இன்றைய ராசிபலன் – 12 நவம்பர் 2023

Rasi-palan-new12
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த தீபாவளி திருநாள் மறக்க முடியாத நாளாக அமையும். குடும்பத்தோடு விமர்சியாக இந்த பண்டிகையை கொண்டாடுவீர்கள். மனசு நிறைவாக இருக்கும். பட்டாசு வெடிக்கும் போது கூடுதல் கவனத்தோடு இடுங்கள். சிறு பிள்ளைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுப்பாதீங்க. மகாலட்சுமி தேவியே உங்கள் வீட்டிற்குள் அடியெடுத்து வைக்க இன்று ‘ஸ்ரீம்’ என்ற மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தித்திக்கும் திருநாளாக அமையும். குடும்பத்தோடு சேர்ந்து காலை நேரத்திலேயே ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டு முறையில் ஈடுபடுவீர்கள். மனமகிழ்ச்சி நிறைந்த இந்த நாளில் பெரியவர்களின் ஆசிர்வாதத்தை வாங்க மறக்காதிங்க. வீட்டு பெரியவர்களை உதாசீனப்படுத்தாதீங்க. இன்றைய நாள் ‘ஓம் மகாலட்சுமி தாயே போற்றி’ என்ற மந்திரத்தை சொல்லுவது நன்மையை தரும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவு ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். இன்றைய பண்டிகை நாள் மிக மிக சிறப்பாக கடந்த செல்லும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்க. நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் குழந்தைகளை ஜாக்கிரதையாக வச்சுக்கோங்க. இன்று ‘ஓம்’ என்ற மந்திரத்தை 27 முறை சொல்ல நன்மை நடக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு இன்று விரும்பிய படி சந்தோஷம் கிடைக்கும். தீபாவளிக்கு நீங்கள் என்னெல்லாம் பிளான் பண்ணி வச்சீங்களோ, அதெல்லாம் சரியாக நடக்கும். வெற்றி பெறக்கூடிய நாள் தான் இன்று. வெளியூரிலிருந்து தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வர வாய்ப்புகள் உள்ளது. முடிந்தால் இன்று கோவிலுக்கு சென்று திருமணம் ஆகாத ஒரு சின்ன குழந்தைக்கு வஸ்திரம் தானம் செய்வது நன்மையை தரும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். ஏதோ ஒரு உள்ளுணர்வு உங்களுக்கு பயத்தை கொடுக்கும். ஆனால் பிரச்சனைகள் பெருசாக இருக்காது. சமையலறையில் இருக்கும் பெண்கள் வேலை செய்யும் போது கவனத்தோடு இருக்கவும். கத்தி போன்ற கூர்மையான ஆயுதத்தை பயன்படுத்தும் போது. அதேபோல குழந்தைகளை தனியாக பட்டாசு வெடிக்க அனுப்பாதீங்க. இன்று வீட்டில் மகாலட்சுமியை நினைத்து நெய் விளக்கு ஏற்றி மகாலட்சுமி போற்றி சொல்வது நன்மை தரும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாக பெருகும். சுபசலவு ஏற்படும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். தீபாவளி பண்டிகையை நன்றாக கொண்டாடி மனமகிழ்ச்சியோடு நிறைவு செய்வீர்கள். இன்றைய தினம் முடிந்தால் இரண்டு ஏழைப் பெண்களுக்கு வயிறார சாப்பாடு வாங்கி கொடுங்க. மகாலட்சுமியின் ஆசிர்வாதம் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்திலிருந்து பாராட்டுகள் வரும். தொலைபேசி மூலம் நிச்சயம் ஒரு நல்ல செய்தி கிடைக்கும். மன மகிழ்ச்சியோடு இன்றைய நாளை நடத்திச் செல்வீர்கள். கணவன் மனைவிக்கிடையே கொஞ்சமாக வாக்குவாதம் வர வாய்ப்புகள் உள்ளது. பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். முன்கோபட வேண்டாம். முடிந்தால் இன்று வீட்டிற்கு ஒரு வெள்ளி நாணயம் வாங்குங்கள் நிறைய செல்வம் சேரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சஞ்சலங்கள் இருக்கும். நண்பர்கள் உறவினர்கள் மத்தியில் சின்ன சின்ன சண்டை வர வாய்ப்புகள் உள்ளது. பண்டிகை நாள் அல்லவா. கொஞ்சம் அனுசரித்து சொல்லுங்கள். விட்டுக் கொடுத்து சென்றால் பிரச்சனை இல்லை. மற்றபடி தீபாவளியை சந்தோஷமாக கொண்டாட கூடிய நாள் தான் இன்றைய நாள். மகாலட்சுமியின் அருளைப் பெற யாராவது குட்டி மகாலட்சுமிக்கு உங்கள் வீட்டில் அக்கம் பக்கத்தில் இருக்கும் ஏழை பெண் குழந்தைக்கு பட்டாசு வாங்கி பரிசாக கொடுங்க.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக எல்லா வேலையும் செய்வீங்க. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். தலை தீபாவளியை கொண்டாடுபவர்களுக்கு சீர்வரிசை எக்கச்சக்கமாக வரும். வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய நாளில் மகாலட்சுமியை நினைத்து வயதான தம்பதியருக்கு வயிறார சாப்பாடு போடுவது உங்கள் வீட்டிற்கு நல்லது.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக தான் இருக்கும். சில பேருக்கு கடைசி நேரத்தில் பணம் வந்து தீபாவளியை சூப்பராக கொண்டாடி விடுவீர்கள். பணம் இல்லை என்று கஷ்டப்படாதீர்கள் உங்களுடைய இன்றைய நாள் சந்தோஷமாகத்தான் செல்லும். எப்படியாவது பணம் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ரொம்பவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நேரம் போறதே தெரியாது. எல்லாருக்கும் தான் தீபாவளி. இருந்தாலும் உங்களுக்கு இன்று பொழுதுபோக்குக்கு நிறைய உறவுகள் சொந்த பந்தங்கள் உங்கள் கூடவே நேரத்தை கழிக்கும். சில பேர் வெளிநாட்டில் இருப்பவர்கள் லேசாக வருத்தப்படுவார்கள் இன்று நாமும் இந்தியாவில் இல்லையே என்று கஷ்டம். சந்தோஷம் நிறைந்த இந்த நாளில் உங்களால் முடிந்த உதவியை இல்லாதவர்களுக்கு செஞ்சி மனமகிழ்ச்சி அடையவும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் இன்றைய நாள் அசந்து போக போறீங்க. அவ்வளவு வேலை இருக்கும். என்ன வேலை தெரியுமா பட்டாசு வெடிப்பது, சாப்பிடுவது, ஊரை சுற்றுவது இப்படியே இந்த நாள் கழியும். இந்த நாள் இறுதியில் உடல் சோர்வு தலைவலி வர வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். உங்களால் முடிந்தால் இரண்டு ஏழை குழந்தைகளுக்கு பட்டாசு. புது துணி எடுத்துக் கொடுக்க. நல்லதே நடக்கும். அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

- Advertisement -