இன்றைய ராசிபலன் – 15 மார்ச் 2024

Rasi-palan-new15
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. புது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். கெட்ட பெயர் எடுத்த இடத்தில் நல்ல பெயர் வாங்குவதற்கு வாய்ப்புகள் நிறையவே இருக்கிறது. குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். கணவன் மனைவி அன்பு அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு என்று சோர்வான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு வேலையையும் சுறுசுறுப்பாக செய்ய முடியாமல் கஷ்டப்படுவீர்கள். தூக்கம் தூக்கமாக வரும். உங்களை உற்சாகப்படுத்திக் கொள்ள மனதிற்கு பிடித்த பாடலை கேட்கவும். மனதிற்கு பிடித்த ஆடையை அணிந்து கொள்ளுங்கள். மனதிற்கு பிடித்த சாப்பாட்டை சாப்பிடுங்கள். மனசுக்கு பிடிச்ச விஷயத்தை செய்யும்போது வேலையில் அதிக ஆர்வம் வரும் முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்கள் கோபத்தை கொஞ்சமாக குறைத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக உணர்ச்சிவசப்பட்டு பேசக்கூடிய பேச்சும், எடுக்கக்கூடிய முடிவும் சாதகமாக இருக்காது. சூழ்நிலையை புரிந்து கொள்ளுங்கள். எல்லா விஷயத்திற்கும் கொஞ்சம் நேரம் கொடுங்கள். அவசர அவசரமாகவே எல்லாம் இப்போதே நடந்து முடிந்து விட வேண்டும் என்று கற்பனை கோட்டை கட்டாதீர்கள். நின்று நிதானமாக சிந்தித்தால் இன்று பிரச்சனை வராது.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று துணிச்சலான நாளாக இருக்கும். யோசித்து எல்லாம் பேச மாட்டீங்க. மனதில் பட்டதை பட்டென்று வெளியில் சொல்லி விடுவீர்கள். இதனால் அடுத்தவர்கள் உங்களை தவறாக நினைத்துக் கொள்ள வாய்ப்புகள் உள்ளது. கவலைப்படாதீங்க. எல்லாம் நன்மையாக முடியும். நமக்கு என்ன தேவையோ அதை வாயைத் திறந்து கேட்டால் தானே கிடைக்கும். அமைதியாக இருந்தால் எதிராளிக்கு எப்படி புரியும், உங்களுக்கு என்ன தேவை இருக்கிறது என்று. உங்களுடைய முயற்சி இன்று வெற்றி அடையும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்கள் இன்று கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையிலும் அவலட்சியமாக இருக்கக் கூடாது. உங்களுடைய பொறுப்புகளை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். உங்கள் மீது வீண் திருட்டு பழி விழுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். நண்பர்களாக இருந்தாலும் உறவினர்களாக இருந்தாலும் அவர்களிடம் கொஞ்சம் விலகி இருக்கவும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை செய்ய தொடங்குவீர்கள். ரொம்ப நாள் கிடப்பில் கிடந்த வேலைகளை கையில் எடுப்பீர்கள். அரசாங்கம் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் சரியாகும். தொழிலில் எதிர்பாராத பணவரவு மனநிறைவை கொடுக்கும். கடன் பிரச்சனையை குறைக்கும். சிக்கலான நபரிடமிருந்து, சுலபமாக தப்பிக்க திறமையாக யோசிப்பீர்கள். புரியும்படி சொல்ல போனால் கழுவுற மீனில் நழுவுற மீனாக இன்று நீங்க இருப்பீங்க.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டும் புகழும் கிடைக்கப் போகின்றது. உயர் பதவிகள் கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. மாணவர்கள் இன்று ஆக்கபூர்வமாக சிந்திப்பீர்கள். பிரச்சனையான விஷயத்தைக் கூட சுலபமாக சமாளித்து விடுவீர்கள். சமயோஜித புத்தியோடு செயல்படும் உங்களுக்கு வெற்றிகளும் குவியும். வீட்டில் இருக்கும் தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் சுபகாரிய பேச்சுக்கள் தொடங்கும். கோவில் குளங்களுக்கு சென்று இறைவழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்பு உள்ளது. வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும்.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று கற்பனை நிறைந்த உலகத்தில் வாழ்வீர்கள். ஒரே நாளில் உயர்ந்துவிட வேண்டும் என்று அவசர அவசரமாக சில வேலைகளை செய்ய தொடங்குவீர்கள். ஆனால் அது தவறு. கற்பனையில் கோட்டை கட்டுவது சுலபம். நிஜத்தில் ஒரு செங்கல் கூட நம்மால் நட்டு வைக்க முடியாது. எதார்த்தத்தை புதிர்ந்து கொண்டு நடந்தால் பிரச்சனை கிடையாது. பேராசையை உங்கள் மனதில் விதைக்கும் நபர்களிடமிருந்து நீங்க கொஞ்சம் ஒதுங்கே இருங்க.

மகரம்


மகர ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்தையும் பக்காவாக பிளான் பண்ணிடுவீங்க. யாரும் உங்களை கைநீட்டி குறை சொல்ல முடியாது. அந்த அளவுக்கு திறமையாக வேலை செய்வீர்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் திறமையாக செயல்பட்டு பிரச்சனைகளை சுலபமாக சரி செய்து விடுவீர்கள். இதனால் உங்களுக்கான பாராட்டும் கிடைக்கும். மாமியார் மருமகள் உறவு வலுபெறும்.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். மேலதிகாரிகள் உங்களைப் பற்றி புரிந்து கொள்வார்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு காதலை வெளிப்படுத்துவீர்கள். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். விற்பனை தொழிலில் இருப்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது. பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்‌. எதிர்காலத்துக்கு தேவையான திட்டங்களை தீட்டலாம். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். நீண்ட நாட்களாக சிரிக்க மறந்தவர்களுக்கு கூட, இன்று மனசுக்கு மகிழ்ச்சி தரும் வகையில் சில சம்பவங்கள் நடக்கும். என்ஜாய் பண்ணுங்க.

- Advertisement -