இன்றைய ராசி பலன் – 15-1-2021

rasi palan - 15-1-2021
- Advertisement -

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவால்கள் நிறைந்த நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் புதிய முயற்சிகளால் முன்னேற்றம் காண்பீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உங்கள் பலத்தை அதிகரித்துக் கொள்ள முயற்சி செய்வீர்கள். குடும்பத்தில் நிம்மதி நிறைந்து இருக்கும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஆதரவு மற்றும் எதிர்ப்பு சரிசமமாக உங்களுக்கு அமைய இருக்கிறது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை சறுக்கல்களை சந்தித்து இருந்த விஷயங்கள் இனி ஏற்றம் காணும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்களின் முன்னேற்றம் சீராக இருக்கும்.

- Advertisement -

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய இறக்க குணத்தினால் நீங்கள் பல்வேறு நன்மைகளை அடைய பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக நண்பர்களை அனுசரித்து செல்வதன் மூலம் ஏற்றம் காணலாம். தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக அமைய வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முயற்சி செய்வீர்கள்.

கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடன் சுமையில் இருந்து வெளிவருவதற்கான முயற்சியில் ஈடுபடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்துவந்த மந்தநிலை மாறி செழிப்பாக வளர கூடிய வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் தொந்தரவு குறையும்.

- Advertisement -

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இனிய நாளாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஆரோக்கிய ரீதியாக பாதிப்புகள் மன உளைச்சலைக் கொடுக்கும் நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சுப செய்திகள் கிடைக்கும்.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்வரும் துயரங்களை தாங்கும் வலிமை பிறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய முயற்சிகள் முன்னேற்றத்தை கொடுக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் கணவன் மனைவி உறவு பிரச்சனைகள் அவ்வப்போது தோன்றி மறையும்.

- Advertisement -

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுடைய அவசரமான முடிவுகளால் சில பிரச்சனைகளை சந்திக்க நேரலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் நீங்கள் எடுத்து வைக்கும் அடிகளில் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு தங்கள் பலம் அறிந்து செயல்பட வேண்டிய அவசியம் உண்டாகும்.

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ஏற்றம் தரும் அமைப்பாக இருப்பதால் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடமாற்றம் ஏற்படலாம். தொழில் மற்றும் வியாபார ரீதியான சிக்கல்களை எளிதாக எதிற்கொள்வீர்கள். ஆரோக்கியம் சீராக அமையும்.

தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனதில் புது உற்சாகம் பிறக்கும். வேலை இல்லாதவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு மனதிற்கு தெளிவை உண்டாக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் போட்டியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பார்க்காத சில நிகழ்வுகள் மனதிற்கு ஒரு உருத்தலை கொடுக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றம் சிறப்பாக அமைவதால் கடன் பிரச்சனை குறையும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் வாகன ரீதியான பயணங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த கடன் தொகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க கூடிய வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் நடப்பதை குறைப்பது நல்லது.

மீனம்
மீனா ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நினைத்தது நடக்கும். உத்தியோக ரீதியான முன்னேற்றம் சிறப்பாக இருக்கும். எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் உண்டாகும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது.

இன்றைய ராசி பலன் அனைவருக்கும் சிறப்பாய் இருக்க வாழ்த்துக்கள்.

இன்றைய நல்ல நேரம் முகூர்த்த நாட்கள் விடுகதைகள்

- Advertisement -