இன்றைய ராசிபலன் – 15 நவம்பர் 2023

Rasi-palan-new15
- Advertisement -

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் பொறுமை தேவை. கோபம் சந்தோஷம், இன்பம் துன்பம் எல்லாவற்றையும் உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள். வெளிப்படையாக காட்டாதீங்க. வேலை செய்யும் இடத்தில் எல்லோரையும் கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம். சொந்தத் தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீட்டிற்கு முயற்சி செய்யலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியமான உணவை சாப்பிடுங்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை தரும். எல்லா விஷயத்திலும் அதிக ஈடுபாடுடன் இருப்பீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு மட்டுமல்ல, உங்களை சுற்றி இருப்பவர்களுக்கும் நன்மை பயக்கும் வகையில் அமையும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். நிதி நிலைமை உயரும். சந்தோஷம் அதிகரிக்கும்.

- Advertisement -

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். உங்களை எதிர்த்து போட்டியிடுபவர்கள் தோற்றுப் போவார்கள். எதிரிகளுக்கு சவால் விட்டு ஜெயித்து எதிரிகள் மூக்கை உடைக்க இன்றைய நாள் சிறந்த நாளாக இருக்கும். யாருக்காவது பழைய பாக்கி திருப்பிக் கொடுக்க வேண்டும் என்றால் இன்னைக்கு கொடுங்க. சரியா இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல மேம்பாடு இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். நல்லதே நடக்கும்.

கடகம்

கடக ராசி காரர்களுக்கு இன்று சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். பிரச்சனைகளை சமாளிக்கும் அளவுக்கு மனதில் தைரியமும் இருக்கும். அன்றாட வேலைகளை அன்றாடம் முடிக்க பாருங்கள். இன்றைய வேலையை நாளைக்கு செய்து கொள்ளலாம் என்று நினைக்காதீங்க. அது உங்களுக்கு பெரிய சுமையாக மாறிவிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். சொந்த தொழிலில் இருந்து வந்த சின்ன சின்ன இடர்பாடுகள் சரியாகும்.

- Advertisement -

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சவாலான நாளாக இருக்கும். எதிர்த்து போட்டி போட நாலு பேர் இருப்பாங்க. எந்த விஷயத்திலும் சுலபமாக ஜெயிக்க முடியாது. வேலை வியாபாரம் என்று எல்லா விஷயத்திலும் போட்டி பொறாமையில் சிக்க வேண்டி இருக்கும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்துக்கோங்க‌. உடல் ஆரோக்கியத்தில் சின்ன சின்ன உபாதைகள் வரும். மழையில் நனையாதீங்க. குளிர்ச்சி நிறைந்த பொருட்களை சாப்பிடாதீங்க.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புத்துணர்ச்சியான நாளாக இருக்கும். மழை பெய்தாலும் உங்கள் வேலையை சரியாக செய்வீர்கள். பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் கண்ணும் கருத்துமோடு பள்ளிக்குச் சென்று உங்களுடைய வேலையை பார்ப்பீங்க. மழையை பொருட்படுத்தாமல் சுறுசுறுப்பாக வேலை செய்யும் சக்தியை கடவுள்  இன்னைக்கு உங்களுக்கு கொடுப்பார். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு லாபம் நிறைந்த நாள் இது.

- Advertisement -

துலாம்

துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுக்கே புரியாது என்ன செய்கிறீர்கள் என்று. ஆனால் அடுத்தவர்கள் ஆச்சரியப்படும்படி சில நல்ல சம்பவங்களை நடத்தப் போகிறீர்கள். பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுப செலவு ஏற்படும். கலைத்துறையினருக்கு இன்றைய நாள் சிறப்பான நாளாக இருக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கொஞ்சம் பொறுமை தேவை. முன்பின் தெரியாத நபரிடம் நட்பு வைத்துக் கொள்ள வேண்டாம். புதிய மனிதர்கள் சொல்லுவதை வைத்து எந்த முயற்சியும் செய்யாதீங்க. அனுபவசாலி, திறமைசாலிகள், தெரிந்தவர்கள் மூலம் புதிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது. அரசாங்கத்துக்கு புறம்பான விஷயங்களில் ஈடுபடக்கூடாது. குறுக்கு வழியில் பிசினஸ் செய்யக்கூடாது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். சின்ன சின்ன தடைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சாதாரணமாக நீங்கள் செய்யும் வேலையிலும் சிக்கல் வரும். ரொம்ப கஷ்டப்பட வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடல் சோர்வு ஏற்படும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் புதுசா எதையும் செய்யாதீங்க.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு இன்று ஏதோ ஒரு மன குழப்பம் இருந்து கொண்டே இருக்கும். முன்கோபம் அதிகமாக வரும். பொருள் இழப்பு பண இழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கண்மூடித்தனமாக மூன்றாவது மனிதரை நம்ப வேண்டாம். மனைவியை அனுசரித்து செல்லுங்கள். தாய்மாமன் வழி உறவால் ஆதாயம் உண்டு. விவசாயிகளுக்கு முன்னேற்றம் தரக்கூடிய நாள் இது.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். யாராவது உங்களை கோபப்படுத்த எதையாவது சொல்லிட்டே இருப்பாங்க. ஊர் வாயை மூட முடியாது தெரியும் அல்லவா. அவர்கள் பேச்சைக் கேட்டால் உங்களுக்கு தான் கஷ்டம். உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல், அரசாங்கத்துக்கு விரோதம் இல்லாமல், உங்கள் வேலையை செய்யுங்கள் நன்மை நடக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது நடக்கும். குலதெய்வ வழிபாடு செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மனது முழுவதும் ஆன்மீகம் சம்பந்தப்பட்ட சிந்தனை இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவு ஏற்படும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வேலை பளு குறையும்.

- Advertisement -