இன்றைய ராசிபலன் – 15 ஜனவரி 2024

Rasi-palan-new15
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று ரொம்ப ரொம்ப சந்தோஷமா பொங்களை வரவேற்க போகிறீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்க. சர்க்கரை பொங்கலை பார்த்தவுடன் அளவுக்கு மீறி சாப்பிடாதீங்க. இன்று ஜீரணத்தில் கோளாறுகள் வர வாய்ப்புகள் உள்ளது. சந்தோஷமான இந்த நாளில் சுப செலவுகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். தீரா பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். பிரிந்த உறவுகள் ஒன்று சேருவீர்கள்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். பொங்கல் பண்டிகை அல்லவா. சில பேர் சொந்த ஊரில் உங்களுடைய பொங்கல் கொண்டாட்டத்தை சந்தோஷமாக தொடங்கி இருப்பீர்கள். வெளி நாடுகளில் இருப்பவர்கள் குடும்பத்தை மிஸ் பண்ண வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கும் இந்த பொங்கல் திருநாள் நல்லபடியாக இருக்கும். சில பேருக்கு வேலையில் சின்ன சின்ன சங்கடங்கள் வரும். தொழிலில் எதிர்பாராத பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. வியாபாரத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். பொங்கல் விழா கலை கட்டி இருக்கும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளின் போக்கில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். பெரியவர்களின் ஆசிர்வாதம் முழுமையாக கிடைக்கும். சில பேருக்கு தொழிலில் எதிர்பாராத லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. பொங்கல் திருநாளை முடித்துவிட்டு தொழிலை கவனிக்க வேண்டிய கட்டாயம் சில பேருக்கு ஏற்படும்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இந்த பொங்கல் திருநாள் சந்தோஷமான நாளாக இருந்தாலும். வேலையில் கொஞ்சம் பிக்கள் படங்கள் இருக்கும். சில பேருக்கு தொலைபேசியின் மூலம் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. இன்று ஒரு நாள் குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க பாருங்கள். வேலைக்கு கொஞ்சம் ஓய்வு கொடுங்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அதை சரி செய்ய பொறுமையாக சிந்தித்து செயல்படுங்கள் அவசரப்படாதீங்க.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். உற்றார் உறவினர்களுடன் பேசும்போது கொஞ்சம் கவனம் தேவை. முன் கோபத்தோடு யாரையும் உதாசீனப்படுத்தி பேசாதீங்க. சிறியவர்களாக இருந்தாலும் அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மதிப்பு மரியாதையை கொடுக்கவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கலகலப்பான நாளாக இருக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். உற்சாகத்தோடு பொங்களை வரவேற்கப் போகிறீர்கள். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கொஞ்சம் உடல் அசதி இருக்கும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த பெண்டிங் எல்லாம் இன்று நல்லபடியாக முடிந்துவிடும். அலுவலகத்திலும் நல்ல பெயர் கிடைக்கும். அதே சமயம் வீட்டிலும் நல்ல பெயர் வாங்கி விடுவீங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்கள் இன்று திறமையாக செயல்படுவீர்கள். சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும் அதையெல்லாம் சமாளிக்க சமாஜீத புத்தியோடு சில தந்திரமான வேலைகளை செய்வீர்கள். விருந்தாளிகளின் வருகை இருக்கும். சொந்த பந்தங்களுக்கு இடையே சின்ன சின்ன பிக்கள் பிடிகள் இருக்கும். எல்லாவற்றையும் சமாளித்து பொங்கல் கொண்டாடப் போறீங்க. குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு என்று பாராட்டுகள் கிடைக்கும்.

விருச்சிகம்


விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று வேலை தொழில் என்று நிறைய சுமை தலைமையில் இருக்கும். வேலையை முடித்துவிட்டு எப்போ வீட்டுக்கு போவது எப்போது புத்தாடை எடுப்பது என்ற குழப்பங்கள் சில பேருக்கு இருக்கும். கொஞ்சம் பொறுமையாக இருங்கள். பண்டிகை நாள் உங்களுக்கு நல்லபடியாக இருந்தாலும் வேலை சுமையின் காரணமாக மன அழுத்தம் இருக்கும். அதிலிருந்து வெளிவர வேண்டும் என்றால் கொஞ்சம் அடுத்தவர்களிடம் உதவி கேட்கலாம். உங்களுடைய வேலையை சுறுசுறுப்பாக செய்து முடிக்கணும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று நல்ல பெயர் வாங்க போறீங்க. இந்தப் பிள்ளையா இவ்வளவு வேலையை செய்து என்று உங்கள் ஊரில் இருப்பவர்கள் அனைவரும் மூக்கின் மேல் விரலை வைப்பார்கள். அவ்வளவு அழகாக அலங்காரம் செய்து கொண்டு பம்பரம் போல சுழன்று சுழன்று சொந்த ஊரை சுற்றக்கூடிய வாய்ப்புகள் சில பேருக்கு கிடைக்கும். சந்தோஷம் இரட்டைப்பாகும். பண்டிகை நாள் வந்துவிட்டது அல்லவா கொஞ்சம் செலவுகளை சமாளிக்க வேண்டி இருக்கும் பாத்துக்கோங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதி நிறைந்த நாளாக இருக்கும். கடந்த ஒரு சில நாட்களில் உங்களை பின்தொடர்ந்த பிரச்சனைகளால் இன்றைய நாளை எப்படி சமாளிப்பது என்று சிந்தித்திருப்பீர்கள். கவலைப்படாதீங்க உங்களுடைய கஷ்ட காலம் எல்லாம் முடிந்துவிட்டது. தை பிறந்து விட்டது. வழி பிறந்து விட்டது. பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளிவர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் நீங்கள் விடுமுறை நாளில் இருந்தாலும் உங்களை வேளையில் பிரச்சனைகள் பின்தொடரும். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்து, பொங்கல் விழாவை முடித்துவிட்டு, பிரச்சனைகளை சரி செய்ய நேரம் ஒதுக்குங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதியான நாளாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகி உங்களை சந்தோஷமாக கொண்டாடுவீர்கள். நிம்மதியான சாப்பாடு நிம்மதியான தூக்கம் கிடைக்கும். நீண்ட நாட்களுக்குப் பிறகு எதையோ சாதித்தது போல உணர்வீர்கள். முன்கோபத்தை குறைக்கவும். நல்லது நடக்கும்.

- Advertisement -