இன்றைய ராசி பலன் – 14-10-2017

Rasi Palan

மேஷம்:

mesham

மனம் உற்சாகமாகக் காணப்படும். தாய்வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் உங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்து, அதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். மாலையில் உறவினர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக அமையும்.

அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தாய்மாமன் வழியில் ஆதாயம் உண்டாகும்.

ரிஷபம்:

rishabam

- Advertisement -

இன்று உங்களுக்கு எதிர்பாராத தனலாபம் கிடைக்கும். வாழ்க்கைத்துணையால் மதிப்பும் மரியாதையும் கூடும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். அலுவலகத்தில் உற்சாகமான சூழ்நிலை காணப்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும்.

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு விருந்து விசேஷங்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு உண்டாகும்.

மிதுனம்:

Midhunam

புதிய முயற்சிகள் எதுவும் இன்றைக்கு வேண்டாம். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் சக ஊழியர்கள் உங்கள் பணிகளில் உதவி செய்வார்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு திடீர்ப் பயணம் மேற்கொள்ள நேரிடும்.

கடகம்:

Kadagam

சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும். அலுவலகத்தில் இணக்கமான சூழ்நிலையே காணப்படுகிறது. புதிய முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளவேண்டாம்.

ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைப்பட்டு முடியும்.

சிம்மம்:

simam

இன்று உங்களுக்கு மகான்களின் தரிசனமும் அவர்களின் ஆசிகளும் பெறும் வாய்ப்பு உண்டாகும். தாயின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரும். அவரிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் உற்சாகமாக செய்து முடிப்பீர்கள்.

உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

கன்னி:

மனம் உற்சாகமாகக் காணப்படும். தாய்மாமன் மூலம் ஆதாயம் கிடைக்கும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். காரியங்களில் தடை ஏற்பட்டாலும் சாதகமாக முடியும். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார்.

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம்:

காலையில் சற்று சோர்வாக இருந்தாலும், முற்பகலுக்கு மேல் உற்சாகமாகச் செயல்படுவீர்கள். சகோதரர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். சிலருக்கு அலுவலகப் பணிகளின் காரணமாக வெளியூர்ப் பயணங்கள் செல்ல நேரிடும். தந்தையை அனுசரித்துச் செல்வது நல்லது.

விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவது சாதகமாக முடியும்.

விருச்சிகம்:

சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். பிற்பகலுக்கு மேல் சில சங்கடங்களைச் சமாளிக்கவேண்டி இருக்கும். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமை அவசியம்.

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

தனுசு:

மனதில் உற்சாகம் பெருக்கெடுக்கும். தாய்வழியில் நன்மைகள் உண்டாகும். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரித்தாலும் உற்சாகமாகச் செய்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும். சந்திரனால் மனதில் சிறு சலனம் ஏற்படக்கூடும்.

மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு மகான்களை தரிசித்து, ஆசிகளைப் பெறும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்:

magaram

உற்சாகமாகச் செயல்படுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். சுக்கிரன் அருளால் வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தாய்மாமன் வகையில் எதிர்பாராத செலவுகள் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கும்.

அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு காரியங்களில் தடைகள் ஏற்படக்கூடும்.

கும்பம்:

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வழக்கமான பணிகளிலும் கூடுதல் கவனம் தேவைப்படுகிறது. சகோதர வகையில் சிற்சில சங்கடங்கள் ஏற்பட்டு சரியாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிலருக்கு திடீர் பயணங்கள் ஏற்படக்கூடும்.

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டயோகம் உண்டாகும்.

மீனம்:

மனம் உற்சாகமாக இருக்கும். குருவருளால் புதிய ஆடை, ஆபரணங்கள் சேரும் வாய்ப்பு உண்டாகும். புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். சகோதரர்கள் உங்கள் முயற்சிகளுக்கு பக்கபலமாக இருப்பார்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

இன்றைய ராசி பலன் முழுவதையும் கணித்து கொடுத்தவர் ‘ஜோதிடஶ்ரீ’ முருகப்ரியன்