இன்றைய ராசி பலன் – 15-07-2021

Rasi Palan
- Advertisement -

மேஷம்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அனுகூலமான நாளாக இருக்கப் போகின்றது. நீண்ட நாட்களாக எதிர்பார்த்து வந்த நல்ல செய்தி தொலைபேசியின் மூலம் வந்து சேரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தீர்க்கமுடியாத பிரச்சனை ஒன்று இன்றைய தினம் தீர்வுக்கு வரும்.

ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய தினம் கொஞ்சம் அலைச்சலான தினமாக தான் இருக்கப்போகின்றது. வேலை சம்பந்தமாக வெளியிடங்களுக்கு சென்று, அந்த வேலை முடியாமல் கொஞ்சம் சிரமப்படுவீர்கள். இருப்பினும் பெரிய பாதிப்புகள் வராது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

- Advertisement -

மிதுனம்:
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமான தினமாக இருக்கப்போகின்றது. நீங்கள் தொட்ட காரியம் அனைத்தும் வெற்றிதான். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். வியாபாரத்தை விரிவு படுத்தலாம். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும்.

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்த நாளாக இருக்கப்போகின்றது. நீண்ட நாட்களாக சந்திக்காத உறவினர்களை சந்தித்து நேரத்தை கழிக்க போகிறீர்கள். செலவும் கொஞ்சம் கூடுதலாகத் தான் இருக்கும். உடல்நிலையில் அக்கறை கொள்வது நல்லது.

- Advertisement -

சிம்மம்:
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கடினமான நாளாக இருக்கப் போகின்றது. எதைத் தொட்டாலும் இழுபறியாக இருக்கும். இன்றைய நாள் எப்போது கடந்து போகும் என்று சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். உங்களை அறியாத சோம்பேறித்தனம் ஒன்று உங்களிடம் இருக்கப்போகின்றது.

கன்னி:
கன்னி ராசிக்காரர்கள் இன்றைய தினம் அமைதியாக இருக்கவேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். அனாவசியமான வார்த்தைகளை பேசக்கூடாது. வீண்வம்பு விவாதங்களுக்கு செல்லக்கூடாது. பண பரிமாற்றத்தில் கவனம் தேவை.

- Advertisement -

துலாம்:
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் திறமை வெளிப்படும் நாளாக இருக்கப் போகின்றது. உங்களுடைய புத்திக்கூர்மையை பார்த்து சில பேர் ஆச்சரியத்தில் மூழ்கி விடுவார்கள். திறமையான பேச்சும் சுறுசுறுப்பான செயல்பாடும் உங்களை கவுரவிக்கும்.

விருச்சிகம்:
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தைரியமான நாளாக இருக்கப் போகின்றது. மன உறுதியோடு எல்லா விஷயத்திலும் நேர்மையாக நடந்து கொள்ளப் போகிறீர்கள். யாரையும் கண்டு பயந்து அஞ்ச மாட்டீர்கள். வேகமும் விவேகமும் உங்களை வாழ்க்கையில் உயர்த்திச் செல்லும்.

தனுசு:
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் செலவாகும் நாளாக இருக்கப் போகின்றது. பல நாள் சேமிப்பு கரையும். கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கும். இருப்பினும் விரைய நேரம். வேறு எதுவும் செய்ய முடியாது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை இல்லை.

மகரம்:
மகர ராசிக்காரர்களுக்கு நேற்றைய பிரச்சினை இன்று ஒரு முடிவுக்கு வந்துவிடும். எதையோ இழந்தது போல இருந்த உங்களுடைய மனம், இன்று தெளிவுபெறும். எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்பாக செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். பிரச்சினை கிடையாது தைரியமாக இருக்கலாம்.

கும்பம்:
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களின் உதவி கிடைக்கப் போகின்றது. உறவினர்களுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளக்கூடிய சில சம்பவங்கள் நடக்கலாம். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வாழ்க்கையின் எதிரியே உங்கள் முன்கோபமும் தேவையற்ற வார்த்தைகளும் தான்.

மீனம்:
மீன ராசி காரர்களுக்கு இன்று ஓய்வுக்கான நாளாக அமையப்போகின்றது. வேலை செய்தாலும், அலுவலகத்திற்குச் சென்றாலும் சற்று உங்களுக்கு ஓய்வு கிடைக்கும். மன நிம்மதி இருக்கும். பெரியதாக பாதிப்பு எதுவும் வராது. சந்தோஷம் நிறைந்த நாளாகத்தான் அமையும்.

- Advertisement -