இன்றைய ராசி பலன் – 14-2-2021

rasi palan - 14-2-2021

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பழைய நினைவுகளை அசை போட்டு பார்க்கக் கூடிய இனிய நாளாக அமையும். கணவன் மனைவி இடையே இருக்கும். நெருக்கம் மேலும் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிக லாபத்தை காணலாம்.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கவனத்தை சிதறவிடாமல் மனதை ஒருநிலைப்படுத்துவது மிகவும் நல்லது. ஆரோக்கிய ரீதியான பிரச்சனைகளை எதிர் கொள்ள நேரலாம். கணவன் மனைவியிடையே இருக்கும் புரிதலில் பிரச்சினைகள் உண்டாக வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்தநிலை காணப்படலாம்.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எண்ணற்ற எண்ண அலைகள் மனதிற்கு ஓடிக்கொண்டிருக்கும். எந்த ஒரு முடிவையும் நீங்கள் நிதானமாக எடுப்பது நல்லது. கணவன் மனைவி இடையே சிறுசிறு சண்டை சச்சரவு ஏற்படலாம். கொடுக்கல் வாங்கல் தொடர்பான விஷயத்தில் எச்சரிக்கை தேவை. பூர்வீக சொத்துக்கள் மூலம் அனுகூல பலனை பெறலாம்.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எடுக்கும் முயற்சியில் சீரான வெற்றி உண்டாகும். சுபகாரிய முயற்சிகள் தள்ளிப் போய்க் கொண்டிருந்தாலும் விரைவில் கைகூடி வருவதற்கான சந்தர்ப்பங்கள் அமையும். சுய தொழிலில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மன அமைதி உண்டாக வாய்ப்புகள் உண்டு.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்ததை விட கூடுதல் பலன்களைப் பெறலாம். நீங்கள் எதிர்பாராத புதிய மாற்றங்கள் நன்மைகளாக அமையும். கணவன்-மனைவி இடையே இருந்த பிணக்குகள் நீங்கி ஒற்றுமை பிறக்கும். சுயதொழில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று சிக்கல்களை சந்திக்கலாம். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நிலுவையில் இருக்கும் கடன் தொகைகளை வசூலிக்க கூடிய வாய்ப்புகள் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு குடும்பத்துடன் செலவிடக் கூடிய வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு மந்த நிலை காணப்படும். புதிய உத்திகளை கையாள்வதன் மூலம் முன்னேற்றத்தை காணலாம்.

- Advertisement -

துலாம்
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சிறப்பான லாபம் அமையும். தொகை ஈடுபடுத்தி பெரிய லாபத்தை காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் அமோக வெற்றி உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சார் பணியாளர்களை அனுசரித்து செல்வதன் மூலம் முன்னேற்றம் காணலாம். குடும்பத்தில் அமைதி நிலவ ஒருவரை ஒருவர் விட்டுக் கொடுத்து அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வெளியூர் மற்றும் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் அனுகூலமான பலன்களைக் காண்பீர்கள். இறை வழிபாடுகளை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் அமையும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு நீங்கும்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கேட்ட வரம் கிடைக்கும் இனிய நாளாக அமைய இருக்கிறது. நீங்கள் நினைத்ததை நினைத்தபடியே சாதித்து முடிப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய விஷயங்களை கையாள்வதன் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் அமையும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது. நினைத்ததை நினைத்தபடி முடிக்கக்கூடிய ராசியான நாளாக இருக்கும். நீங்கள் எதையாவது சாதிக்க வேண்டும் என்கிற உத்வேகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும்.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மனதில் இதுவரை குழப்பிக் கொண்டிருந்த விஷயங்கள் எல்லாம் தெளிவான முடிவை நோக்கி பயணிக்கும். கணவன் மனைவி இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசுவது மூலம் தீர்த்து கொள்வது நல்லது. குடும்பத்தில் சகோதர சகோதரிகளின் ஒற்றுமை சீர்குலைய வாய்ப்புகள் உண்டு.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அசையும் மற்றும் அசையா சொத்துக்கள் வாங்கும் முயற்சிகளில் சாதகமான பலன்களை காணலாம். பொருளாதார ரீதியான பிரச்சினைகளுக்கு தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்துவதன் மூலம் தீர்வு காண முடியும். நண்பர்களுக்கு இடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்க கூடிய வாய்ப்புகள் அமையும். குடும்பத்தில் அமைதி நிலவ விட்டுக்கொடுத்துச் செல்வது நல்லது.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்