இன்றைய ராசி பலன் – 13-2-2020

rasi palan - 13-2-2020

மேஷம்:
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து காணப்படும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் சீராக இருக்கும். புதிய முயற்சிகளை யோசித்து செயலாற்றுவது நல்லது. வியாபாரம் செய்பவர்களுக்கு கடும் போட்டிகள் நிலவும். எனினும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை நிலவும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். ஆசிரியர்களால் பாராட்டப்படுவீர்கள். பெண்களுக்கு சாதகமான சூழ்நிலை இருக்கும். முயற்சிகள் தடையின்றி கைகூடும். சிவ பெருமானை வழிபடுவதன் மூலம் இன்றைய நாள் நல்ல பலன் தரும் நாளாக இருக்கும்.

ரிஷபம்:
Rishabam Rasi
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே அன்யோன்யம் இருக்கும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் சாதகமான சூழ்நிலை காணப்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். நண்பர்களுடன் மகிழ்ச்சியாக இன்றைய நாளை கழிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு காரணமாக சில பிரச்சனைகள் ஏற்படலாம். சக பணியாளர்களிடம் நட்பு பாராட்டுவது நல்லது. கூட்டுத் தொழில் புரிபவர்களுக்கு பங்குதாரர்கள் மூலம் சில சங்கடங்கள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. மாணவர்களின் அறிவாற்றல் அபரிமிதமாக இருக்கும். போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு ஆரோக்கியத்தில் சில குறைபாடுகள் ஏற்படலாம் கவனம் தேவை.

மிதுனம்:
midhunam
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் லாபகரமான நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நல்ல செய்தி ஒன்று கிடைக்கப் பெறும். உங்களின் வேண்டுதல்கள் நிறைவேறும் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல தகவல் உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வியாபார விருத்திக்கு சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். மாணவர்கள் கல்விக்கு உதவிகள் கிட்டும். பெண்களுக்கு வீண் விரயங்கள் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு. மனதிற்கு பிடித்தவர்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

கடகம்:
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொறுமையை கடைப்பிடிக்கக் கூடிய ஒரு நாளாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிட்டும். மனதிற்கு ஒரு புத்துணர்ச்சி கிடைக்கும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியாக காணப்படுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய முதலீடுகளை நம்பி செயல்படும் நாளாக இருக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். பெண்கள் தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை. வழக்குகள் தொடர்பான விஷயத்தில் வெற்றி கிட்டும்.

சிம்மம்:
simmam
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் நாளாக இருக்கும். திடீர் பணவரவு ஏற்பட்டு குடும்பத்தில் குதூகலம் காணப்படும். அரசாங்க விஷயத்தில் அனுகூலம் உண்டாகப் பெறும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் தொந்தரவு அதிகரிக்கும். எனினும் பணியாளர்களின் ஒத்துழைப்பால் சமாளித்துவிடுவீர்கள். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். வியாபார விருத்திக்கு புதிய முயற்சிகளைத் செயல்படுத்தலாம். பெண்கள் அதிக வேலைபளு காரணமாக சோர்வுடன் காணப்படுவீர்கள். மாணவர்களின் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. சிந்தனைகள் ஒருமுகத்துடன் இருப்பதற்கு பழகிக் கொள்ள வேண்டும். கணவன் மனைவியிடையே அன்பு அதிகரிக்கும்.

கன்னி:
Kanni Rasi
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சுமூகமான சூழ்நிலை காணப்படும். மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிட்டும். வியாபாரம் செய்பவர்கள் முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபார விருத்திக்கு ஆலோசனைகளை நாடி செல்வீர்கள். மாணவர்கள் கல்வியில் மிகுந்த கவனத்துடன் இருப்பது நல்லது. பெற்றோர்களிடம் மரியாதையாக நடந்து கொள்வது அவசியமான ஒன்றாக இருக்கும். பெண்கள் மன மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். தந்தை வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. புதிய நண்பர்களின் சேர்க்கையினால் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படும். எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்கள் நிறைந்த நாளாக இருக்கும். கணவன் மனைவியிடையே சிறுசிறு சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு மறையும். ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு, ஊதிய உயர்வு போன்றவற்றில் சாதகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளை கற்றுக் கொள்வதற்கான சாத்தியக்கூறுகள் உண்டு. மாணவர்களின் கல்வியில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. சிந்தனைகளை அலைபாய விடுவது உகந்ததல்ல என்பதை நினைவில் கொள்ளவும். சுயதொழில் புரியும் பெண்கள் நிறைய சவால்கள் சமாளிக்கக்கூடிய சூழ்நிலையில் இருப்பீர்கள்.

விருச்சிகம்:
virichigam
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக இருக்கும். பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும் தனவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு. வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபார விருத்திக்கான சில உத்திகளை கற்றுத் தேர்வதற்கான சாதகமான சூழ்நிலை காணப்படும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய சாதனைகளைப் புரிவீர்கள். சுயதொழில் புரியும் பெண்களுக்கு நேர விரயங்கள் ஏற்பட்டு மன உளைச்சலை தரும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டு.

தனுசு:
Dhanusu Rasi
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இறை வழிபாடுகளில் கவனம் செலுத்த வேண்டிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டிய நாளாக இருக்கும். கவனமின்மை காரணமாக சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு தங்களின் முழு உடல் உழைப்பை தந்து வெற்றி பெறும் நாளாக இருக்கும். மாணவர்கள் கல்வியில் கூடுதல் கவனம் தேவை. வேலை வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பவர்களுக்கு நற்செய்தி கிட்டும். குடும்பத்தில் மூன்றாம் நபர்களிடமிருந்து தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. துர்க்கையை வழிபடுவதன் மூலம் நல்ல பலன் காணலாம்.

மகரம்:
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத செலவுகள் ஏற்படும். நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளிடம் இணக்கமாக செயலாற்றுவது நல்லது. பொருளாதார முன்னேற்றம் சீராக இருக்கும். எதிர்பார்த்த காரியங்கள் சில தடைகளைச் சந்தித்து வெற்றி பெறும். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். மாணவர்களின் கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் சிறப்பான வெற்றி பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்துவீர்கள். எதிர்பாராத செலவுகளால் கடன் பிரச்சினைகள் ஏற்படலாம் எனவே எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். ஈசனை வழிபடுவதன் மூலம் நல்ல பலன் காணலாம்.

கும்பம்:
Kumbam Rasi
கும்ப ராசிகாரர்களுக்கு இன்றைய நாள் சேமிப்பின் முக்கியத்துவத்தை உணரக்கூடிய நாளாக இருக்கும். அவசியத் தேவைக்கு கூட என்ன செய்வது என்று தெரியாது குழம்பிப் போவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு பொருளாதாரப் பற்றாக்குறை ஏற்படும். கடன் பிரச்சினைகள் மேலோங்கி காணப்படும். மாணவர்கள் கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். புதிய நண்பர்களின் சேர்க்கையில் எச்சரிக்கை தேவை. சுயதொழில் புரியும் பெண்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். குடும்பத்தில் எதிர்பாராத நபர்களின் வருகையால் குதூகலத்துடன் காணப்படும். திருமணம் போன்ற சுபகாரிய முயற்சிகளில் ஈடுபட்டு உள்ளவர்களுக்கு சற்று கால தாமதம் ஏற்படும்.

மீனம்:
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பொருளாதார பற்றாக்குறை இருப்பினும் சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமை காரணமாக சோர்வு இருக்கும். தியானம் செய்வதன் மூலம் நல்ல பலன் காணலாம். வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் படிப்படியாக நீங்கும். சுபகாரிய முயற்சிகள் வெற்றி தரும். மாணவர்களின் கல்வியில் பெற்றோர்கள் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. சுயதொழில் புரியும் பெண்களுக்கு மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிட்டும்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.