இன்றைய ராசிபலன் – 15 ஜனவரி 2023

jan 15 2023
- Advertisement -

மேஷம்:
மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குதூகலம் நிறைந்த நல்ல நாளாக இருக்கிறது. குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் சமயோசிதமாக செயல்படுவீர்கள். சுய தொழில் செய்பவர்களுக்கு சில அவஸ்தைகள் மறைமுகமாக வந்து செல்லும்.

ரிஷபம்:
ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் புகழ் நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் வாக்குவாதங்கள் செய்யாதீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு செல்லும் இடமெல்லாம் வெற்றி வாய்ப்புகள் குவியும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பகைவர்களால் பிரச்சனைகள் வரலாம் கவனம் வேண்டும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய சிந்தனையில் புதிய விஷயங்கள் தோன்றக்கூடிய வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் மருத்துவ செலவுகள் ஏற்படலாம் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு வேலையில் கூடுதல் பற்று ஏற்படும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பயணங்கள் அதிர்ஷ்டத்தை கொடுக்கும்.

கடகம்:
கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் மன வலிமை நிறைந்த நல்ல நாளாக இருக்கப் போகிறது. யாரையும் உதாசீனப்படுத்தாதீர்கள். குடும்ப உறவுகளுக்கு இடையே மன கசப்புகள் வரலாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மெத்தனப்போக்கு இருக்கக் கூடாது. சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தொட்டதெல்லாம் துலங்கும், வருமானம் பெருகும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் நினைத்ததை சாதித்து காட்ட போராட வேண்டிய நாளாக இருக்கிறது. எதையும் ஒரு முறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பயணங்களில் கவனம் வேண்டும்.

கன்னி:
கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் அனுகூலம் தரக்கூடிய நல்ல அமைப்பாக இருக்கிறது. குடும்ப நலன் கருதி சில விஷயங்களை விட்டுக் கொடுத்து செல்வது நலம் தரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு தலைவலியாக இருந்த பிரச்சனைகள் சமூகமாக முடியும். உத்தியோகஸ்தர்களுக்கு சோர்வு ஏற்பட வாய்ப்பு உண்டு.

- Advertisement -

துலாம்:
துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய துணிச்சல் மிகுந்த சில செயல்கள் மற்றவர்களுக்கு வியப்பு அளிக்க வாய்ப்புகள் உண்டு. குடும்பத்தில் நற்செய்திகள் கிடைக்கும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் யாரிடமும் எதையும் எதிர்பார்க்காமல் இருப்பது நன்மை தரும்.

விருச்சிகம்:
விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்பாராத திருப்பங்களை சந்திக்க இருக்கிறீர்கள். குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும் இதனால் டென்ஷன் காணப்படலாம். புதிய நபர்களின் அறிமுகத்தை கவனமாக கையாளுங்கள். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு வசதி வாய்ப்புகள் பெருகும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு கவன சிதறல் ஏற்படலாம்.

தனுசு:
தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய தன்னம்பிக்கை அதிகரித்து காணப்படும். மனோபலன் கூடும். குடும்ப செலவுகளை சமாளிப்பீர்கள். சுய தொழிலில் உள்ளவர்கள் தங்களுக்கு கீழ் பணி புரிபவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன திருப்தி இருக்கும்.

மகரம்:
மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் திடீர் பயணங்கள் மேற்கொள்ள வாய்ப்புகள் உண்டு. பயணங்களில் பொழுது கவனம் தேவை. சுய தொழிலில் உங்களுடைய கடினமான முயற்சிக்கு ஏற்ப வெற்றிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத நன்மைகள் நடக்கும். ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்:
கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் குடும்ப உறவுகளுக்கு இடையே மகிழ்ச்சி பெருக கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. வரவுக்கு ஏற்ற செலவுகளும் வந்து சேரும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை. முக்கிய முடிவுகளை ஒத்தி வைப்பது நல்லது. உத்தியோகஸ்தர்களுக்கு போட்டியாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மீனம்:
மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுடைய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். உற்றார் உறவினர்களின் ஆதரவு பெருகும். சுய தொழிலில் உள்ளவர்களுக்கு லாபம் காண விடாமுயற்சி தேவை. தோல்விகளை கண்டு மனம் தளர வேண்டாம். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன நிம்மதி இருக்கும்.

- Advertisement -