இன்றைய ராசி பலன் – 13-06-2018

astro

மேஷம்:

Mesham Rasiகாரியங்களில் அனுகூலம் உண்டாகும். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள். மனம் உற்சாகமாகக் காணப்படும். உற்சாகமாகக் காணப்படுவீர்கள். இன்றைய பொழுது உங்களுக்கு உற்சாகமாக அமையும். பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

ரிஷபம்:

Rishabam Rasiபிற்பகலுக்குமேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சிலருக்கு வேலையின் காரணமாக வெளியூர் செல்ல நேரிடும். எதிர்பாராத தனலாபம் உண்டாகும். மனம் உற்சாகமாகக் காணப்படும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய காரியங்களில் ஈடுபடவேண்டாம்.

மிதுனம்:

midhunamவாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். வியாபாரத்தில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். பிற்பகலுக்குமேல் தாய் வழி உறவினர்களின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலை நிலவும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதர வகையில் சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும்.

- Advertisement -

இந்த வார ராசி பலன் படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

கடகம்:

Kadagam Rasiபிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வாழ்க்கைத்துணை வழியில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்படக்கூடும் என்பதால் அனுசரித்துச் செல்லவும். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு உண்டாகும்.

சிம்மம்:

simmamஎதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. மாலையில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நடைபெறும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சிலருக்கு வெளியூர்ப் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு அமையும். உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

கன்னி:

Kanni Rasiமுற்பகல் வரை புதிய முயற்சிகள் எதிலும் ஈடுபடவேண்டாம். மாலையில் நீண்டநாள்களாக சந்திக்காமல் இருந்த நண்பர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள். உங்கள் தேவை அறிந்து நண்பர்கள் உதவுவார்கள். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.

துலாம்:

Thulam Rasiதெய்வப் பணிகளில் ஈடுபடக்கூடிய வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத தனலாபம் உண்டாகும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். தொலைதூரத்தில் இருந்து வரும் செய்திகள் உங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும். சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

விருச்சிகம்:

virichigamஅரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். தேவைப்படும் பணம் கடனாகக் கிடைக்கும். ஒரு சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் இடமுண்டு. பிற்பகலுக்கு மேல் அலுவலகப் பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு புண்ணியத் தலங்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும்.

தனுசு:

Dhanusu Rasiஆனால், பிற்பகலுக்குமேல் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்ப்பதை விடவும் கூடுதல் லாபம் கிடைக்கும். காலையில் அன்றாடப் பணிகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தவும். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்படக்கூடும்.

மகரம்:

Magaram rasiஎதிர்பார்த்த சுபச் செய்தி வந்து சேரும். உங்கள் தேவை அறிந்து மற்றவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிற்பகல் வரை வழக்கமான பணிகளையும் கூடுதல் கவனத்துடன் மேற்கொள்ளவும். உங்களின் அறிவார்ந்த பேச்சால் மற்றவர்களைக் கவர்வீர்கள். உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் பொருள் சேர்க்கை உண்டாகும்.

கும்பம்:

Kumbam Rasiநீண்டநாளாக எதிர்பார்த்து காத்திருந்த தகவல் வந்து சேரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.வெளியூரில் இருந்து எதிர்பார்த்த நல்ல தகவல் வந்து சேரும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களின் தரிசனமும் ஆசிகளும் கிடைக்கும்.

மீனம்:

meenamபிள்ளைகளால் பெருமை அடைவீர்கள். அரசாங்க வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். நேரத்துக்கு சாப்பிடக்கூட முடியாதபடி வேலைச் சுமை இருந்துகொண்டே இருக்கும். வாழ்க்கைத் துணை வழியில் மனதுக்கு இனிய சம்பவங்கள் நிகழும். ரேவதி

உங்கள் ராசிக்கான இன்றைய ராசி பலன் உங்களுக்கு நன்மை அளிக்க எங்களது வாழ்த்துக்கள்.