இன்றைய ராசிபலன் (12 டிசம்பர் 2021)

rasi-palan-12/12/21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நல்ல நாளாக அமைய இருக்கிறது. எதிர்வரும் எவ்வளவு பிரச்சினைகளையும் நீங்கள் தனியாக நின்று சமாளிக்க கூடியவர்களாக இருக்க போகிறீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவிடுவார்கள். சுய தொழிலில் புதிய உத்திகளை கையாள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

ரிஷபம்:
ரிஷப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் நிதானமாக பார்த்து இருக்க வேண்டிய நாளாக இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் குடும்பத்தில் இருப்பவர்களிடம் உன் கோபத்தை தவிர்த்து கொள்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லையே என்று ஏங்குவார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். சுய தொழிலில் நீங்கள் எதிர்பார்ப்பதை விட நல்ல லாபம் காணலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தங்களுடைய கூடுதல் பணிகளை பொறுப்புணர்வுடன் செய்து முடிப்பீர்கள். பேச்சைக் குறைப்பது நல்லது.

கடகம்:
கடக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சரியான முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாள் அல்ல என்பதால் கூடுதல் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வியாபார ரீதியான பயணங்களால் அனுகூலப் பலன் கொடுக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சக போட்டியாளர்களை சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவியிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் ஏற்றம் தரக்கூடிய அமைப்பாக இருக்கிறது. நீங்கள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான அமைப்பு என்பதால் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தடைப்பட்ட சுப காரிய முயற்சிகள் ஒன்று கூடி வரும். புதிய தொழில் துவங்குபவர்களுக்கு சாதகப்பலன் உண்டாகும். கணவன் மனைவி பிரச்சனையை ஊதி பெரிதாக்காமல் பேசித் தீர்த்துக் கொள்வது நல்லது.

கன்னி:
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்கள் உழைப்பிற்கு உரிய பலனை பெறக்கூடிய அற்புதமான அமைப்பாக இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்கள் தங்கள் திறமைகளை மேலும் மெருகேற்றிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புணர்வு அதிகரித்து காணப்படும். ஆரோக்கியத்தில் இருக்கும் குறைகளை உடனே சரி செய்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதையும் தீர்க்கமாக முடிவெடுக்கக் கூடிய தைரியம் பிறக்கும். எப்போதும் குழப்பமான மனநிலையில் இருந்த நீங்கள் அதிலிருந்து விடுபட இருக்கிறீர்கள். சுய தொழிலில் வருமானம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இணக்கம் தேவை. கணவன் மனைவி அன்பில் புதிய புரிதல் உண்டாகும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு விஷயத்திலும் மற்றவர்களுடைய பங்களிப்பு இருக்கும். சுயநலத்தை தவிர்த்து பொது நலமாக இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு போட்டி பொறாமைகள் குறையும். குடும்பத்துடன் சுற்றுலா செல்ல வாய்ப்புகள் உண்டு. வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் சில செய்திகளை பெறுவீர்கள்.

தனுசு:
தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எதிலும் உங்களுக்கு வெற்றி வாகை சூடிய நாளாக இருக்கிறது. சுய தொழிலில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியான முன்னேற்றம் சிறப்பாகக் காணப்படுவதால் வீட்டு வேலைகளை எளிதாக பூர்த்தி செய்துவிடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையற்ற கடன்கள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.

மகரம்:
மகர ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மந்த நிலை காணப்படும். கவலைகளை எறிந்துவிட்டு வருவது வரட்டும் என்று இருப்பது நல்லது. கணவன் மனைவியிடையே இருந்து வந்த உறவு சிக்கல் தீரும். பிள்ளைகள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கும். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு பதவி உயர்வு கிடைப்பதில் சாதக பலன் உண்டு. ஆரோக்கியத்தை கவனியுங்கள்.

கும்பம்:
கும்ப ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி நன்மைகள் நடக்க கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் தங்கள் பணிகளை செவ்வனே செய்து முடிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் திறமைகளை வெளி உலகில் பகிர்ந்து கொள்வது நல்லது. ஆரோக்கியம் மேம்படும்.

மீனம்:
மீன ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மிகுந்த நன்மைகளை தரக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் வருமான ரீதியான விஷயங்களில் அனுகூல பலன் காணலாம். உத்யோகத்தில் உள்ளவர்களுக்கு வெளியிட பயணங்கள் மேற்கொள்ள கூடிய வாய்ப்புகள் அமையும், பயணங்களில் கவனம் தேவை. ஆரோக்கியம் படிப்படியாக சீராகும்.

- Advertisement -