இன்றைய ராசிபலன் – 15 ஏப்ரல் 2024

Rasi-palan-new15
- Advertisement -

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்க போகின்றது. எதிர்பாராத பண வசூல் சந்தோஷத்தை கொடுக்கும். நீண்ட நாள் கடன் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். வேலை செய்யும் இடத்தில் எதிர்பாராத முன்னேற்றம் இருக்கும். எதிர்பாராத பதவி உயர்வு மனசுக்கு சந்தோஷத்தை கொடுக்கும். புதுசாக சொத்து சுகம் வாங்குவதற்கான யோகமும் இருக்கிறது. புதிய பொருள் வாங்கினால் இன்று உங்களுக்கு லாபம்.

ரிஷபம்


ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றிக்கான நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. வீட்டில் கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு சென்று நேரத்தை செலவு செய்வீர்கள்.

- Advertisement -

மிதுனம்


மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனக்குழப்பமும் பயமும் சேர்ந்த ஒரு கலவையான நாளாக இருக்கப் போகின்றது. எந்த ஒரு விஷயத்திலும் தெளிவான முடிவை எடுக்க முடியாது. அதனால் இன்று புது முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். உங்களுடைய அன்றாட வேலையில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்தினால் போதும். உங்களுடைய பொறுப்புகளை, நம்பி அடுத்தவர்கள் கையில் ஒப்படைக்காதீங்க.

கடகம்


கடக ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ரிலாக்ஸாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்தது நடக்கும். மனசுக்கு பிடித்தவர்களோடு பேசி நேரத்தை செலவு செய்வீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிர்பார்க்காத பொறுப்பான பதவிகள் உங்களைத் தேடி வரும். வருமானம் இரட்டிப்பாகும். வண்டியில் செல்லும்போது கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு இருக்கவும்.

- Advertisement -

சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எதிரிகளை வீழ்த்தக் கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். நீண்ட நாள் சவால் விட்ட விஷயங்களில் இன்று ஜெயித்து காட்டுவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். மேலதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரணையாக பேசவும். செலவை குறைத்துக் கொள்ளுங்கள். அனாவசிய செலவு சேமிப்பை கரைக்கும்.

கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோகமான நாளாக இருக்கப் போகின்றது. நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். அடுத்தவர்களிடம் கை நீட்டி கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு உண்டாகும். இதனால் மனக்கவலை உண்டாகும். வேலையில் சரியாக கவனம் செலுத்த முடியாது. இதனால் மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாக வாய்ப்பு உள்ளது. கொஞ்சம் கவனமாக இருங்கள்.

- Advertisement -

துலாம்


துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். ஆனால் உங்களை ஆதரிக்க நண்பர்களும் உறவினர்களும் உங்களுடனே இருப்பார்கள். கஷ்டம் என்று வந்தால் தனியாக நிற்க மாட்டீர்கள். இதனாலேயே உங்களுக்கு தென்பும் தைரியமும் இன்று கொஞ்சம் அதிகமாக இருக்கும். சப்போர்ட் இல்லாமல் இருக்கிறவங்களுக்கு தான் கவலை இருக்கும். உங்களுக்கு என்று அம்மா அப்பா அண்ணன் தங்கச்சி போன்ற உறவுகளும் சப்போட்டாக நிற்பார்கள்.

விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்கள் வாழ்வில் இன்று அமைதி இருக்கும். எந்த ஒரு ஆடம்பரமும் இருக்காது. ஆனால் நல்லது, நல்லபடியாக உங்கள் கையை வந்து சேரும். விடாமுயற்சி விஸ்வரூப வெற்றியைத் தேடித் தரும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்தவும். சீக்கிரம் ஜீரணம் ஆகாத பொருட்களை சாப்பிட வேண்டாம். அஜீரணக் கோளாறுகள் உண்டாக வாய்ப்புகள் உள்ளது.

தனுசு


தனுசு ராசிக்காரர்கள் இன்று இஷ்ட தெய்வ வழிபாட்டை செய்துவிட்டு வீட்டில் இருந்து வேலைக்கு செல்லவும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். பெரிய அளவில் பணம் கொடுத்து எந்த பொருளும் வாங்காதீங்க. யாருக்கும் கடன் கொடுக்காதீங்க. ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.

மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். வாரத் தொடக்கமே கொஞ்சம் மெதுவாக தான் உங்களுக்கு நகர்ந்து செல்லும். இதனால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வாய்ப்பு உள்ளது. உங்களுடைய வேலை சரியாக நடக்காது. மனைவியிடம் பேசும் போது ஜாக்கிரதியாக பேசுங்கள். அனாவசியமாக எதையாவது பேசி பிரச்சினையை பெருசாக்காதீங்க. சண்டை வர வாய்ப்பு உள்ளது.

கும்பம்


கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானத்தை விட செலவு இரட்டிப்பாக போகின்றது. அடுத்த மாத செலவுக்கு என்ன செய்வது என்ற யோசனையும் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். தொழிலில் எதிர்பார்த்த அளவு லாபத்தை எடுக்க முடியாது. ஆரோக்கியத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வேலை செய்யும் இடத்தில் விட்டுக் கொடுத்து நடக்கவும். இன்று எதுவுமே உங்களுக்கு சாதகமாக நடக்காததால், மன உளைச்சலில் தூக்கமும் வராது. கொஞ்சம் ஜாக்கிரதையா இருங்க. இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள்.

மீனம்


மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எதிர்பார்த்ததை விட வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. கமிஷன் தொழில் எதிர்பார்த்ததை விட லாபத்தை கொடுக்கும். வீட்டிற்கு தேவையான பொன் பொருள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மனைவியை சந்தோஷப்படுத்தி பார்ப்பீர்கள். மனைவியோடு வெளியிடங்களுக்குச் சென்று நேரத்தை சந்தோஷமாக செலவு செய்வீர்கள்.

- Advertisement -