி முன்னேற கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்த சில விஷயங்கள் நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணி சுமை மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதால் டென்ஷனுடன் காணப்படுவீர்கள். கணவன்-மனைவிக்குள் வாக்குவாதங்களை தவிர்த்து பொறுமை காப்பது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நண்பர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் புதிய அனுபவங்களை சந்திக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறுவதில் இடையூறுகளை சந்திக்கலாம். பெண்கள் குடும்ப விஷயங்களை வெளியில் பகிர்ந்து கொள்வதை தவிர்ப்பது உத்தமம். ஆரோக்கியம் மேம்படும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சகோதர சகோதரிகளுக்கு இடையே தேவையில்லாத மனக் கசப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு ஆன்மீக ரீதியான விஷயங்களில் ஆர்வம் அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் அமைதி நிலவும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால் நிறைந்த சில விஷயங்களை எதிர் கொள்வீர்கள். தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும் நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத விஷயங்களில் தலையிடுவதை தவிர்ப்பது உத்தமம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கவன சிதறல் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பணியில் கவனம் தேவை. மன அமைதி பெற தியானம் மேற்கொள்வது நல்லது.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பேச்சுக்கு சமுதாயத்தில் மதிப்பு அதிகரிக்கும். குடும்பத்தில் பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு வாகன ரீதியான பயணங்களின் பொழுது கவனத்துடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு துணிச்சலான முடிவுகளை எடுக்கும் நாளாக அமைய இருக்கிறது. உங்கள் நட்பு வட்டம் விரியும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதுரியமாக செயல்படக்கூடிய இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்களுடைய பேச்சுக்கு மற்றவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு திறமைக்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். பெண்கள் நினைத்ததை சாதித்துக் காட்டுவீர்கள்.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை எப்படி சமாளிப்பது என்பதைப் பற்றிய சிந்தனை மேலோங்கி காணப்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களில் முதலீடு செய்யும்முன் சிந்தித்து செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் நண்பர்கள் உதவி செய்வார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணவரவு கிடைப்பதில் தாமதம் ஆகலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திட்டமிட்ட காரியங்கள் திட்டமிட்டபடி நிறைவேறுவதில் கால தாமதம் ஏற்படலாம். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் ஒரளவுக்கு சிறப்பாக இருக்கும். புதிய தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு கூடுதல் ஆலோசனை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே நடக்கும் பிரச்சனைகள் தீர கூடிய வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் அமைதி நிலவ முன்கோபத்தை குறைத்துக் கொள்வது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டிகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் மூலம் சில முக்கியமான நிகழ்வுகள் நடைபெறும். பெண்களுக்கு நல்ல நாளாக அமையும்.

- Advertisement -