இன்றைய ராசிபலன் – 13 பிப்ரவரி 2024

Rasi-palan-new13
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் நிதானம் தேவை. எந்த ஒரு காரியத்தை கையில் எடுத்தாலும் பதட்டம் இருக்கக் கூடாது. உங்களுடைய அன்றாட வேலைகளை கூட கவனமாக செய்யுங்கள். இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தால் கூட அதை பற்றி கவலைப்படாதீங்க. மனதை போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். குடும்பத்தில் வாக்குவாதம் செய்யக்கூடாது. வேலை டென்ஷனை குடும்பத்தில் கொண்டு வந்து காட்டக் கூடாது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆரோக்கியத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜங்க் ஃபுட் சாப்பிடாதீங்க. நேரத்துக்கு சாப்பிடுங்க. இதோடு மட்டுமல்லாமல் செலவை குறைக்க வேண்டும். இன்று பணத்தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. வீட்டில் விருந்தினர்களின் வருகை இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். தொழிலில் எந்த இடர்பாடும் இருக்காது.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் இரட்டிப்பாக வாய்ப்புகள் உள்ளது. மனைவிக்கு குழந்தைகளுக்கு தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். வாரா கடன் வசூல் ஆகும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் காத்துக் கொண்டிருக்கிறது. விடாமுயற்சியோடு தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். கையில் எடுத்த வேலைகளை சரியாக முடிக்க முடியாமல் கஷ்டப்படுவீர்கள். பண விஷயத்தில் ஜாக்கிரதையாக இருங்கள். அனாவசியமாக அடுத்தவர்களுக்கு பணத்தை தூக்கி கொடுத்துறாதீங்க. சேமிப்பு மட்டும்தான் உங்களை காப்பாற்றும். இன்று கிடைக்கக்கூடிய அனுபவங்கள் வாழ்க்கையில் நிறைய நல்ல மாற்றங்களை கற்றுக் கொடுக்கும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெளிப்படையாக பேச வேண்டும். மனதில் ஒன்று வைத்துக் கொண்டு, வெளியில் ஒன்று பேசினால் பிரச்சனை உங்களுக்குத்தான். வெட்டு ஒன்று, துண்டு இரண்டு என்று பேச கற்றுக் கொள்ளுங்கள். நல்ல மனிதர்கள் யார், கெட்ட மனிதர்கள் யார், என்று எடை போட உங்களுக்கு இன்று தெரியாது. இதனால் குழப்ப நிலை நிலவும். நல்லவர்களை திட்டி விடுவீர்கள். கெட்டவர்களை கூடவே வச்சுக்குவீங்க. அதனால் ஜாக்கிரதையா நடந்துக்கோங்க.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களைப் பார்த்து லேசாக பொறாமை குணம் எழும். நம்மால் இப்படி வாழ முடியவில்லை என்று ஏக்கப்படுவீர்கள். கவலைப்படாதீங்க. நல்லபடியா வாழ வேண்டும் என்றால் அடுத்தவர்களை பார்த்து பொறாமைப் படக் கூடாது. நம்முடைய தகுதியை எப்படி வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு தேவையான பாதையை நோக்கிச் செல்லுங்கள். பொறாமை குணத்தை விட்டு விடுங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று மனசு சந்தோஷப்படக்கூடிய நாளாக அமையும். நீண்ட நாள் நிறைவேறாத ஆசை இன்று நிறைவேறும். காதல் கை கூடும். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளக் கூடாது. அவர்கள் சொன்ன டார்கெட்டை முடிப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள். இருக்கும் வேலையை விடுவது முட்டாள்தனம். இன்றைய சூழ்நிலையில் புது வேலை கிடைப்பது குதிரை கொம்பு. ஜாக்கிரதையா நடந்துக்கோங்க. அடுத்தவர்களிடம் பேசும் போது மரியாதை கொடுங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று மனசு அலைபாய்ந்து கொண்டே இருக்கும். ஒரு வேலையை முழுசா செய்யவே மாட்டீங்க. நாலு வேலையை கையில் எடுத்து, கடைசியில் நாலு வேலையும் நாலா பக்கத்திலும் நிற்கும். இதனாலேயே பாதி டென்ஷன் உண்டாகும். ஒரு வேலையை ஒழுங்காக முடிக்க பாருங்க. இல்லையென்றால் உங்களுக்குத்தான் பிரச்சனை. எல்லோர் சொல்வதையும் போட்டு காதில் வாங்கிக் கொண்டு குழம்பக் கூடாது. உங்கள் மனசுக்கு எது சரின்னு படுதோ அதை மட்டும் செய்யணும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை சுறுசுறுப்பாக நடக்கும். எந்த வேலையும் தேங்கி நிற்காது. பாராட்டுகள் கிடைக்கும். வருமானத்தில் மனசு பல மடங்கு திருப்தி அடையும். நீங்கள் உழைத்த உழைப்புக்கு எல்லாம் தகுந்த வருமானத்தை கடவுள் உங்களுக்கு கொடுக்கப் போகின்றான். வாழ்க்கையில் முன்னேறி விடலாம் என்ற தன்னம்பிக்கையும் தைரியமும் இன்று பிறக்கும். கடவுளுக்கு நன்றி சொல்லுங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று குடும்ப ஒற்றுமை மேலோங்கும். சண்டையோடு இருந்த உறவுகள் தானாக வந்து உங்களிடம் பேசுவார்கள். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதன் மூலம் மனம் மகிழ்ச்சியடையும். வீட்டில் இருக்கும் பெரியவர்களின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். பண விஷயத்தில் கவனமாக இருக்கணும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று அதிக எதிர்பார்ப்புகள் இருக்கும். அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை மட்டும் தான் கொடுக்கும். அதனால் இந்த நாள் இறுதியில் டென்ஷனாக வாய்ப்புகள் உள்ளது. டென்ஷனை குறைக்க எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கடமைகளை மட்டும் செய்யுங்கள். பலனை கடவுள் நிச்சயம் கொடுப்பான். இன்னைக்கு கிடைக்காத பலன், உங்களுடைய உழைப்புக்கு கட்டாயம் அடுத்த நாளோ, அடுத்த மாதமோ கிடைக்கும் என்று நம்புங்கள். தன்னம்பிக்கையோடு செயல்படுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெளியூர் பயணங்கள் நன்மையை கொடுக்கும். புத்திசாலித்தனத்தோடு நடந்தால் இன்று நீங்கள் நிறைய விஷயங்களை சாதிக்கலாம். வேகத்தோடு உங்களுக்கு இன்று விவேகம் தான் ரொம்ப ரொம்ப முக்கியம். அடுத்தவர்களை காக்கா பிடிப்பதால் தவறு கிடையாது. கோபப்பட்டு வாய்ப்புகளை தவறவிடாதிங்க. நைசாக பேசி காரியத்தை சாதிக்க பாருங்கள். காரியம் பெருசா வீரியம் பெருசா, என்று கேட்டால் காரியம் தான் பெருசு என்று நீங்கள் சொல்லணும்.

- Advertisement -