இன்றைய ராசி பலன் – 15-05-2021

rasi palan - 15-5-21

மேஷம்
Mesham Rasi
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்து விஷயங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு அதிகரித்து டென்சனுடன் காணப்படுவார்கள். பெண்களுக்கு மன இறுக்கம் நீங்கும். ஆரோக்கியத்தில் அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது.

ரிஷபம்
Taurus zodiac sign
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவிக்கு இடையே இருந்த நெருக்கம் குறையும். தொழில் மற்றும் வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் தடையில்லாமல் நடக்கும். பெண்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் வரலாம். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது.

மிதுனம்
Gemini zodiac sign
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் எச்சரிக்கை தேவை. பண ரீதியான விஷயங்களில் மூன்றாம் மனிதர்களை நம்புவதை தவிர்ப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் தொந்தரவை சமாளிப்பீர்கள். பெண்களுக்கு நினைத்தது நடக்கும். ஆரோக்கியம் சீராக இருந்தாலும் உணவு கட்டுப்பாடு மேற்கொள்வது நல்லது.

கடகம்
Kadagam Rasi
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பது நல்லது. தேவையில்லாத பிரச்சனைகளில் மூக்கை நுழைத்தால் வீண் வம்புகள் ஏற்படலாம். வழக்கு தொடர்பான விஷயங்களில் பாதக பலன்கள் உண்டாகும் என்பதால் கவனம் தேவை. தொழில் மற்றும் வியாபாரத்தில் மந்த நிலை நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சோர்வு இருக்கும். பெண்கள் புதிய விஷயங்களை தைரியமாக மேற்கொள்வார்கள். வெளியிட பயணங்களில் கவனமுடனிருப்பது நல்லது.

சிம்மம்
Leo zodiac sign
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் மனக்குறை நீங்கி உற்சாகத்துடன் இருப்பீர்கள். தொழில் மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்தநிலை மாறி புதிய விஷயங்களை மேற்கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சக பணியாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பெண்களுக்கு குடும்ப பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

கன்னி
kanni
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிர்பாராத மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உண்டு. தொழில் மற்றும் வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. புதிய தொழில் துவங்க நினைப்பவர்கள் சற்று தள்ளிப் போடுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சக பணியாளர்களின் மூலம் ஆதாயம் காண்பீர்கள். பெண்களுக்கு மனோதிடம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தின் மீது அக்கறை கொள்வது நல்லது.

- Advertisement -

துலாம்:
Thulam Rasi
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதிலும் யோகம் உண்டாகும். தொட்டதெல்லாம் துலங்க கூடிய அற்புத நாளாக அமைய இருப்பதால் மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். குடும்பத்தினர் உங்களைப் புரிந்து கொள்ளாதவர்கள் புரிந்துகொள்வதற்கு வாய்ப்புகள் அமையும். சகோதர சகோதரிகளின் ஒற்றுமையில் மற்றவர்களுடைய தலையீடு இருக்கும். பெண்களுக்கு மன உளைச்சல் ஏற்படலாம். ஆரோக்கியம் சீராக இருந்தாலும் எச்சரிக்கை தேவை.

விருச்சிகம்
Scorpius zodiac sign
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எதையும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்று செயல்படாமல் நிறுத்தி நிதானத்துடன் செயலாற்றுவது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் இருப்பவர்கள் உங்களை சுற்றி இருப்பவர்களை உங்களுக்கு எதிரியாக மாறுவார்கள். உத்தியோகத்தில் மன அமைதி காண பொறுமையை கடைபிடிப்பது நல்லது. பெண்களுக்கு நினைத்த பொருள் ஒன்று கிடைக்கும். சுவாசம் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படலாம்.

தனுசு
dhanusu
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் மனைவிக்கு இடையே வாக்குவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மன உளைச்சலில் இருப்பார்கள். தியானம், யோகா போன்றவற்றில் மேற்கொள்வதன் மூலம் நிம்மதி காணலாம். தொழில் மற்றும் வியாபாரத்தில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தும் முன்னெச்சரிக்கை தேவை. பெண்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும் என்பதால் தங்களை மேலும் மெருகேற்றிக் கொள்வது நல்லது. ஆரோக்கியம் சீராகும்.

மகரம்
Magaram rasi
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் நினைத்த ஒரு விஷயத்தை சாதிக்கக் கூடிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபார ரீதியான பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்டமிட்ட காரியங்களை சரியாக செய்து முடிப்பீர்கள். பெண்களுக்கு தேவையில்லாத அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. வெளியிட பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. ஆரோக்கியத்தில் கவனமுடனிருப்பது நல்லது.

கும்பம்
Kumbam Rasi
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்ப விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பது நல்லது. தொழில் மற்றும் வியாபாரத்தில் சில இழப்புகளை சந்திக்க நேரலாம் என்பதால் கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களின் உதவியை வேண்டிய நேரத்தில் பெறுவீர்கள். பெண்களுக்கு மனதுக்கு பிடித்தவர்கள் மூலம் நல்ல செய்திகள் கிடைக்கப் பெறும். பெற்றோர்களின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

மீனம்
meenam
மீன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற போராடுவீர்கள். தொழில் மற்றும் வியாபார ரீதியான விஷயங்களை யாரிடமும் கலந்து ஆலோசிக்காமல் முடிவெடுப்பது நல்லதல்ல. உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில மாற்றங்கள் சந்திக்க நேரலாம். பெண்கள் சில புதிய விஷயங்களை கற்றுக் கொண்டு பாராட்டுக்களைப் பெறுவீர்கள். ஆரோக்கியத்தில் எச்சரிக்கை தேவை.