- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026

இன்றைய ராசிபலன் – 12 ஜூன் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை தான். நீங்கள் நினைத்த நல்லது, நினைத்து பார்க்காத நல்லது அனைத்தையும் இறைவன் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையை அனுபவிக்க இந்த நாள், உங்களுக்கு ஒரு வரமாக இருக்கும். இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். இயலாதவர்களுக்கு உதவி செய்யுங்கள். மேலும் நன்மைகளை அடையலாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் எல்லா வேலைகளையும் போராடி தான் செய்ய வேண்டி இருக்கும். வெற்றி உங்களுக்கு சுலபமாக கிடைக்காது. சின்ன சின்ன கஷ்டங்கள், சின்ன சின்ன எதிரி பிரச்சனைகள் தோல்விகளை சந்தித்து பிறகு, வெற்றியை பெற முடியும். ஆகவே இந்த நாளை கடந்த செல்ல தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகம் தேவைப்படுகிறது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று வெற்றிவாகை சூடுவீர்கள். சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். புது வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. நீண்ட தூர பயணங்கள் நல்லபடியாக அமையும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் விலகும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோர்வான நாளாக தான் இருக்கும். லேசான கவலை மனதில் அவ்வப்போது வந்து போகும். இருந்தாலும் கடமையிலிருந்து தவறக்கூடாது. மனதை ஒருநிலைப்படுத்தி உங்களுடைய வேலையில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். இறைவனை நம்புங்கள். நிச்சயம் நல்லது நடக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று மன பயம் கொஞ்சம் இருக்கும். புது முடிவுகளை எடுக்கும்போது சில தடுமாற்றம் வரும். குடும்ப உறவுகளுடன் சண்டை வாக்குவாதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இருப்பினும் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். பிரச்சனைகள் இல்லை, நிதானத்தை இழந்தால் பிரச்சனைகள் பெருசாகிவிடும் ஜாக்கிரதை.

கன்னி


கன்னி ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று நட்பு ரீதியாக நிறைய நல்லது நடக்கும். புதிய நண்பர்களின் அறிமுகம் மனதிற்கு இதமான அனுபவத்தை கொடுக்கும். நல்ல அனுபவம் கிடைக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் புது வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். ‌

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்தவரை இன்று சின்ன சின்ன தடைகள் சங்கடங்கள் வரும். இருந்தாலும் உங்களுடைய வேலையிலும் வியாபாரத்திலும் பெரிதாக பிரச்சனை வராது. விடா முயற்சி கொண்டால், நிச்சயம் வெற்றி கிடைக்கும். மனம் தளர வேண்டாம். எந்த விஷயத்திற்கும் பயப்பட வேண்டாம். துணிச்சலாக செயல்படுங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரிய நிகழ்ச்சிகள் மீண்டும் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நீண்ட நாட்களாக, உங்களை சிரமம் படுத்திக் கொண்டிருந்த பிரச்சனைகள் சரியாகும். வருமானம் சீராக இருக்கும். கடன் சுமை குறையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு தேவை. உடல் சோர்வு இருக்கவே கூடாது. எரும்பு போல ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். அப்போதுதான் இன்றைக்கான வேலையை முடிக்க முடியும். அவ்வளவு வேலை பளு உங்கள் தலை மேல் இருக்கும். இரண்டு பேர் வேலையை சேர்த்து நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும் பார்த்துக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று ஆர்ப்பாட்டம் இல்லாத சாந்தமான நாளாக இருக்கும். பெருசாக எந்த பிரச்சனைகளும் வராது. சின்ன சின்ன பிரச்சனை வந்தாலும், அதை நீங்கள் சாதுரியமாக கையாளுவீர்கள். திறமை வெளிப்படும். நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பயணங்களின் மூலம் சந்தோஷம் கிடைக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று காரியத்தடை விலகும். புது முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். வீண் விரைய செலவுகள் குறையும். நிதிநிலைமை சீராகும்.

மீனம்


மீன ராசிக்காரர்கள் இன்று பொறுமையாக இருப்பீர்கள். காரியத்தில் கண்ணாக இருப்பீர்கள். உங்களுடைய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். நல்ல பெயர் வாங்குவீர்கள். உயர் அதிகாரிகளின் ஆதரவால் வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தை பொருத்தவரை பெரிசாக பிரச்சினைகள் இருக்காது. சீரான போக்கு நிலவும்.

சற்று முன்