இன்றைய ராசி பலன் – 14-1-2021

rasi palan - 14-1-2021

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத பணவரவு மகிழ்ச்சியை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடும் நேரம் இனிமையாக இருக்கும். பெண்கள் இறை வழிபாடுகளில் அதிக ஆர்வம் செலுத்துவீர்கள்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் யோகம் தரும் அமைப்பாக இருக்கிறது. உங்கள் ராசிக்கு பணம் பல வழிகளில் வந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத தனவரவு குடும்பத்தில் குதூகலத்தை ஏற்படுத்தும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புது உற்சாகம் தரக்கூடிய அற்புதமான நாள். தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்தநிலை மாறி முன்னேற்றம் காண்பீர்கள். புதிய பொருள் சேர்க்கை உண்டாகும் வாய்ப்புகள் உண்டு.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்த்த விஷயங்கள் எதிர்பார்த்த படியே நடக்கும் என்பதால் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளுடன் இருந்து வந்த பிரச்சினைகள் குறையும். தொழில் மற்றும் வியாபாரம் செழிப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சாதுர்யமாக செயல்பட்டு பல வெற்றிகளை அடைவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அன்பும் நிறைந்து காணப்படும். கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். சுய தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் தொட்டதெல்லாம் துலங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை மாறி புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவீர்கள். கணவன்-மனைவி இடையே புதிய புரிதல் நெருக்கத்தை அதிகரிக்கும்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்ததெல்லாம் நடக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்களுடைய நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும் சந்தர்ப்பங்கள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நண்பர்களின் ஆதரவு முன்னேற்றத்தை தரும் வகையில் அமையும்.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் முன்னேற்றத்தை சந்திப்பீர்கள். இதுவரை இல்லாத புதிய தன்னம்பிக்கை உங்களுக்கு பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பாதை பிறக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான வர்த்தகம் சிறப்பாக இருக்கும். கூடுமானவரை குடும்பத்தில் அமைதி காக்க விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத வகையில் திடீர் திருப்பங்கள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பல நன்மைகள் நடைபெறும் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களில் மற்றவர்களை எளிதாக எடை போட்டு விடாதீர்கள். இறை வழிபாட்டு ஆர்வம் செலுத்தினால் நன்மைகள் நடைபெறும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பலன் அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. உங்களுடைய வேடிக்கையான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவரும் திறமை கொண்டிருப்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு உயரும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீண்ட நாள் கனவு ஒன்று நடக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் மற்றும் வியாபார ரீதியாக கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அமையும். வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். குடும்பத்தில் உங்களுடைய ஆதரவு அதிகரிக்கும்.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுப காரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் குடும்பத்துடன் செலவிடக் கூடிய நேரம் இனிமையாக இருக்கும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தை காணலாம். பணியாளர்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது மூலம் ஏற்றம் பெறுவீர்கள்.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்