இன்றைய ராசிபலன் – 12 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். நீண்ட நாள் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். தொழில், வியாபாரத்தில் இருப்பவர்கள் நல்ல லாபம் பெறுவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் வெளிவட்டாரத்தில் உங்களின் செல்வாக்கு உயரும். சிலர் தந்தை வழியில் தன லாபம் பெறுவார்கள். எடுத்த காரியங்களில் சிறப்பான வெற்றிகளை பெறுவீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பணவரவில் இருந்த தடை நீங்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். புதிய மனிதர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சொத்து தொடர்பான விவகாரங்களில் வெற்றி கிடைக்கும். பிரிந்த நண்பர்கள் ஒன்று சேர்வார்கள். சிலர் வாழ்க்கைத் துணை வழியில் பணவரவு கிடைக்க பெறுவார்கள். பணியிடத்தில் சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த பணம் வரவு இருக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு நல்ல செய்தி வரும். சிலர் வெளியூர் பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நிலை உயரும். சிலர் குலதெய்வ கோயிலுக்கு சென்று வருவார்கள். நண்பர்களின் உதவிகளால் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் நீண்ட நாள் பிரச்சனைகள் தீரும். சிலருக்கு பூர்வீக சொத்துக்கள் கிடைக்கும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் தாராள பண வரவு இருக்கும். பழைய கடன்களை வட்டியுடன் கட்டி முடிப்பீர்கள். தம்பதிகளிடையே ஒற்றுமை கூடும். புதிய தொழில், வியாபார முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ஒரு சிலருக்கு உடல் நல பாதிப்புகள் ஏற்பட்டு நீங்கும்.

தனுசு:
தனுசு ராசியினர் இன்றைய தினம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களின் ஆதரவால் ஆதாயம் ஏற்படும். நினைத்த காரியங்களை செயல்படுத்தி வெற்றி காண்பீர்கள். சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். பெரியவர்களின் ஆசிகள் உண்டு.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் மனதில் குழப்பம் ஏற்படும். ஈடுபடும் காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். மறைமுக எதிரிகள் தோன்றுவார்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை கூடும். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு சராசரியான வருமானமே இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படும். கடன் வாங்க வேண்டிய சூழல் சிலருக்கு ஏற்படும். பணியிடங்களில் சக ஊழியர்களுடன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். கலைஞர்களுக்கு புதிய வாய்ப்பு கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் பெரிய மனிதர்களின் நட்பால் நன்மைகள் ஏற்படும். எதிர்பாராத பணவரவு உண்டு. சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். குழந்தைகளால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபத்தை பெறுவார்கள்.

- Advertisement -