இன்றைய ராசிபலன் – 12 ஜனவரி 2024

Rasi-palan-new12
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்தையும் பிளான் பண்ணி செய்யணும். இல்லையென்றால் சின்ன சின்ன தோல்விகள் வரும். சிக்கலில் மாட்டிக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. நீங்கள் கொஞ்சம் அசந்தால் போதும். உங்களிடத்தை பிடிக்க பின்னால் நாலு பிரிவு வரிசை கட்டி காத்துக் கொண்டிருப்பார்கள். அண்ணன் எப்போ காலி ஆவான், திண்ணை எப்போ கிடைக்கும் என்று காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஜாக்கிரதையா இருந்துக்கோங்க. கொஞ்சம் அசந்தால் நிச்சயம் உங்களுக்கு ஆப்பு உறுதி.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று கோபத்தை கைவிட வேண்டும். கொஞ்சம் திறமையாக செயல்படுங்கள். வேகத்தை விட இன்று விவேகம் அதிகமாக இருக்க வேண்டும். எப்படி அடித்தால் மாங்காய் விழும் என்பதில் மட்டும் கவனம் இருக்க வேண்டும். மற்றபடி இந்த வீம்புக்காக, கௌரவத்திற்காக எந்த வேலையும் செய்யக்கூடாது. காலில் விழுந்தால் தான் அந்த இடத்தில் நல்லது நடக்குமா, பட்டென யோசிக்காமல் காலில் விழுந்திருங்கள். முரண்டு பிடித்து நின்றால் வாய்ப்புகள் கைநழுவி விடும். தோல்விகள் வந்து ஒட்டிக் கொள்ளும் ஜாக்கிரதை.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வேலையில் நினைத்ததை சாதிக்கும் நாளாக இருக்கும். என்னமோ தெரியாது. மேலதிகாரிகள் நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்டு தலையாட்டுவார்கள். உங்களுக்கே ஆச்சரியமாக இருக்கும். இதுவா நம்ம பாஸ்ஸூ. சந்தோஷம் நிறைந்த நாள் இது. வருமானம் அதிகரிக்கும். பொங்கலுக்கு தேவையான பொருட்களை வாங்க தயாராகி விடுவீர்கள். உங்கள் வீட்டிற்கு பொங்கல் இன்னைக்கே வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

கடகம்


கடக ராசிக்காரர்கள் உழைத்து உழைத்து இன்று ஓய்ந்து இருப்பீர்கள். கொஞ்ச நேரம் படுத்து தூங்கலாம் என்று தோணும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆரோக்கியத்தில் கவன குறைவாக இருக்கக்கூடாது. பொங்கல் வேலை எவ்வளவுதான் இருந்தாலும், உங்களுக்கும் கொஞ்சம் நேரம் ஒதுக்குங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள். அலுவலகப் பணி தொழில் எல்லா விஷயங்களும் உங்களுக்கு இன்று பிசியாகவே இருக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் என்று எல்லா வேலையும் சுறுசுறுப்பாக முடிக்க தொடங்கி விடுவீர்கள். பொங்கலை கொண்டாட தயாராகிக் கொண்டே இருப்பீர்கள். அலுவலக பணி வியாபாரம் எல்லா விஷயத்திலும் காலில் சக்கரம் கட்டிக் கொண்டு சுழன்று தான் செய்யப் போகிறீர்கள். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கமிஷன் தொழிலில் நல்ல லாபம் இருக்கும். புதிய முதலீடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். நீண்ட தூர பயணத்தின் போது மட்டும் கவனம் தேவை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எப்படியாவது கஷ்டமான வேலைகளை எல்லாம் பொங்கலுக்குள் முடித்து விட வேண்டும் என்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். சொந்த ஊருக்கு செல்லக்கூடியவர்கள் ஊருக்கு செல்லக்கூடிய பிளானை இப்போதே தொடங்கி விடுவீர்கள். டிக்கெட் புக் பண்ணுவது, அலுவலக பணியை முன்கூட்டியே முடிப்பது, என்று உங்களுக்கான இன்றைய நாள் ரொம்ப ரொம்ப டைட்டா போகும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனம் இருக்கும். எல்லா வேலையும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று பெண்டிங்கில் வைப்பீங்க. ஆனா இது ரொம்ப ரொம்ப தவறு. அன்றாட வேலையை அன்றே பார்த்து முடித்தால்தான் பண்டிகை நாட்களை சந்தோஷமாக கொண்டாட முடியும். இல்லையென்றால் வேலை ஒரு பக்கம், வீடு ஒரு பக்கம், பண்டிகை ஒரு பக்கம், என்று திணற வேண்டிய சூழ்நிலை இருக்கும். இன்றிலிருந்து உங்கள் வேலையை சுறுசுறுப்பாக தொடங்குகிறீர்கள். சோம்பேறித்தனத்தை தூக்கி போடுறீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்காது. உடனடியாக மருத்துவரை அணுகவும். வேலை செய்யும் இடத்தில் ஏதாவது குறைபாடு இருந்தால், வெளிப்படையாக மேனேஜர், டீம்  லீடரிடம், முதலாளியிடமோ சொல்லிவிடுங்கள். மனதிற்குள்ளேயே சில விஷயங்களை வைத்து போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம். அது உங்களுடைய முன்னேற்றத்தை தடை படுத்தி விடும். வியாபாரத்தில் புதிய முதலீட்டில் கவனமாக இருங்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனசு பாசத்தை தேடும். பிரிந்த உறவுகளோடு ஒன்று சேரும். சில பேருக்கு அடுத்தவர்களுக்கு கிடைத்த பாசம் நமக்கு கிடைக்கவில்லையே இந்த ஏக்கமும் இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்கள் இன்று தங்களுடைய சொந்தங்களை ரொம்ப ரொம்ப மிஸ் பண்ணுவீங்க. கவலைப்படாதீங்க கூடிய சீக்கிரம் நீங்க சொந்த வீட்டிற்கு திரும்பும் வாய்ப்புகளும் கிடைக்கும். மற்றபடி வேலை தொழில் எல்லா விஷயத்திலும் உங்களுக்கு இன்று நன்மையை நடக்கும்

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நேரம் நிறைய இருக்கும். வேலை கொஞ்சம் குறைவாக இருக்கும். இதனால் மனது பொழுது போக்கில் ஈடுபடும். பொங்களுக்கு என்ன செய்யலாம் என்று யோசிக்கும். சுப செலவு உண்டு. குழந்தைகளுக்கு மனைவிக்கு தேவையான பொங்கல் துணிமணிகளை எடுக்க தொடங்கி விடுவீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். தொழிலில் புதிய முடிவு எடுப்பதில் அவசரப்பட வேண்டும் கொஞ்சம் பொறுமை காக்கவும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும், அதை சரி செய்து விடுவீர்கள். போனது போகட்டும் என்று நீங்களே மனதை ஆறுதல் செய்து கொள்வீர்கள். பெரிய அளவில் பிரச்சனை இல்லை என்றாலும், சில விஷயங்களில் நீங்கள் பொறுப்பாக நடந்து கொள்ள வேண்டும். உங்களுக்கு நடக்கும் நல்லதை வெளிப்படையாக அடுத்தவர்களிடம் சொல்லாதீங்க. சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் கவனமாக இருக்கவும். சாதாரணமாக  கமெண்ட் பண்ணுவது கூட இன்னிக்கு செய்யாதீங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நல்ல நாளாக தான் இருக்கும். இருந்தபோதிலும் உங்களுடைய குழப்பத்திற்கு ஒரு தீர்வு கிடைக்காது. எதையோ இழந்தது போல யோசிக்க போறீங்க. எல்லாத்தையும் மூட்டை கட்டி வச்சிட்டு வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்களுக்கு இன்னைக்கு நல்லது தான் நடக்கும். பொங்கலுக்கு தேவையான பர்சேஸில் ஆர்வம் காட்டுங்கள். குடும்பத்தை கவனியுங்கள் விட்டுக் கொடுப்பது உங்களுக்கு நன்மையை தரும்.

- Advertisement -