இன்றைய ராசி பலன் – 14-04-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:

Mesham Rasi
மகிழ்ச்சியான நாளாக அமையும். செலவுகள் அதிகரித்தாலும் தேவையான பணம் கையில் இருப்பதால், உற்சாகமாகச் சமாளித்துவிடுவீர்கள். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். கோயில்களுக்குச் சென்று வழிபடுவீர்கள். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும். மாலையில் நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும். அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:

- Advertisement -

Rishabam Rasi
உற்சாகமான நாளாக அமையும். மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பொருள் வரவுக்கு வாய்ப்பு உண்டு. வாழ்க்கைத்துணைவழி உறவுகளிடம் எதிர்பார்த்த காரியம் நல்லபடி முடியும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மிதுனம்:

Mithunam Rasi
இன்று எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். துணிச்சலாக சில முடிவுகளை எடுப்பீர்கள். சகோதர வகையில் சுபச் செலவுகள் ஏற்படக்கூடும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால், உற்சாகமாக இருப்பீர்கள். சக பணியாளர்கள் அனுசரணையாக நடந்துகொள்வார்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைக்கும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

கடகம்:

- Advertisement -

Kadagam Rasi
இன்று உற்சாகமாகக் காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் வீட்டில் கலகலப்பான சூழ்நிலை காணப்படும். சுபநிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வாய்ப்பு ஏற்படக்கூடும். தாய்வழி உறவுகளால் நன்மை உண்டாகும். தந்தையின் உடல் ஆரோக்கியம் மேம்படும். அலுவலகத்தில் பணிச்சுமையிலிருந்து விடுபடுவீர்கள். உற்சாகமாகப் பணிகளில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனை நடப்பதுடன் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தினருடன் கோயில்களுக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

சிம்மம்:

simmam
தேவையான பணம் கையில் இருக்கும். காரியங்கள் முடிவதில் தாமதம் ஏற்பட்டாலும் முடித்துவிடுவீர்கள். இளைய சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பு நன்றாக இருக்கும். விற்பனையும் விறுவிறுப்பாக நடைபெறும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவழி உறவுகளால் ஆதாயம் ஏற்படும்.

கன்னி:

- Advertisement -

Kanni Rasi
தந்தை வழி உறவுகளால் பணவரவுக்கு வாய்ப்பு ஏற்படும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதில் பெரியவர்களின் ஆலோசனை அவசியம். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். சிலருக்கு கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றும் வாய்ப்பு உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாக இருப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும். சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்பு கிடைக்கும்.

துலாம்:

Thulam Rasi
உற்சாகமான நாள். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். மாலையில் குடும்பத்துடன் உறவினர் வீட்டு விசேஷத்தில் கலந்துகொள்வீர்கள். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலையே காணப்படும். வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தெய்வப் பணிகளில் ஈடுபடும் வாய்ப்பு ஏற்படும்.

விருச்சிகம்:

virichigam
தெய்வ அனுகிரகம் நிறைந்த நாளாக இருக்கும். காரியங்களில் சிறுசிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிந்துவிடும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். மாலையில் சிலருக்கு புதிய ஆடை ஆபரணங்களை வாங்கும் யோகம் ஏற்படக்கூடும். அலுவலகத்தில் அதிகாரிகளிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் இருந்தாலும், பணியாளர்களால் செலவுகளும் ஏற்படும். கேட்டை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்கவும்.

உங்கள் ராசிக்கான 2018 தமிழ் புத்தாண்டு பலன்களை படிக்க இங்கு கிளிக் செய்யவும்.

தனுசு:

Dhanusu Rasi
காரியங்களில் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியுடன் செலவும் உண்டாகும். வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி ஏற்படும். அலுவலகத்தில் உங்கள் ஆலோசனை ஏற்றுக்கொள்ளப்படுவதுடன் பாராட்டும் கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்வழியில் நன்மைகள் ஏற்படும்.

மகரம்:

Magaram rasi
எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும். சிலருக்குக் குடும்ப விஷயமாக வெளியூர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும். மாலையில் உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும். வாழ்க்கைத்துணைவழி உறவுகளுக்காக செலவு செய்யவேண்டி வரும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணை ஆதரவும் ஒத்துழைப்பும் தருவார். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். வியாபாரம் வழக்கம்போலவே இருக்கும். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் செலவுகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

Kumbam Rasi
தந்தை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். மாலையில் குடும்பத்துடன் கோயில்களுக்குச் சென்று பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் நீங்கள் எதிர்பார்த்த சலுகை இன்று கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் பங்குதாரர்களால் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். என்றாலும் அதனால் பாதிப்பு இல்லை. சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும்.

மீனம்:

Meenam Rasi
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். வெளியூர்ப் பயணங்களைத் தவிர்ப்பது நல்லது. உறவினர்கள் வருகையால் சிற்சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி வரும். கணவன் – மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும். அலுவலகப் பணிகளில் கூடுதல் கவனம் தேவைப்படும். வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும். பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

இந்த நாளுக்குரிய ராசி பலன் உங்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் நன்மையாக அமைய எங்கள் வாழ்த்துக்கள்.

- Advertisement -