இன்றைய ராசிபலன் – 14 பிப்ரவரி 2024

Rasi-palan-new14
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையில் ஏதாவது ஒரு காரியத்தில் சாதித்தே ஆக வேண்டும் என்று அயராது முயற்சி செய்வீர்கள். உங்களுக்கு ஆர்வக்கோளாறு அதிகமாக இருக்கும். ஆர்வக்கோளாறு இருப்பது தவறு கிடையாது. ஆனால் எதையும் ஒரே நாளில் சாதிக்க முடியாது. படிப்படியாக முன்னேறில் தான், அந்த முன்னேற்றம் நிலையாக நிற்கும் என்பதையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இதனால் நிறைய நல்ல விஷயங்கள் கெட்டதாக மாற வாய்ப்பு உள்ளது. எப்படியாவது இன்று ஆர்வக்கோளாறை அளவுடன் வெளி காட்டுங்கள் போதும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் வாங்கி விட்டோம் என்று கவனக்குறைவோடு வேலைகளை கையில் எடுக்கக் கூடாது. எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்றும் அலட்சியமாக இருக்கக் கூடாது. நிறைய அனுபவ சாலியாக இருந்தால் கூட, வேலையில் இன்று தவறு நடக்க வாய்ப்பு உள்ளது. அலட்சியம் வேண்டாம். தொழில் செய்யும் இடத்தில் கூடுதல் கவனத்தோடு செயல்படுங்கள். கணக்கு வழக்குகளை ஒன்றுக்கு பலமுறை சரி பாருங்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு கடனுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்ய வேண்டாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சில பேருக்கு சம்பள உயர்வு இன்சென்டிவ் கிடைக்கக்கூட வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யாதீர்கள். கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத நல்லது நடக்கும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று புது வாய்ப்புகள் வீடு தேடி வரப் போகின்றது. நீண்ட நாள் எதிர்பார்த்த நல்லதை பெறக்கூடிய நேரமும் காலமும் கூடி வரும். சந்தோஷம் மனதில் இரட்டிப்பாகும். நிதி நிலைமை சீராக இருக்கும். உங்களுக்கும் வீட்டுக்கும் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன் மனைவி அன்பு பலப்படும் குழந்தைகளால் மனது சந்தோஷம் அடையும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட நாள் ஆசை நிறைவேற கூடிய நாளாக இருக்க போகின்றது. ஆடம்பரமான பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். வெளிநாட்டுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்திருப்பீர்கள். இதெல்லாம் உங்கள் கைக்கு எட்டா கனியாக இருந்திருக்கும். ஆனால் ஒரு சில பேருக்கு அதற்கான வாய்ப்புகள் இன்று கிடைக்கும். வாய்ப்புகளை நழுவ விடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள். வெளிநாட்டுக்கும் போகலாம் நெனச்ச படிப்பையும் படிக்கலாம்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கஷ்டம் நிறைந்த நாளாகத்தான் இருக்கும். ரொம்பவும் பிடித்தவங்க கிட்ட சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உறவுகளுக்கு இடையே பேசும்போது ஜாக்கிரதையாக பேசுங்கள். வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். கவனக்குறைவால் நீங்கள் செய்யும் தவறு பெரிய அளவில் பிரச்சனைகளை வெளிப்படுத்தும். தொழிலில் புதிய முதலீடு செய்ய வேண்டாம். பாட்னரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். இன்று பண பரிவர்த்தனை செய்யாதீங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். காதல் கைகூடும். நீண்ட நாள் கனவு நிறைவேறும். பல வருடங்களாக போராடிய ஒரு விஷயத்தை வெற்றிக்கான இன்று சிறப்பான நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகள் ஒன்று சேர்வதன் மூலம் மகிழ்ச்சி நிலவும். கமிஷன் தொழில் செய்பவர்கள் கவனமாக இருங்கள். முன்பின் தெரியாதவர்களுக்கு எந்த ஒரு வேலையையும் செய்து தரேன் என்று வாக்கு கொடுக்காதீங்க.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். அந்த இறைவனின் மேல் பாரத்தை போட்டுவிட்டு உங்கள் பாதையில் நீங்கள் சென்று கொண்டே இருப்பீர்கள். இடையே எவ்வளவு பெரிய இடியே விழுந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டீங்க. உங்கள் பாதையில் குறுக்கிட நிறைய தடைகள் மனித ரூபத்தில் வரும் அவர்களுக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுக்காததால் புது எதிரிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பல் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலையாக இருந்தாலும் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்வீர்கள். அலுவலக வேலையை அப்படி சொல்ல முடியாது அல்லவா. தினமும் செய்யக்கூடிய வேலையை செய்துதான் ஆக வேண்டும். ஆகவே கொஞ்சம் உற்சாகத்தை வரவைத்துக் கொண்டு அன்றாட வேலைகளை மட்டும் முடித்து விடுங்கள். இல்லை என்றால் நாளைக்கான வேலை இரட்டிப்பாக மாறிடும்.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் கிடைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. உங்களை யாராவது உயர்த்தி பேசி விட்டால் போதும். அப்படியே ஐஸ் வைத்தது போல நீங்களே அவர்களுக்கு தேவையான எல்லா வேலைகளையும் செய்து முடித்து விடுவீர்கள். உங்களை ஏமாற்றி கைக்குள் போட்டுக் கொண்டு எல்லா வேலையையும் செய்து முடிக்க நாலு பேர் தயாராக இருப்பாங்க. ஜாக்கிரதையா இருந்துக்கோங்க இன்னைக்கு உங்களுக்கு கிடைக்கக்கூடிய பாராட்டு, உங்களை புகழ்வதற்காக அல்ல. உங்களிடம் இருந்து வேலையை நைசாக வாங்குவதற்காக.

கும்பம்


கும்ப ராசிக்காரர்கள் இன்று எந்த விஷயத்தையும் பெருசாக எடுத்துக்காதீங்க. பெரிய அளவில் பிரச்சனை நடந்தாலும் அமைதியாக இருக்கவும். பெரிய அளவில் சந்தோஷம் வந்தாலும் அமைதியாக இருக்கவும். நடக்க வேண்டியது தானாக நடக்கும். வேலை செய்யும் இடத்தில் ரொம்ப ரொம்ப கவனமா இருந்துக்கோங்க பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதைவிட அதிக கவனம் தேவை நாளுக்கு நாள் கடன் வாங்கி தப்பு செய்யாதீங்க. ஆடம்பரத்தை அடியோடு நிறுத்துங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணம் அலைச்சலை கொடுக்க வாய்ப்புகள் உள்ளது. வேலையில் பயங்கர சிக்கல் இருக்கும். கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை நிலவும். கவலைப்படாதீங்க பொறுமையாக யோசிச்சீங்கன்னா இந்த நாள் இறுதியில் எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு முடிவு வந்துவிடும். அவசரப்பட வேண்டாம். ஆரோக்கியமான உணவை அளவோடு சாப்பிடுங்க புத்தி சரியாக வேலை செய்யும்.

- Advertisement -