இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2023

apr 13 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலமான பலன்கள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவிக்குள் இருக்கும் நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். சுய தொழிலில் லாபம் உயரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு விழிப்புணர்வு தேவை.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் பலன் தரக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் விடாப்பிடியாக செய்த முயற்சிகள் வீண் போகாது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொது இடங்களில் பொறுமை தேவை. அனாவசிய வாக்குவாதங்கள் வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய பாதைகள் பிறக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் போட்டிகள் அதிகரிக்க கூடிய வாய்ப்பு உண்டு. உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் இனம் கண்டு கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் நன்மை தீமை அறிந்து செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சில திடீர் மாற்றங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய பலம் அறிந்து செயல்படுவீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதை தள்ளி போடுங்கள். கணவன் மனைவிக்குள் வீண் சண்டைகளை வளர்க்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடினமான வேலையும் சுலபமாக இருக்கப் போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தவறுகளை தட்டி கேட்பீர்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுய சிந்தனை இருப்பது நல்லது. குடும்பத்தில் பெரியவர்களை அனுசரித்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கடன் பிரச்சினை தீரும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய தன்னம்பிக்கையை இழக்காமல் இருப்பது நல்லது. எவரையும் மட்டம் தட்டி பேசாதீர்கள். உங்களுடைய விடாமுயற்சி நல்ல வெற்றியை கொடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகள் ஆதரவை பெறுவீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய எண்ணங்கள் பூர்த்தி அடையக் கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுபகாரிய பேச்சு வார்த்தைகள் சூடு பிடிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடினமான உழைப்பு தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பிரச்சனைகள் அவ்வபொழுது வந்து டென்ஷனை கொடுக்கும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிலும் நிதானம் தேவை. கணவன் மனைவி உறவுக்கு இடையே நடக்கும் பிரச்சனைகளை பெரிதாக்காதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு ஆரோக்கியம் சார்ந்த பிரச்சினைகள் தோன்றி மறையும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தேவையில்லாமல் எவரையும் பகைக்காதீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவு நினைவாக கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப அமைதி உண்டாகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு மனதில் தோன்றியதை பேசி விடுவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேல் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுப்பது நல்லது.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது எனினும் எதிலும் அவசரப்படாதீர்கள். சுப காரிய பேச்சு வார்த்தைகள் தள்ளி போகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வரவுக்கு மீறிய செலவு வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் வாகனத்தை பராமரிப்பது நல்லது.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பார்த்த சிலவை கிடைப்பதில் இடையூறுகள் ஏற்படலாம். தேவையற்ற எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்ளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய முறையில் சேமிக்க தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் காணக்கூடிய யோகம் உண்டு.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் லாபம் உண்டாகக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. எதையும் சாதுரியமாக பேசி சாதிக்க முயற்சி செய்வீர்கள். சொல்லிய சொல்லிலிருந்து பின்வாங்காதீர்கள். சுய தொழிலில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த முக்கியத்துவம் கிடைக்கும்.

- Advertisement -