இன்றைய ராசி பலன் – 12-07-2021

rasi palan - 12-7-21
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் இருக்கும் தேவையில்லாத பிரச்சனைகள் தீர்வுக்கு வரும். கணவன் மனைவி இடையே இருக்கும் ஒற்றுமை வலுவாகும். உற்றார் உறவினர்கள் மூலம் தேவையில்லாத வீண் விரயங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். சுயதொழிலில் உங்களுடைய எதிர்பார்ப்புக்கு உரிய லாபம் உண்டாகும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திடீர் மாற்றங்கள் மன மகிழ்வை ஏற்படுத்தும் வகையில் அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே புரிதலை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சுயதொழிலில் நிலுவையில் இருந்த சில விஷயங்கள் மீண்டும் எடுத்து முடிவுக்கு கொண்டு வருவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய உபகரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் அமையும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய மனதில் நேர்மறை எண்ணங்கள் உதிக்க ஆரம்பிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் அதிரடியான மாற்றங்களை நிகழ்த்தி வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை கணிசமாக உயர்த்திக் கொள்வீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்குள் இருக்கும் பிரச்சனைகள் மேலும் வலுவாக வாய்ப்புகள் இருப்பதால் மௌனம் காப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சிக்கலான விஷயங்களைக் கூட எளிமையாக செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் தங்களுடைய திறமையால் மற்றவர்களிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் பெரியவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது உத்தமம். சொத்துக்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் தேவை. மூன்றாம் மனிதர்களை நம்பி எந்த ஒரு காரியத்தையும் ஒப்படைக்க வேண்டாம். சுய தொழிலில் உங்களுடைய பங்களிப்பு கூடுதலாக செலுத்துவீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை இருந்துவந்த பகை மறையும் ஒற்றுமை மேலோங்கும்.

கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பொருளாதார ரீதியான ஏற்ற இறக்கங்களை திறம்பட சமாளிப்பீர்கள். சுயதொழிலில் மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்கள் இடத்தில் பாராட்டுகள் பெறும் வாய்ப்புகள் அமையும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நல்ல வேலை அமையும்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தன்னம்பிக்கையுடன் செயல்பட கூடிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் தேவையில்லாத நபர்களின் அறிமுகத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். புதிய பொறுப்புகளை ஏற்பீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தினரின் ஆதரவு மகிழ்ச்சியளிக்கும் வகையில் அமையும். தொழில் மற்றும் எதிர்பாராத இடத்திலிருந்து எதிர்பார்க்கும் தொகை கைக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிலும் வெற்றி காண கூடிய யோகம் உண்டு. வேலைப்பளு அதிகரித்தாலும் பொறுப்புணர்வுடன் செயல்படுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வீண் விரயங்கள் ஏற்படுவதை தவிர்க்கவும். கூடுமான வரை ஆடம்பர செலவுகளை குறைத்துக் கொள்வது உத்தமம். கணவன் மனைவிக்கு இடையே அன்யோன்யம் நீடிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் வந்து செல்லும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய நாளாக அமைய இருக்கிறது.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய பலம் அறிந்து செயல்படுவீர்கள். விட்டு சென்ற உறவுகள் மீண்டும் வந்தடைய வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்து போடும் யோகம் உண்டு. கொடுக்கல் வாங்கல் சரளமாக நடைபெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாள் கனவுகள் நிறைவேற கூடிய அதிர்ஷ்டம் உண்டாகும்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய வார்த்தைக்கு உங்களுடைய குடும்பத்தினரின் மதிப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுபச் செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் சாதக பலன்களை கொடுக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் நண்பர்களின் ஆதரவை பெறுவீர்கள். வீண் விரயங்கள் ஏற்படாமலிருக்க ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

மீனம்:
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மகிழ்ச்சியான நாளாக அமைய இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே இருக்கும் சிந்தனைகள் ஒருசேர ஒற்றுமையாக அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் மென்மேலும் முன்னேறுவதற்கான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர் பார்க்கும் இடத்திலிருந்து சலுகைகள் கிடைக்கும். புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகப்பலன் பெறுவீர்கள்.

- Advertisement -