இன்றைய ராசிபலன் – 14 மார்ச் 2023

mar 14 2023
- Advertisement -

மேஷம்
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன உளைச்சலில் இருந்து விடுபட்டு புத்துணர்வுடன் உணரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. சகோதர சகோதரிகளின் உதவிகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய அனுபவங்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் செலவுகளை தள்ளி வையுங்கள்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய அறிவுக்கு தீனி போடக்கூடிய அமைப்பாக இருக்கிறது. எதிர்பாராத திருப்பங்கள் நடக்கும். குடும்ப உறவுகளுக்கு இடையே அனுசரிப்பு தேவை. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தீட்டிய திட்டங்கள் நிறைவேறும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் புதிய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கடின உழைப்பு கொடுக்கக்கூடிய அமைப்பாக இருக்கிறது. மற்றவர்களுடைய வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் உங்களை புரிந்து கொள்வார்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நட்பு மலரும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முதலீடுகள் நஷ்டத்தை கொடுக்கக்கூடும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. உங்களுடைய கனவுகள் நினைவாக கூடிய அமைப்பாக உள்ளது. மனதிற்கு பிடித்தவர்களிடமிருந்து மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. சுய தொழிலில் லாபம் இரட்டிப்பாகும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செலவுகள் அதிகரிக்கும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உறுதியான மனப்போக்குடன் காணப்படுவீர்கள். பெற்றோர்களுடைய ஆசீர்வாதம் கிடைக்கும். மனதை அலைபாய விடாதீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சுலபமான வேலையும் கடினமாக இருக்க வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் நெருங்கியவர்களை புறக்கணிக்காதீர்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிமையான நல்ல நாளாக அமையப் போகிறது. எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் வரக்கூடும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய முதலீடுகள் மூலம் லாபம் பெருகும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய ஆற்றலை மற்றவர்களுக்காக செலவிடக் கூடிய அமைப்பாக இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணம் வந்த வழியே திரும்பி செல்லும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முக்கிய முயற்சிகள் பலிதமாக கூடிய நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எடுக்கக்கூடிய முடிவுகளில் இருந்து பின் வாங்க வேண்டாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்க கூடிய யுக்திகள் தெரிய வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் கணக்கு வழக்குகளில் கவனசிதரலுடன் இருப்பீர்கள்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாட்கள் உங்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரத்தை பெறக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. அரசு வழி காரியங்களில் தடைப்பட்டு கொண்டிருந்த விஷயங்கள் நடைபெறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிரிகளும் நண்பர்கள் ஆவார்கள். உத்தியோகஸ்தர்களுக்கு குழப்பமான மனநிலை நீடிக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய கனவு மெய்ப்பிக்க கூடிய அமைப்பாக இருக்கிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே சண்டை சச்சரவுகள் அவ்வப்பொழுது தோன்றி மறையும். சுய தொழிலில் உள்ளவர்கள் எதையும் அன்பளிப்பாக வாங்குவதில் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு சக போட்டியாளர்கள் அதிகரிப்பர்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் சுப செய்திகளை பெறக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு உடல் சோர்வு ஏற்படும், ரிலாக்ஸ் தேவை. யோகா மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய இயல்பான பேச்சு மற்றவர்களை எளிதாக கவரும் வண்ணம் அமைய இருக்கிறது. திருமண வாழ்க்கையில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடமைகள் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்களுடைய திறமையை நிரூபிக்க பாடுபடுவீர்கள்.

- Advertisement -