இன்றைய ராசிபலன் – 12 மார்ச் 2024

Rasi-palan-new12
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் மட்டும் கூடுதல் கவனம் தேவை. உங்களுடைய வேலைகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அனாவசியமாக அடுத்தவர்களிடம் எந்த வாக்கும் கொடுக்காதீங்க.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். பிரச்சனைகளை சமாளிப்பதற்குள் பெரிய போராட்டமாக இருக்கும். இருந்தாலும் உங்களுக்கு பக்கத்துணையாக ஆதரவு தெரிவிக்க நண்பர்களும் உறவினர்களும் இருப்பார்கள். அவர்களுடைய முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் இன்று கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் ஒரு முடிவுக்கு வரும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல வளர்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்கள் வளர்ச்சியை பார்த்து நாலு பேர் பொறாமைப்படுவார்கள். இதனால் புதிய எதிரிகள் உண்டாவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கூடவே வேலை செய்பவர்கள் கூட உங்களை எதிரியாக பார்ப்பார்கள். தனக்கு மட்டும் பிரமோஷன் கிடைக்கவில்லை. நேற்று வந்த இவனுக்கு பிரமோஷன், என்ற வயிற்றெரிச்சல் சில பேருக்கு இருக்கும். அதை எல்லாம் இன்று சமாளித்து தான் ஆக வேண்டும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று பதட்டம் நிறைந்த நாளாக இருக்கும். பதட்டத்திலேயே வேலை சரியாக ஓடாது. இதனால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை இருக்கும். பொறுமையாக செய்யுங்கள். உங்களால் முடிந்ததை செய்யுங்கள். அவசரப்பட்டு எந்த காரியத்தையும் செய்ய வேண்டாம். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். முன்னேற்றம் தரக்கூடிய நாள் இது. வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் இருக்கவும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள். கூடுமானவரை வீட்டு சாப்பாடு சாப்பிடுங்க. சாப்பிட்டால் சீக்கிரம் ஜீரணம் ஆகாத பண்டங்களை இன்று தவிர்ப்பது நல்லது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தோல்விகள் இருக்கும். இதனால் மன உளைச்சல் உண்டாகும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருங்கள். யாரிடமும் வாக்குவாதம் செய்யாதீங்க. புதிய முயற்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். புதிய முடிவு எடுப்பதாக இருந்தாலும் ஒன்றுக்கு பலமுறை சிந்திக்கவும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். முக்கியமான முடிவுகளை எடுக்கலாம். மனசு ஆன்மீகத்தில் ஈடுபடும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பதவி உயர்வு இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது‌. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப காரிய செலவுகள் உண்டாகும். விருந்தினர்களின் வருகை மனசுக்கு நிறைவை கொடுக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிதி சம்பந்தப்பட்ட நிலைமை சீராக இருக்கும். வருமானத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவீர்கள். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுத்து விடுவீர்கள். பொன் பொருள் சேர்க்கை உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். மாணவர்கள் படிப்பில் கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். தேவையற்ற நட்பை தவிர்க்கவும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மனப்பான்மை இருக்கும். உங்களுடைய வேலையை கூட பார்க்க மாட்டீங்க. அடுத்தவர்களை பாவம் என்று நம்பி உதவி செய்து உங்களுடைய வேலைகளை தவற விட்டு விடுவீர்கள். இதனால் சின்ன சின்ன சங்கடங்கள் உண்டாகும். கவலைப்படாதீங்க. நல்லதே நடக்கும். ஆரோக்கியத்திலும் கொஞ்சும் கவனம் செலுத்துங்கள். வீட்டில் மனைவி குழந்தைகளுக்கு என்ன தேவை என்பதை அறிந்து கொண்டு பூர்த்தி செய்யுங்கள்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று யோகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும். நடக்கவே நடக்காது என்று நினைத்திருக்கும் காரியங்களை இன்று செய்ய தொடங்குங்கள். நிச்சயம் நல்லது நடக்கும். வாழ்க்கை துணை பேச்சை கேட்டு நடந்தால் குடும்பத்தில் பிரச்சனை இருக்காது. இல்லையென்றால் தகராறுகள் வர வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதிரிகள் நண்பர்களாக மாறுவார்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்தவும். வெளிநாட்டில் இருப்பவர்கள் அரசுக்கு புறம்பான காரியங்களில் ஈடுபடக் கூடாது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமை தேவை. பொறுமையை இழக்கக்கூடாது. நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். செலவை சமாளிக்க தேவையான பணம் கையில் இருக்கும். கடன் பிரச்சனையில் இருந்து வெளி வருவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். உங்களுடைய நேர்மையை மேலதிகாரிகள் பாராட்டுவார்கள். நீண்ட நாள் பகை நட்பாக மாறும்.

- Advertisement -