இன்றைய ராசிபலன் – 15 பிப்ரவரி 2024

Rasi-palan-new15
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்கள் இன்று பொறுப்புணர்வோடு நடந்து கொள்வீர்கள். அடுத்தவர்களுடைய கஷ்டத்தை உணர்ந்து செயல்படுவீர்கள். பிள்ளைகள் பெற்றவர்கள் உடைய கஷ்ட நஷ்டங்களை உணரக்கூடிய நாள் இது. நன்மை நடக்கக்கூடிய நாள். உங்களுக்கு புது உணர்வு, புது அனுபவம் எல்லாம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத வரவு காத்துக் கொண்டிருக்கிறது. சின்ன சின்ன குடிசை தொழில் செய்பவர்கள் பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள் கூட மனமகிழ்ச்சி அடைய கூடிய நாள் இது.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஒரு வெறியோடு உங்களுடைய நாளை தொடங்கப் போகிறீர்கள். எத்தனை நாள் தான் இந்த வேலையை முடிக்காமல் எடுப்பது இன்று வெறிகொண்டு அந்த வேலையை முடிக்க முயற்சிகளை எடுப்பீர்கள். நீண்ட நாள் கிடப்பில் போட்டு வைத்த வேலையை இன்று கையில் எடுங்கள். உதாரணத்திற்கு கோர்ட் கேஸ் வழக்குகள், அல்லது நீண்ட நாள் பஞ்சாயத்துகள் ஏதாவது இருந்தால் அதை இன்று முடித்துக் கொள்ளலாம். ரொம்ப நாளா இவங்க கிட்ட பேசணும் நெனச்சிட்டு இருக்கேன். ஆனா பேச முடியல அந்த பிரச்சனையை பேசி முடிக்கணும் என்றாலும் அந்த வேலையை இன்று செய்யலாம். அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளையும் இன்று செய்யலாம்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் பொறுமையை இழப்பீர்கள். உங்களுடைய பொறுமையை சோதிக்கும் அளவுக்கு எதிர் அணி, சீண்டி பார்க்கக்கூடிய நாள் இது. உஷாராக இருக்க வேண்டும். எதிர்ப்புகளை எதிர் கொண்டு சமாளிக்கும் அளவுக்கு தெம்பு உங்களிடத்தில் இருக்க வேண்டும். பொறுமையை இழப்பதால் எந்த நல்லதும் நடக்காது. வேகத்தோடு நடக்க வேண்டாம், விவேகத்தோடு நடந்து கொண்டால் இன்று உங்களுக்கு வெற்றி நிச்சயம்.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலையில் வந்த புது வாய்ப்புகளை ஏற்றுக் கொண்டு உற்சாகத்தோடு செயல்படுத்துவீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். ஊதிய உயர்வு கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளது. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் வெற்றி கிடைக்கும் என்பதை நீங்கள் நம்பக்கூடிய நாள் இது. உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத சில நல்லதை, இன்று நீங்கள் தெரிந்து கொள்ளப் போகிறீர்கள். ஆச்சரியங்கள் நிறைந்த இந்த நாளை சந்தோஷமாக கடந்து செல்லுங்கள்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உடல் அசதி நிறைந்த நாளாக இருக்கும். அதனால் உற்சாகமாக எந்த வேலையையும் செய்ய முடியாது. வேலைக்கு சென்றாலும் அந்த இடத்திலும் தூக்கம்தான் வரும். ஆகவே உங்களை நீங்களே உற்சாகப்படுத்திக் கொள்ள மனசுக்கு பிடித்த பாடலைக் கேட்பது, சந்தோஷமாக சிரித்து பேசுவது போன்ற செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். வீட்டில் பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். தொழிலில் அலட்சியமாக இருக்கக் கூடாது.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். மனதிற்கு பிடித்தவர்களை சந்தித்து காதலை வெளிப்படுத்துவீர்கள். காதல் கைகூடும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. கலைஞர்களுக்கு இன்று நல்ல வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகம் நிறைந்த இந்த நாளை சந்தோஷத்தோடு கடந்து செல்லுங்கள். வாகனத்தில் செல்லும்போது மட்டும் கூடுதல் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று எவ்வளவு பணம் வந்தாலும் பத்தாது. வருமானம் இருக்கும். செலவும் இருக்கும். இதனாலேயே உங்களுக்கு சிக்கல்கள் உண்டாகும். வரக்கூடிய பணம் கையில் நிற்கவில்லை என்று வருத்தப்படக் கூடிய சூழ்நிலை இருக்கும். கவலைப்படாதீங்க கூடுமானவரை பணத்தை சேமிக்க பாருங்கள். வேலையில் கூடுதல் கவனத்தோடு இருக்கவும். அடுத்தவர்களை நம்பி உங்கள் வேலையை ஒப்படைக்க வேண்டாம். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

விருச்சிகம்


விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று உழைப்பு உயர்வை கொடுக்கக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய உழைப்பு வீணாக வாய்ப்பே இல்லை. ஆகவே புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வேலை செய்யும் இடத்தில் கஷ்டப்பட்டு உழைத்தால் அதற்கு பலன் கிடைக்கும். தொழிலில் புதிய முதலீட்டை செய்யுங்கள். புதிய யுத்திகளை அறிமுகப்படுத்துங்கள். நிச்சயம் இன்றைய தினம் நீங்கள் செய்யக்கூடிய வேலைகள் எல்லாம் உயர்வை கொடுக்கக் கூடியதாக அமையும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்கள் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு முடிவையும் தெளிவாக எடுக்க முடியாது. குடும்பத்தில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இதனால் எந்த வேலையிலும் முழுசாக கவனம் செலுத்த முடியாமல் அரைகுறையாக வேலையை செய்து, தலைவலி வந்து திட்டுவாங்க வாய்ப்புகள் உள்ளது. மனதில் ஒருநிலைப்படுத்துங்கள். வீட்டுக்கு போகும்போது ஆபீஸ் டென்ஷன் எடுத்துட்டு போகாதீங்க. ஆபீஸ்க்கு வரும்போது வீட்டு டென்ஷனை கொண்டு வராதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதி இல்லாத மனநிலை இருக்கும். குடும்பத்தில் குழப்பம் நிலவும். அண்ணன் தம்பிகள், அக்கா தங்கைகளுக்குள் பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும். கோபத்தில் வார்த்தைகளை விடாதீங்க. யாராக இருந்தாலும் பொறுமையாக பேசுங்க. வேலை செய்யும் இடத்தில் உங்களை தோற்கடிக்க சில பேர் பிரச்சனை செய்வார்கள். அவர்களை சமாளிக்கவும் சாதுரியமாக செயல்பட வேண்டும். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகக்கூடாது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனமகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்திருந்த உறவோடு ஒன்று சேர்ந்து, இந்த நாளை கடந்து செல்ல போகிறீர்கள். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் இருக்காது. தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வருமானமும் இருக்கும். அதே சமயம் செலவையும் ஈடு கட்ட முடியாத சூழ்நிலை இருக்கும்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நினைத்த வேலை நல்லபடியாக முடியும். டார்கெட்டை அச்சீவ் செய்ய நல்ல வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேனேஜரிடம் நல்ல பெயர் வாங்குவீர்கள். உற்சாகம் நிறைந்த நாள் இது. ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். உறவுகளை புரிந்து நடந்து கொள்ளுங்கள். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -