இன்றைய ராசிபலன் – 12 ஏப்ரல் 2023

apr 12 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. நீண்ட நாள் கேட்க வேண்டிய செய்தி ஒன்றை கேட்பீர்கள். சுய தொழிலில் இழுபறியாக இருந்த வேலைகள் முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் இடையூறு ஏற்படலாம்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தள்ளிப்போன வாய்ப்புகள் கூட உங்களுக்கு தானாக வரக்கூடிய வாய்ப்பு உண்டு. குடும்ப ஒற்றுமைக்கு அமைதி தேவை. சுய தொழிலில் உள்ளவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து குறுக்கு வழியை நாடுவது நல்லதல்ல. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் பெறுவீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புத்துணர்ச்சி பெருகக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. கணவன் மனைவி இடையே அன்னோன்யம் கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கைக்கு கிடைக்க கால தாமதம் ஆகலாம் எனவே பொறுமை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பலரின் நம்பிக்கை கிடைக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இழந்த ஒன்று உங்களுக்கு மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. குடும்ப உறவுகளுக்கு இடையே சிறு சிறு சண்டை சச்சரவுகள் தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நினைத்ததை சாதித்து காட்டக்கூடிய நாளாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பேச்சில் மாற்றம் செய்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை பெற இருக்கிறீர்கள். நெருங்கிய நண்பர்கள் உதவிக்கரம் நீட்டுவர். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பேச்சில் நாணயம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வாயுள்ள பிள்ளை பிழைக்கும் என்பதை நினைவில் இருக்க வேண்டும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து வெற்றியடைய கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் தள்ளி சென்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளை பேசுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சுய தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பல தடைகளை தாண்டிய வெற்றியை அடைவீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. தேவையில்லாமல் வெளியிடங்களில் வீண் பகையை வளர்க்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு துறை சார் நிபுணர்களின் ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்யும் எண்ணம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுவது நல்லது. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்த்து விடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பிள்ளைகளால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் பிறர் செய்த நன்றியை மறவாமல் இருப்பது ரொம்பவும் நல்லது.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தலைக்கு மேல் பிரச்சனைகளை சுமப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எதையும் பெரிதாக போட்டு குழப்பிக் கொள்ளாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நீண்ட நாள் ஆசை நிறைவேற வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதுப்புது அனுபவங்கள் கிட்டும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய திறமைகளை வெளி காட்டக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப ஒற்றுமைக்கு விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எண்ணிய எண்ணங்கள் தடைபடலாம்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நிர்வாக திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கிறது. மற்றவர்கள் முன்னிலையில் மதிப்பு, மரியாதை உயரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தங்களுக்கு கீழ் பணி புரியும் பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கொடுத்த கடன் வசூல் ஆகும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை தாண்டி நீங்கள் முன்னேற கூடிய அமைப்பாக இருக்கிறது. உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதையும் போராடித்தான் பெற வேண்டி இருக்கும் எளிதாக கிடைக்காது.

- Advertisement -