இன்றைய ராசி பலன் -14-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham

உங்கள் விருப்பத்தின் படி புதிய பொருட்களை வாங்கும் யோகம் உண்டாகும். நண்பர்களின் உதவி கிட்டும். புதிய முயற்சிகளால் அனுகூலம் உண்டாகும். அலுவலக பணிகளில் உற்சாகமாக ஈடுபடுவீர்கள். எதிர்பார்த்த பணம் வரக்கூடும். வியாபாரத்தில் கூடுதலான வருமானம் கிடைக்கும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
விருந்தினர்கள் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் சிறுசிறு சலசலப்பு உண்டாகும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய முயற்சிகளில் தாமதம் ஏற்படும். அலுவலக பணிகள் வழக்கம் போல் காணப்படும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் வின் செலவுகள் ஏற்படக்கூடும்.

மிதுனம்:
பெற்றோர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். இன்று தெய்வ வழிபாட்டின் காரணமாக குடும்பத்தாருடன் பயணம் செய்ய நேரிடலாம். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இன்று பொறுமையை கடை பிடிக்கவேண்டிய நாள்.

- Advertisement -

கடகம் :
Kadagam

பிள்ளைகளின் தேவைகளை அறிந்து நிறைவேற்றுவீர்கள். தாய் வழி உறவு வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். எதிர்பார்த்த பணம் வந்து சேரலாம். கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத பயணம் மேற்கொள்வீர்கள். வியாபாரத்தில் பணியாளர்களால் வீண்செலவுகள் ஏற்படும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் இன்று ஈடுபட வேண்டாம்.

சிம்மம்:
simam
அனுகூலமான நாள். பள்ளி நண்பர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டாகும். தந்தையின் தேவையை நிறைவேற்றி மகிழ்வீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு பாராட்டுவார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தாரால் ஆதாயம் உண்டாகும்.

கன்னி:

பிள்ளைகளால் தலை நிமிர்ந்து நிற்பீர்கள். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சிலர் குடும்பத்தாருடன் கோவில்களுக்கு பயணம் செய்விர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நிதானமாக செயல்பட வேண்டிய நாள்.

துலாம்:

மகிழ்ச்சியான நாள். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் கூடுதலாக அமையும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெற்றோர்களின் அரவணைப்பு கிடைக்கும்.

விருச்சிகம்:

இன்று மன உறுதியுடன் காணப்படுவீர்கள். பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். சில முக்கிய முடிவுகள் எடுக்கும் பொது குடும்பத்தில் ஆலோசித்து எடுங்கள். அலுவலகத்தில் பணிகளை முடிக்க பணியாளர்களின் உதவியை நாடுவீர்கள். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்து கொள்வது நல்லது.

தனுசு:

அனுகூலமான நாள். புதிய ஆபரணங்கள் வாங்கும் யோகம் வரும். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். விருந்தினர்கள் வருகையால் வின் செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

மகரம்:
magaram
புதிய முயற்சிகளை தவிர்த்து கொள்ளுங்கள். அரசு சார்ந்த காரியங்கள் முடிவதில்லை தாமதம் ஏற்படும். குடும்பத்தாருடன் கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்விர்கள். மலையின் வீட்டிற்கு உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும்.

கும்பம்:

அரசாங்க சார்ந்த பணிகள் முடிவதில்லை தாமதம் ஏற்படும். தாய்வழி உறவுகளிடம் இருந்து நல்ல செய்தி வந்து சேரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். அலுவலக பணிகளை சுறுசுறுப்பாக செய்து முடிப்பீர்கள். திடீர் பயணம் மேற்கொள்வீர்கள். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அனுகூலமான நாளாக அமையும்.

மீனம்:

குடும்பத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் உரிய நேரத்தில் கைக்கு வந்து சேரும். சகோதரர்கள் உங்களுக்கு பக்கபலமாக இருப்பார்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். அலுவலகத்தில் உங்கள் பணியை கண்டு அதிகாரிகள் பாராட்டுவார்கள். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -