இன்றைய ராசிபலன் – 13 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் மனம் உற்சாகமாக இருக்கும். எதிர்பாராத பொருள் வரவு இருக்கும். உத்தியோகத்தில் உங்களின் திறமையை வெளிப்படுத்தி பாராட்டுகள் பெறுவீர்கள். தொழில், வியாபாரங்களில் எதிர்பார்த்த வருவாய் இருக்கும். மறைமுக எதிரிகள் ஒழிவார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினர் இன்றைய தினம் புதிய முயற்சிகளை ஒத்திவைக்க வேண்டும். எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். பணவரவு திருப்திகரமாக இருக்கும். உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு உயரும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு இருக்கும். பழைய பிரச்சினைகள் அனைத்தும் தீரும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் காரியங்களில் இருந்த தடைகள் விலகும். அரசு அதிகாரிகளின் ஆதரவு இருக்கும். கலைத் தொழிலில் இருப்பவர்கள் நல்ல வாய்ப்பு பெறுவார்கள். பெண்களுக்கு மனம் மகிழ்ச்சி இருக்கும். மருத்துவ ரீதியில் சிலருக்கு பொருள் விரயம் ஏற்படும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் புதிய ஒப்பந்தங்கள் மேற்கொள்ள வேண்டாம். தொழில், வியாபாரங்களில் எதிரிகள் தொல்லை ஏற்படும். குடும்பத்தினர் வழியில் சிலருக்கு வீண் விரயங்கள் ஏற்படும். மனச்சோர்வு இருக்கும். உணவு விடயங்களில் கவனம் தேவை.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்ப்புகள் நீங்கும். திட்டமிட்டு காரியங்களை நடத்தி முடிப்பீர்கள். புதிய மனிதர்களின் அறிமுகத்தால் நன்மைகள் உண்டாகும். குழந்தைகள் வழியில் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் சுறுசுறுப்பு கூடும். சிலர் எதிர்காலத்திற்கான திட்டமிடல்களை மேற்கொள்வார்கள். ஒரு சிலர் ஆடம்பர செலவுகளால் கடன் வாங்க வேண்டி இருக்கும். கலைஞர்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில் இழுபறி நிலை ஏற்படும். ஒரு சிலர் எதிர்பாராத பயணங்களை மேற்கொள்வார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் தன வரவு அதிகரிக்கும். உறவினர்களால் ஏற்பட்ட பிரச்சனை தீரும். சிலர் ஆன்மிக தலங்களுக்கு சென்று வருவார்கள். பணியிடங்களில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினர் இன்றைய தினம் எதிலும் கவனமாக செயல்பட வேண்டும். பணத்தை செலவிடுவதில் சிக்கனம் தேவை. பெரியவர்களின் ஆசிகள் இருக்கும். சிலர் புதிய வேலை வாய்ப்பு கிடைக்க பெறுவார்கள். புதிய முயற்சிகளில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை பெருகும். பெண்கள் வழியில் சிலருக்கு தனலாபம் ஏற்படும். ஒரு சிலர் புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம் பெறுவார்கள். அந்நிய நபர்களால் ஆதாயம் ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரங்களில் நல்ல முடிவு உண்டாகும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் மனமகழ்ச்சி இருக்கும். எதிர்பார்த்த விடயங்கள் அனைத்தும் நிறைவேறும். ஒரு சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள். தொழில், வியாபாரங்களில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் இருக்கும். பெண்களுக்கு நல்ல செய்தி வந்த சேரும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். தொழில், வியாபாரங்களை விரிவுபடுத்தும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சிலருக்கு எதிர்பாராத பணவரவு இருக்கும். பழைய கடன்கள் அனைத்தும் கட்டி தீர்ப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

மீனம்:
மீன ராசியினர் இன்றைய தினம் சுறுசுறுப்புடன் செயல்படுவார்கள். ஒரு சிலருக்கு வாகனங்கள் வழியில் பொருள் விரயம் ஏற்படும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். ஈடுபடும் காரியங்களில் சிறிது தாமதத்திற்கு பிறகு வெற்றி கிடைக்கும். மகான்களின் ஆசிகளை பெறுவீர்கள்.

- Advertisement -