இன்றைய ராசி பலன் -15-02-2018

12-rasi
- Advertisement -

மேஷம்:
mesham
அனுகூலமான நாள். சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். பெற்றோர்களிடமிருந்து எதிர்பார்த்த உதவி கிடைக்கும். அலுவலக பணிகள் வழக்கம் போல் இருக்கும். எதிர்பார்த்த பணம் வரக்கூடும். வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் மகிழ்ச்சி உண்டாகும்.

ரிஷபம்:
rishabam
உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படக்கூடும். தாய் வழி சொந்தங்கள் மூலம் நல்ல செய்தி வரும். எதிர்பாராத பணம் வந்து சேரும். பெற்றோர்களின் ஆரோகியத்தில் கவனம் செலுத்துங்கள். அலுவலக பணிச்சுமையால் கூடுதல் நேரம் தேவைப்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த விற்பனையும், லாபமும் கிடைக்கும். கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வீண்செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள்.

மிதுனம்:
Midhunam
புதிய முயற்சிகளை தவிர்த்துகொள்வது நல்லது. அலுவலக பணிகளால் சோர்வாக காணப்படுவீர்கள். உறவினர்கள் வருகையால் உற்சாகமாக காணப்படுவீர்கள். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்ற திடீர் பயணம் மேற்கொள்வீர்கள்.

கடகம் :
இன்று மன உறுதியுடன் காணப்படுவீர்கள். எடுத்த காரியங்களில் வெற்றி பெறுவீர்கள். கணவன் மனைவிக்குள் அந்நோனியம் உண்டாகும். குடும்பத்தாரால் மகிழ்ச்சி ஏற்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். எதிர்பாராத பணம் வந்து சேரலாம். பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.

சிம்மம்:
simam
பெற்றோர்களின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளை பிற்பகலுக்கு மேல் வைத்து கொள்ளுங்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். அலுவலகத்தில் எதிர்பாராத சலுகைகள் கிடைக்கும். வியாபாரம் எதிர்பார்த்தபடியே இருக்கும். பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கைத்துணைவியால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

கன்னி:

பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும். விருந்தினர்கள் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த காரியம் கை கூடும். வியாபாரத்தில் எதிர்பார்த்த படியே லாபம் இருக்கும். அஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஆன்மிக செயல்களில் ஈடுபடுவீர்கள்.

துலாம்:

அனுகூலமான நாள். குடும்பத்தாரால் செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் மனக்கசப்பு ஏற்படும். உடல் ஆரோகியதில் கவனம் செலுத்துங்கள். வியாபாரம் வழக்கம் போல் இருக்கும். விசாகம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

இதையும் படிக்கலாமே:மாசி மாத ராசி பலன்

- Advertisement -

விருச்சிகம்:

அரசாங்கம் சார்ந்த பணிகள் தாமதமாகும். வாழ்க்கைத்துணைவியால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். நண்பர்கள் உங்கள் உதவி நாடி வருவார்கள். எதிர்பாராத பணம் வந்து சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சகோதரர்களால் அனுகூலம் ஏற்படக்கூடும்.

தனுசு:

அனுகூலமான நாள். பெற்றோர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் புதிய சலுகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும், வியாபாரத்தில் எந்த மாற்றமும் இருக்காது. பணியாளர்களால் பிரச்சனைகள் வரலாம். பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு குடும்பத்தாரால் ஆதாயம் உண்டாகும்.

மகரம்:
magaram
சிலருக்கு புதிய பொருட்களை வாங்கும் யோகம் வரும். சகோதரர்களால் அனுகூலம் உண்டாகும். அலுவலகத்தில் உற்சாகமாக காணப்படுவீர்கள். மாலையில் நண்பர்களை சந்திப்பீர்கள். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேர தாமதமாகும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு நண்பர்களால் ஆதாயம் ஏற்படக்கூடும்.

கும்பம்:

குடும்பத்தாருடன் பிரார்த்தனைகளை நிறைவேற்ற கோவில்களுக்கு செல்விர்கள். நண்பர்களால் எதிர்பார்த்த காரியங்களில் ஆதாயம் உண்டாகும். அலுவலக பணிச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பயணங்களை தவிர்த்துக்கொள்ளுங்கள்.

மீனம்:

இன்று அனுகூலமான நாள். தாய்வழி உறவுகள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். குடும்பத்தில் விருந்தினர்கள் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும். மாலையில் நண்பர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் சாதகமான சூழல் காணப்படும். வியாபாரம் வழக்கம் போல் காணப்படும். ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு எதிர்பார்த்த பணம் வந்து சேரும்.

அனைத்து ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன் எல்லோருக்கும் நன்மை அளிக்க இறைவனை பிராத்திப்போம்.

- Advertisement -