இன்றைய ராசிபலன் – 15 மே 2023

- Advertisement -

மேஷம்:
மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி உண்டாகும். ஈடுபட்ட காரியங்கள் வெற்றிகரமாக முடியும். பெண்களால் சிலருக்கு பொருள் வரவு உண்டாகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்திற்கு தேவையான செலவுகளை சிலர் செய்வார்கள்.

ரிஷபம்:
ரிஷப ராசியினருக்கு இன்றைய தினம் தொழில், வியாபாரங்கள் விருத்தியாகும். பணவரவில் இருந்த தடைகள் நீங்கும். பணியிடங்களில் சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் ஆதாயம் ஏற்படும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசியினருக்கு இன்றைய தினம் பொருளாதார நிலை உயரும். தொழில், வியாபார கூட்டாளிகளால் நன்மைகள் ஏற்படும். சிலர் தந்தை வழி சொத்துக்கள் கிடைக்க பெறுவார்கள். அரசாங்க ரீதியான உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்தி கிடைக்கும்.

கடகம்:
கடக ராசியினருக்கு இன்றைய தினம் எண்ணங்கள் அனைத்தும் ஈடேறும். வராத கடன் தொகை வட்டியுடன் வந்து சேரும். சுபகாரிய செலவுகள் ஏற்படும். வெளிநாடு செல்கின்ற முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கலைத்தொழில் இருப்பவர்கள் நல்ல வருமானம் கிடைக்க பெறுவார்கள்.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசியினருக்கு இன்றைய தினம் சந்திராஷ்டமம் என்பதால் கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். வாழ்க்கைத் துணையிடம் அனுசரித்து செல்வது நல்லது. பிறர் விவகாரங்களில் தலையிடாமல் இருக்க வேண்டும். உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

கன்னி:
கன்னி ராசியினருக்கு இன்றைய தினம் எதிரிகள் ஒழிவார்கள். சிலருக்கு எதிர்பாராத பணவரவு உண்டாகும். நண்பர்களால் பல ஆதாயங்கள் ஏற்படும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆதரவு இருக்கும். சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்வார்கள்.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசியினருக்கு இன்றைய தினம் தன்னம்பிக்கை பெருகும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும். தொழில், வியாபாரங்களில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய பதவி கிடைக்க பெறுவார்கள். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசியினருக்கு இன்றைய தினம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். பூர்வீக சொத்து விவகாரங்களில் இழுபறி நிலை நீடிக்கும். குடும்பத்தினரின் முழுமையான ஆதரவு இருக்கும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். சராசரியான வருமானம் இருக்கும்.

தனுசு:
தனுசு ராசியினருக்கு இன்றைய தினம் சகோதர உறவு வழியில் பிரச்சனைகள் ஏற்படு. நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர்கள். தொழில், வியாபாரங்களில் நல்ல லாபம் இருக்கும். குழந்தைகள் வழியில் சிலருக்கு செலவுகள் ஏற்படும். சிலர் ஆன்மீக தலங்களுக்கு சென்று வருவார்கள்.

மகரம்:
மகர ராசியினருக்கு இன்றைய தினம் யோகமான நாளாக இருக்கும். திட்டமிட்டு ஈடுபட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். எதிர்பார்த்த பணம் வரவு இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நடைபெறும். உறவினர்களின் ஆதரவு இருக்கும்.

கும்பம்:
கும்ப ராசியினர் இன்றைய தினம் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவீர்கள். மக்கள் செல்வாக்கு பெருகும். காரியங்களில் தைரியமாக ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். கலையில் துறையில் இருப்பவர்கள் சிறந்த வருமானத்துடன் கூடிய வாய்ப்புகள் பெறுவார்கள்.

மீனம்:
மீன ராசியினருக்கு இன்றைய தினம் உற்சாகமான நாளாக இருக்கும். தொழில், வியாபாரம் விரிவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். தாராளமான தன வரவு இருக்கும். தம்பதிகளிடையே ஒற்றுமை அதிகரிக்கும். சிலர் குடும்பத்துடன் வெளியில் சென்று வருவார்கள்.

- Advertisement -