இன்றைய ராசிபலன் – 14 நவம்பர் 2022

today rasipalan nov 14 2022
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அமைதி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்க்க வேண்டும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு திடீர் யோகம் உண்டாகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன அமைதி கிடைக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகிறது. குடும்ப உறவுகளுக்கு இடையே அன்பு பெருக்கெடுக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு கடமையில் கூடுதல் அக்கறை தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் முயற்சி செய்வீர்கள். ஆரோக்கியம் சீராகும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நன்மைகள் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களிடம் மனம் விட்டு பேசிக்கொள்வீர்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு காணாமல் போன முக்கிய பொருள் ஒன்று கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நிர்வாகத் திறமையால் பாராட்டுகள் கிடைக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய முயற்சிகளில் வெற்றி கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. தேவையற்ற பிடிவாத போக்கை மாற்றிக் கொள்வது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு விலகி நின்றவர்களும் விரும்பி வந்து பேசுவார்கள். உத்தியோகத்தில் உள்ளவர்கள் மேலதிகாரிகளிடம் ஆதரவை பெறுவீர்கள். தேவைகள் பூர்த்தியாகும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தன்னம்பிக்கை குறைவாக இருக்க வாய்ப்புகள் உண்டு. மனதை தளரவிடாமல் இருப்பது நல்லது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனமுடன் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் சுற்றி இருப்பவர்களின் தவறான செயல்களால் வருத்தப்படுவீர்கள்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். சுய தொழிலில் உள்ளவர்கள் சில விஷயங்களை இழுத்தடிக்க வாய்ப்புகள் உண்டு என்பதால் பொறுமையை இழக்காமல் இருப்பது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மற்றவர்களின் அறிவுரை தேவைப்படலாம்.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மனதிற்கு பிடித்த விஷயங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கு இடையே ஒருமித்த கருத்து உண்டாகலாம். சுய தொழிலில் உள்ளவர்கள் புதிய நட்பால் உற்சாகம் கொள்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. ஆரோக்கிய பாதிப்புகளை அலட்சியம் செய்யாதீர்கள்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் எதிர்பாராத பண வரவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன. குடும்பத்தில் அமைதி இருக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு முக்கிய முடிவுகள் பற்றி கலந்தாலோசிக்க கூடும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பழைய சிக்கல் ஒன்று தீரும்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனை நேர்மறையாக சிந்திக்கும். குடும்பத்தில் தந்தை வழி உறவினர்கள் மூலம் ஆதாயம் காணலாம். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு நேர விரயம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு எனவே திட்டமிட்டு செயல்படுங்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு சுற்றி இருப்பவர்களின் சுயரூபம் தெரியவரும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைகளை கண்டு தளராமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வேலை முயற்சிகள் நன்மை தரும். கணவன் மனைவி இடையே இருக்கும் சிக்கல்கள் தீரும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்களால் ஆதாயம் உண்டு. உழைப்பால் உயரக்கூடிய வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் சீராகும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கக்கூடிய நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் தீரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் அதிரடியான சில திட்டங்களை செயல்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பூர்வீக சொத்து பிரச்சனை முடிவுக்கு வரலாம்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்பத்தினரின் ஒத்துழைப்பை கிடைக்கும் நல்ல நாளாக இருக்கப் போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு திடீரென அறிமுகமாகும் நபர் மூலம் அனுகூல பலன் உண்டாகும். பொருளாதார ரீதியான சிக்கல்களை திறம்பட சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு அதிகாரிகள் உதவி கிடைக்கும்.

- Advertisement -