இன்றைய ராசிபலன் – 14 ஏப்ரல் 2023

apr 14 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திருப்பங்கள் எல்லாம் நடக்கப் போகிறது. குடும்பத்தில் உள்ள பெரியவர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு செயலில் வேகம் கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் நம்பி கொடுத்த முக்கிய பொறுப்புகளை சரியாக செய்து கொடுப்பது நல்லது.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இன்பம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. கணவன் மனைவி இடையே நடக்கும் பிரச்சனைகள் பெரிதாகாமல் விட்டுக் கொடுத்துச் செல்லுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதையும் சாதித்து காட்டக்கூடிய தைரியம் வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் தலைமை பொறுப்பை ஏற்பீர்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களாலும் முடியும் என்பதை நீங்கள் தன்னம்பிக்கையுடன் முயற்சி செய்வீர்கள். வாகன போக்குவரத்துகளில் கவனமுடன் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நல்ல செய்தி இல்லம் தேடி வரும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் முன் கோபத்தால் தேவையில்லாத இழப்புகளை சந்திக்கலாம்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் இனிய அனுபவங்கள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. சுற்றி இருப்பவர்களை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சகோதரர்கள் வழியில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் எடுக்கக்கூடிய நாளாக இருக்கிறது.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சிந்தனை திறன் அதிகரிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. உங்களுடைய கற்பனை வளத்திற்கு அளவே இல்லாமல் செல்லும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பெரிய மனிதர்களுடைய ஆதரவு கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் உங்களுடைய நடவடிக்கைகளில் சில மாற்றங்களை கொண்டு வருவீர்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதில் ஒரு இனம் புரியாத பயமும், பதட்டமும் இருக்கும். உற்றார், உறவினர்களுடைய ஆதரவு குறையும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை வரக்கூடும் என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையில்லாத விஷயங்களில் மூக்கை நுழைக்காமல் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. சுய தொழிலில் லாபம் உயரும் இதனால் பொருளாதாரம் சீராக இருக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகம் உழைக்கக்கூடிய நாளாக இருக்கப் போகிறது.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிக்க கூடிய நல்ல நாளாக இருக்கிறது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு சகிப்புத்தன்மை தேவைப்படக்கூடிய அமைப்பாக இருக்கிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தடைகளைத் தாண்டி வெற்றி இலக்கை அடைவீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. எதையும் ஒன்று இரண்டு முறை சிந்தித்து செயல்படுங்கள். முக்கிய முடிவுகளை ஒத்தி போடுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு இழுபறியாக இருந்த வேலைகள் நடக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நினைத்தது பூர்த்தியாகும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனோதிடம் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. எவரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது உத்தமம். எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தை கொடுக்க கூடும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத ஒப்பந்தங்கள் கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரம் உயரும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடை இன்றி முடிவடையும். சுப காரியங்களில் இருந்து வந்த மந்தநிலை மாறும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு புதிய நட்புகள் மலர வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்கள் பகைவர்களின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் செய்யும் முயற்சிகள் வெற்றி அடையக்கூடிய நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணும் யோகம் உண்டு. சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவதில் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சூழ்நிலை அறிந்து எதையும் முடிவெடுப்பது நல்லது.

- Advertisement -