இன்றைய ராசிபலன் – 13 மார்ச் 2024

Rasi-palan-new13
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகம் நிறைந்த நாளாக தான் இருக்கப் போகின்றது. வேலை செய்யும் இடத்தில், நல்ல பெயர் வாங்கினவர்களிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை கூட உண்டாகும். வீட்டில் மனைவியுடன் சண்டை சச்சரவு உண்டாகும். மனதிற்கு பிடித்த நபரின் வாயால் திட்டு வாங்கும்போது மனசுக்கு கஷ்டமாக இருக்கும். கவலைப்படாதீங்க உங்களுடைய தவறுகள் என்ன என்று புரிந்து கொண்டு, தெரிந்து கொண்டு அதை திருத்திக் கொள்ளுங்கள். நல்லதே நடக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று எல்லா வேலையிலும் கொஞ்சம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும். இந்த வேலையை நாளைக்கு செய்யலாம், அந்த வேலையை நாளைக்கு செய்யலாம் என்று உங்களுடைய கடமையிலிருந்து தவறக்கூடாது. சொன்ன வேலையை சரியாக முடித்து தராமல் போனால் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. வழக்கத்தைவிட இன்று கூடுதல் ஓட்டம் இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்க மறக்காம நிறைய தண்ணீர் குடிங்க.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆசைகள் நிறைவேற கூடிய நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக வாங்க முடியாத, மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனதிற்கு பிடித்த நபர்களை சந்தித்து, மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷம் நிறைந்த நாள் இது. சுப செலவுகள் இருக்கும். வேலையிலும் வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் தெரியும். நிதி நிலைமை சீராக இருக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். சொன்ன வேலையை சொன்னபடி செய்து தருவீர்கள். உங்களுடைய திறமைக்கு சிறப்பான அங்கீகாரம் கிடைக்கும். பதிவு உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. சொந்த பந்தங்களுக்குள் இருந்து வந்த விரிசல்கள் சரியாகும். மனசு ஆன்மீகத்தில் ஈடுபடும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று எந்த வேலையையும் அவசரமாக செய்யக்கூடாது. எல்லா வேலையிலும் கொஞ்சம் பொறுமை இருக்க வேண்டும். முக்கிய முடிவு எடுப்பதாக இருந்தால் நாளை தள்ளிப் போடவும். குழந்தைகளின் நலனில் அக்கறை காட்டுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வுகளை திறமையாக எழுதுவீர்கள். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். எந்த முடிவை எடுப்பது என்ற தடுமாற்றம் இருக்கும். இன்று பாசிடிவாவாக யோசித்தால் நல்லது நடக்கும். நெகட்டிவாக யோசித்தால் அதற்கு தகுந்தது போல பிரச்சினைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. காலையிலேயே எழுந்து குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். பிடித்த கலரில் டிரஸ் போட்டுக்கோங்க. பிடித்த சாப்பாடை சாப்பிடுங்க. பிடித்த பாடலை கேளுங்க நிச்சயம் எல்லாம் நல்லபடியாக நடக்கும்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்லது நடக்கும். குடும்ப தகராறுகள் ஒரு முடிவுக்கு வரும். கோர்ட்டு கேஸ் வழக்குகளில் உங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வர வாய்ப்புகள் உள்ளது. கட்டுமான தொழில் செய்பவர்கள் உங்களுடைய தொழிலில் நேர்மையாக நடந்து கொள்ளவும். வேலையில் மேலதிகாரிகளிடம் அனுசரணையாக பேசினால் முன்னேற்றம் அடையலாம்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய வாய்ப்புகள் தேடி வரக்கூடிய நாளாக இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்கள் இன்று இன்டர்வியூக்கு போகலாம். நல்ல ரிசல்ட் கிடைக்கும். பதவி உயர்வுக்காக காத்துக் கொண்டிருப்பவர்கள் அதற்கான வேலைகளை இன்று தொடங்குங்கள். வங்கி கணக்கு தொடங்குவது, எல்.ஐ.சி போடுவது போன்ற உங்கள் எதிர்காலத்திற்கு தேவையான நல்ல முயற்சிகளை இன்று மேற்கொள்ளலாம் நல்லது நடக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்காலத்திற்கு தேவையான நிறைய நல்ல மாற்றங்கள் வரும். ஆனால் உங்களுடைய முன்கோபம் உங்களுக்கு வரக்கூடிய நல்லதை தட்டிக் கழித்து விடும். உணர்ச்சிவசப்பட்டு அடுத்தவர்களை தவறாக புரிந்து தவறாக பேசாதீர்கள். எதுவாக இருந்தாலும் நின்று நிதானமாக யோசிக்கவும். கைநழுவி போன வாய்ப்புகள் திரும்பி வருவதற்கும் வாய்ப்பே கிடையாது. வாய்ப்புகளை சரியான முறையில் பயன்படுத்திக் கொண்டால் உங்கள் வாழ்வில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று அமைதியாக இருப்பது நல்லது. யார் என்ன பேசினாலும் யார் என்ன வேலை செய்தாலும் சரி நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருக்கவும். யாரிடமும் அனாவசியமாக வாக்குவாதம் செய்யாதீங்க. வீண் பிரச்சனைகளில் சிக்கிக் கொண்டால் நஷ்டம் உங்களுக்குத்தான். வாழ்க்கை துணை சொல்படி கேட்டு நடப்பது நல்லது. எந்த பிரச்சினையாக இருந்தாலும் முன்பின் தெரியாத நபரிடம் குடும்ப விஷயங்களை பகிர வேண்டாம்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் மன நிறைவான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாள் பிரச்சனைகள் ஒரு முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடு விலகும். பிள்ளைகளால் மனது மகிழ்ச்சி அடையும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் நிதி நிலைமையை சீர்படுத்தும். கடன் பிரச்சனையை குறைக்கும். மறக்காமல் குலதெய்வ வழிபாடு செய்வது நன்மையை தரும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். கெட்ட பெயர் எடுத்த மேல் அதிகாரிகளிடம் நல்ல பெயர் எடுப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதுநாள் வரை உங்களை தவறாக புரிந்து கொண்டு உங்கள் மீது கோபப்பட்ட எதிரிகள் கூட இன்று நண்பர்களாக மாறலாம். உங்களுடைய அருமை பெருமைகளை அவர்கள் தெரிந்து கொள்வார்கள். அடுத்தவர்கள் கண்களுக்கு இன்று நீங்கள் உயர்ந்த மனிதராக தெரிவீர்கள்.

- Advertisement -