இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2024

Rasi-palan-new13
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். கையை விட்டு பணம் தானாக கரையும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். அனாவசிய செலவு எது, அவசியம் செலவு எது என்று பார்த்து கையில் இருக்கும் படத்தை வெளியே எடுங்கள். இல்லையென்றால் பாக்கெட் காலி. பிறகு இந்த மாதம் கடைசி வரை திண்டாட்டம் இருக்கும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்பி உங்கள் கையில் இருக்கும் பணத்தையும் கொடுக்க வேண்டாம் ஜாக்கிரதை.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷமான நாளாக இருக்கும். வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் தொடங்கும். தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் மீண்டும் நடப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். சுறுசுறுப்பாக வேலை நடக்கும்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஒற்றுமை நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. அதாவது உங்களுடைய உறவுகள் நண்பர்கள் எல்லாம் ஒன்று சேர்வதற்கான வாய்ப்புகள் இருக்கும். சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள். பழைய கதையை பேசி நேரத்தை கடத்துவீர்கள். குறிப்பாக இன்று கலைஞர்களுக்கு நிறைய நல்லது நடக்கும். உங்களுடைய திறமையை பாராட்டும் வகையில் சில பரிசுகளும் கிடைக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். நாலு பேரு மத்தியில் உங்களுடைய கெத்தை காண்பிக்கலாம். உங்களை தரை குறைவாக பேசியவர்கள் முன்னால் தலை நிமிர்ந்து நடப்பதற்கு உண்டான வாய்ப்புகளும் கிடைக்கும். எதிரிகளை வீழ்த்துவதற்கு இது நல்ல சந்தர்ப்பம். தலைகனம் வரக்கூடாது. அதே சமயம் நம்மை தலைகுனிய வைத்தவர்கள் முன்பு தன்னிச்சையாக நம்மை காண்பித்துக் கொள்வதில் தவறு கிடையாது.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக செல்லப் போகின்றது. மனநிறைவோடு அமைதியாக ஓய்வு எடுப்பீர்கள். நிறைய சிக்கல்களில் இருந்து விடுபட்டு இருப்பீர்கள். இறை வழிபாட்டில் மனது ஈடுபடும். முன்னோர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். நீண்ட நாள் பிரிந்த நண்பர்கள் உறவுகளை சந்திப்பதற்கான வாய்ப்புகளும் கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்தவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும். எடுத்த வேலை உடனடியாக முடியாது. கொஞ்சம் இழுவரியாகத்தான் இருக்கும். ஆகவே புதிய முயற்சிகளை நாளை தள்ளி வையுங்கள். அன்றாட வேலைகளில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். எதிர்பாலின நட்போடு ரொம்பவும் நெருக்கமாக இருக்க வேண்டாம். உங்களுடைய மனதில் எந்த தவறான எண்ணமும் இல்லை என்றாலும் சில சிக்கல்களில் சிக்கிக் கொள்ள வாய்ப்பு உள்ளது.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எல்லா விஷயத்திலும் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். நிதி நிலைமை சீராகும். வீட்டிற்கும் மனைவிக்கும் தேவையான ஆடம்பரமான புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கையில் இருக்கும் சேமிப்பு கொஞ்சம் குறையும். இருந்தாலும் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனத்தோடு இருக்கவும்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்வு காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் அறிந்தோ அறியாமலோ என்னைக்கோ செய்த நல்லதின் மூலம் இன்று பெரிய சந்தோஷம் உங்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பங்குச்சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் உங்களை தரை குறைவாக பேசியவர்கள் கூட, உங்கள் திறமையை புரிந்து கொள்வார்கள்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். உங்களுடைய அன்புக்குரியவர் உங்களிடம் வந்து காதலை வெளிப்படுத்துவார்கள். மனசு ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்க போகின்றது. காதல் திருமணம் வரை செல்வதற்கும் வாய்ப்புகள் உள்ளது. எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நேர்வழியில் செல்லுங்கள். தாய் தந்தைக்கு தெரியாமல் எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். எவ்வளவு பிரச்சனைகளாக இருந்தாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்கிறது. அதை தேடி கண்டுபிடித்து விட்டால் நீங்கள் ராஜா தான்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். வாழ்க்கையில் உயர்ந்த நிலைக்குச் செல்லக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். சின்ன சின்ன தவறுகள் செய்து பிரச்சனையில் மாட்டிக் கொண்டவர்கள் கூட, அந்த பிரச்சனையில் இருந்து வெளிவந்து விடுவீர்கள். கடன் சுமை குறையும். வருமானம் அதிகரிக்கும் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் இருந்து கூட உங்களுக்கு அழைப்பு வரலாம். வாய்ப்புகளை தவற விடாதீர்கள். தகுதிக்கு உயர்ந்ததாக இருந்தாலும் முயற்சி செய்யுங்கள் நல்லதே நடக்கும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனக்கவலை இருக்கும். எதையோ இழந்தது போல யோசித்துக் கொண்டே இருப்பீர்கள். குடும்பத்தை பற்றிய கவலை இருக்கும். மன உலைச்சலால் எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாது. திறமையில் கொஞ்சம் பின் தங்கி தான் இருப்பீர்கள். உங்களை பார்த்து நீங்களே திட்டிக் கொள்ளும் அளவிற்கு சில சம்பவங்கள் நடப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு தொடர்ந்து இரண்டு நாள் நல்லது நடந்தால், மூன்றாவது நாள், அந்த நல்லதே பிரச்சினையாக வந்து முடியும். அப்படித்தான் நீங்கள் நல்லது என்று நினைத்து செய்த சில காரியங்களின் மூலம் சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் உஷாரா இருந்துக்கோங்க. யாரையும் கண்மூடித்தனமாக முழுசா நம்பாதீங்க. கூடுமானவரை இறைவழிபாடு செய்வதில் முக்கியத்துவம் கொடுங்கள். காலையில் எழுந்து கடவுளை கும்பிட்டு விட்டு இந்த நாளை தொடங்கினால் நல்லது நடக்கும்.

- Advertisement -