இன்றைய ராசிபலன் – 15 மார்ச் 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்கு இன்றைய தினம் கவலைகள் விலகும். செலவுகளை குறைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு புதிய ஆடை, ஆபரண சேர்க்கை ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த காரியங்கள் நல்லபடியாக முடியும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் ஒரு சிலருக்கு உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டு நீங்கும். பணம் கொடுக்கல் வாங்கல்களில் கவனத்துடன் செயல்பட வேண்டும். கோர்ட் வழக்குகளில் இழுபறியான நிலை நீடிக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்கு இன்றைய தினம் புதிய அனுபவம் ஏற்படும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். புதிய தொழில், வியாபாரம் சார்ந்த முதலீடுகளில் கவனம் தேவை. உடல் நலம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:
கடக ராசிக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். அரசாங்க ரீதியான காரியங்களில் வெற்றி உண்டாகும்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்கு இன்றைய தினம் பொதுமக்களின் ஆதரவு இருக்கும். புதிய முயற்சிகளில் சற்று இழுபறிக்கு பிறகு வெற்றி கிடைக்கும். வீட்டில் இருப்பவர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். ஒரு சிலர் வெளியூர் பயணங்களை மேற்கொள்வார்கள்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் தம்பதிகளிடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். மாணவர்கள் கல்வியில் சிறப்பார்கள். புதிய நபர்களின் அறிமுகத்தால் ஆதாயம் உண்டாகும். ஒரு சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவீர்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் பண வரவுகளில் சுமுகமான நிலை இருக்கும். உறவினர்களிடம் வீண் விவாதங்களை தவிர்க்க வேண்டும். பணியிடங்களில் பணிச்சுமை அதிகரிக்கும். சிலருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.

விருச்சிகம்:
விருச்சக ராசியினருக்கு இன்றைய தினம் வெளியிடத்தில் மரியாதை பெருகும்.
தொழில், வியாபாரங்களில் நல்ல லாபத்தை பெறுவார்கள். வெளியூர், வெளிநாடு பயண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சிறு செலவுகள் ஏற்படும். கோர்ட் வழக்குகளில் நீங்கள் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். தொழில் வியாபாரங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். ஆக்கப்பூர்வமான சிந்தனைகள் ஏற்படும்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் சுகமான நாளாக இருக்கும். சகோதரர் வழியில் லாபம் ஏற்படும். பிறருக்கு பணம் கொடுக்கும் பொழுது கவனம் தேவை. கலைஞர்களுக்கு எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். மனம் உற்சாகமாக இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினருக்கு இன்றைய தினம் தொலைதூரப் பயணங்களால் லாபம் ஏற்படும். சிலர் தங்களுக்கு கீழான பணியாளர்களால் புகழ் பெறுவார்கள். பெண்கள் வழியில் சிலருக்கு தனலாபம் ஏற்படும். தடைபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் உயர்வுகள் நிறைந்த நாளாக இருக்கும். நண்பர்கள் மூலம் சிலருக்கு ஆதாயம் ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அன்னோன்யம் கூடும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவீர்கள்.

- Advertisement -