- Advertisement -
Homeஜோதிடம்ராசி பலன் | Indraya rasi palanஇன்றைய ராசிபலன் – 12 செப்டம்பர் 2026

இன்றைய ராசிபலன் – 12 செப்டம்பர் 2026

- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. கூடுமானவரை நீண்ட தூர பயணங்களை தவிர்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் சிந்தித்து செயல்பட வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அதிகமான வேலை பளுவை தலையில் இழுத்து போட்டுக் கொள்ள வேண்டாம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும். நன்மைகள் நடக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும். பெண்கள் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மனநிறைவு பெறுவீர்கள். சுப செலவுகள் ஏற்படும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் சரியாகும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களை பொருத்தவரை இன்று லாபமான நாளாக இருக்கும். உங்களுடைய ஆசைகள் நிறைவேறும். வேலையிலும் வியாபாரத்திலும் முன்னேற்றம் காணப்படும். எதிர்கால சேமிப்புக்கு இன்று பிள்ளையார் சுழி போடுங்கள். நல்லது நடக்கும். அடமானத்தில் வைத்த பொருட்களை மீட்பதற்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

கடகம்


கடக ராசிக்காரர்கள் இன்று பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. தேவையில்லாத பஞ்சாயத்தில் தலையிட வேண்டாம். அளவோடு பேசுங்கள். வேலையிலும் வியாபாரத்திலும் கவனம் செலுத்துங்கள். மனதை தேவையில்லாமல் அலைபாய விடாதீர்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று பொறுமையான நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகள் எல்லாம் நேரத்திற்கு நடந்து முடியும். வியாபாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். புது வாடிக்கையாளர்களின் வருகை மனதிற்கு திருப்தியை கொடுக்கும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் நீங்கும். சுப செலவுகள் ஏற்படும்.

கன்னி


ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். நிறைய வேலைகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். யாராலும் செய்து முடிக்க முடியாத வேலையை, உங்கள் கையில் கொடுத்தால் கூட அதை மிக அழகாக செய்து கொடுக்கும் திறமை வெளிப்படும். தந்திரமாக பேசும் வித்தையை வெளிப்படுத்துவீர்கள். வேகத்தை விட விவேகம் வெளிப்படும் நாள் இன்று.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களை பொறுத்த வரை இன்று நிதானம் தேவை. அவசரப்பட்டு எந்த வேலையையும் கையில் எடுக்கக்கூடாது. உங்களால் எது முடியும், எது முடியாது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். எதிரிகளோடு முட்டி மோதி சண்டை போடாதீர்கள். பிரச்சனை என்றால் பின் வாங்குவது தான் இன்று உங்களுக்கு நல்லது.

விருச்சிகம்


விருச்சிகராசி காரர்களை பொறுத்த வரை இன்று நிம்மதியான நாளாக இருக்கும். வேலையும் வியாபாரமும் சுமூகமாக செல்லும். கட்டுமான தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். வாங்கிய கடனை திருப்பி அடைக்க நல்ல காலம் கைகூடி வரும். வீட்டில் இருக்கும் பெண்கள் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மனம் தெளிவாக இருக்கும். தெளிவாக சிந்திப்பீர்கள். குழப்பத்திலிருந்து விடுபட்டு மன நிம்மதி அடைவீர்கள். வாழ்க்கைக்கு எது தேவை, எது இல்லை என்ற முடிவை தீர்மானமாக எடுக்கக்கூடிய தெம்பு உங்களிடத்தில் பிறக்கும். இறை நம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட தூர பயணங்களால் நன்மை நடக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்களை பொருத்தி வரை இன்று சுபமான நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் மீண்டும் நடிக்க தொடங்கும். சுப செலவுகள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். இருந்தாலும் மனதளவில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். காரிய தடை விலகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் சுமையிலிருந்து விடுபடுவீர்கள். சேமிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்ப நன்மைக்காக மட்டுமே சிந்தித்து இந்த நாளை நிறைவு செய்து கொள்வீர்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். உறவுகளோடு இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும். நிதி நிலைமை சீராக இருக்கும். பொன் பொருள் சேர்க்கையும் உண்டு.

சற்று முன்